ஜிப்மர் இன்ஸ்டிடியூட் புதிய சாதனை

 புதுச்சேரியில் அமைந்துள்ள ஒரு முன்னணி அரசு மருத்துவக் கல்லூரி ஆன ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தென்னிந்தியாவில் 1300 ரோபோடிக் உதவி அறுவை சிகிச்சை நடைமுறைகளை செய்து முடித்த முதல் அரசு மருத்துவமனையாக மாறியுள்ளதாக அறிவித்தது. இன்ட்யூடிவ் சர்ஜிக்கல் மூலம் முன்னணி ஆர்ஏஎஸ் தொழில்நுட்பங்களில் ஒன்றான டா வின்சி ஐ நிறுவிய 5 ஆண்டுகளுக்குள் இந்த சாதனையை அவர்கள் அடைந்துள்ளனர். 



ரோபோடிக்-உதவி அறுவை சிகிச்சை என்பது, பல அறுவை சிகிச்சை முறைகளில் திறந்த அறுவை சிகிச்சையை விட மிக வேகமாக நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிற, மிகக் குறைவான துளையிடும் செயல்முறையாகும். சில சிறிய கீறல்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய டா வின்சி அறுவை சிகிச்சை முறையை அறுவை சிகிச்சையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஜிப்மரில் ஆர்ஏஎஸ் நடைமுறைகளை மேற்கொண்ட நோயாளிகளில் ஏறக்குறைய 60 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் 30 சதவிகிதம் பேர் பிற தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த டாவின்சி முறையைப் பயன்படுத்தி ரோபோடிக் அறுவை சிகிச்சையை நடைமுறைப்படுத்த உயர் திறமையுள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 25 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கு உள்ளனர். 

ஜிப்மரில் ஒரே ஒரு ஆர்ஏஎஸ் அலகு மட்டுமே இருந்த போதிலும், மலக்குடல் புற்றுநோய், மேல் இரைப்பை குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய்கள், சிக்கலான குழந்தை அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய்களுடன் தொடர்புடைய சிக்கல்களைப்   போக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் உலகத் தரமான சிகிச்சையை வழங்க முடியும்.

இந்த சாதனை குறித்து ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் லால்குடி நாராயணன் துரைராஜன் கூறுகையில், “ எங்கள் நோயாளிகளின் எண்ணிக்கையில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் குறைந்த வருமானம் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களில் பெரும்பாலோனோருக்கு, நாங்கள்   ரோபோ-உதவி அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த டா வின்சி அறுவைசிகிச்சை அமைப்பு நோயாளிகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி அவர்களுக்கு சிறந்த அறுவை சிகிச்சை விளைவுகளை வழங்குவதில் எங்களுக்கு உதவியுள்ளது. 1300 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான ரோபோ அறுவை சிகிச்சைகள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் மிகவும் மேம்பட்ட மற்றும் மிக உயர்ந்த தரமான பராமரிப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது, மேலும் நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம்."என்று கூறினார்.

இன்ட்யூட்டிவ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் மன்தீப் சிங் குமார் கருத்து தெரிவிக்கையில், “சமூகத்தின் ஒரு   பரந்த அளவிலான பிரிவினருக்கு ரோபோடிக் உதவி அறுவை சிகிச்சையின் பலன்களை உறுதி செய்வதற்காக ஜிப்மருடன் இணைந்து இந்த முன்மாதிரியான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில், நாங்கள் சிலாக்கியம் பெற்றுள்ளோம். ஒரு அரசு மருத்துவமனையில் 1300 ஆர்ஏஎஸ் நடைமுறைகளின் இந்த சாதனையானது, சமீபத்திய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது மற்றும் நோயாளி சமூகத்தின் சிறந்த நலன்களுக்கு சேவை செய்வதன் மூலம் தரமான பராமரிப்பை வழங்குவதில் ஜிப்மர் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காண்பிக்கிறது. 20 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரோபோ-உதவி அறுவை சிகிச்சையில் பயிற்சி பெற்றிருப்பதையும், பல்வேறு அறுவை சிகிச்சை பிரிவுகளில்   ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் செய்யத் தயாராக இருப்பதையும் ஜிப்மர் உறுதி செய்துள்ளது என்பதும் காண்பதற்கு உற்சாகமாக இருக்கிறது ." என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form