காரைக்காலில் ஓலாவின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்

இந்தியாவின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், நாடு முழுவதும் நேரடியாக வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும் என்கிற அதன் விரிவாக்க யுக்தியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அப்பணிகளில் ஒரு பகுதியாக பல்வேறு நகரங்களுடன் சேர்த்து, காரைக்காலில் புதிதாக ஒரு ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை திறந்துள்ளது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த ஈசி சென்னை-நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில், பாரதியார் வீதியில் அமைந்துள்ளது. ஓலா, இந்தியாவில் பெரிதளவில் அதன் நேரடி டச்பாயிண்ட் மையங்களை விரிவாக்கி வருகிறது. ஸ்ரீநகரில் அதன் 500-வது எக்ஸ்பீரியன்ஸ் சென்டரைத் துவங்கி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் விரிவான சேவைகளை வழங்குவதற்காக இந்த ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களை சோதனை ஓட்டம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு இந்த மையங்கள் அனுமதிப்பதோடு, வாகனம் வாங்கும் செயல்முறை முழுவதும் நிபுணர்களின் வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. ஓலா செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் வாங்கும் செயல்பாட்டை முடிப்பதற்கு முன்பாக, கடன் உதவி பெறும் வாய்ப்புகள் பற்றிய விரிவான தகவலையும் பெறலாம். அத்துடன், இம்மையங்கள் ஓலா ஸ்கூட்டர்களின் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், மற்றும் பராமரிப்பிற்கான ஒரே இடமாக இயங்குகின்றன. 2,50,000 வாடிக்கையாளர்களைக் கொண்ட ஓலா நிறுவனம், அதனைப் பயன்படுத்துவோரது சமூகத்திலிருந்து வெறும் 20 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளதால் அவர்களின் அனைத்து விதமான  விருப்ப சேவைகள், மற்றும் தேவைகளுக்கான எளிதாக அணுகலை வழங்குகிறது.

ஓலா நிறுவனம் சமீபத்தில், பல்வேறு விதமான தேவைகளுக்கும் ஏற்ற அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக விரிவுபடுத்தியுள்ளது. இப்போது இதில் மொத்தம் ஆறு மாடல்கள் கிடைக்கின்றன. ஓலா எஸ்1 வரம்பில் உள்ள ஒவ்வொரு ரகத்திலும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற செயல்திறனுடன் சேர்ந்து நேர்த்தியான, மற்றும் மினிமலிஸ்ட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களின் மகத்தான வெற்றியானது ஓலா நிறுவனத்தை ஒரு முன்னணி மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளராக ஆக்கியுள்ளது. மின்சார வாகன சந்தைப் பங்கில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் இந்நிறுவனத்திற்கு  உள்ளன.


Post a Comment

Previous Post Next Post

Contact Form