சிப்லாவின் ஆஸ்துமா விழிப்புணர்வு பிரசாரம்

 


உலக ஆஸ்துமா விழிப்புணர்வு மாதத்தில் சிப்லா தனது நோயாளிகளுக்கும், பொது மக்களுக்கும், விழிப்புணர்வு முனைவான ‘டஃபீஸ்’ பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளோடு வாழும் குழந்தைகளுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கமாகும். பரவலாகக் காணப்படும் தொற்று அல்லாத ஆஸ்துமா, குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் நாள்பட்ட நோயாகும். இந்தியக் குழந்தைகளில் 7.9% பாதிப்பதுடன், பிறந்த முதல் 6 ஆண்டுகளிலேயே 80% ஆஸ்துமா நோய்க்குறிகளை அனுபவிக்கின்றனர்.

 இந்நோய் பற்றிய கணிசமான விழிப்புணர்வு இல்லாமை, தவறான கருத்துகள், அடிப்படை சிகிச்சை அதாவது மூச்சை உள்ளிழுக்கும் சிகிச்சை தொடர்புடைய கற்பிதங்கள், ஆகியவை காரணமாகத், பெரும்பான்மைத் தருணங்களில் ஆஸ்துமா நோய் பரிசோதிக்கப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத நிலை உருவாகிறது. ஆஸ்துமாவுக்கான முறையான சிகிச்சை இல்லாததால், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையும், பள்ளி நாள்களைத் தவறவிடும் சூழுலும் ஏற்படுகிறது.

ஆஸ்துமா உள்ளிட்ட நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் சிகிச்சை தொடர்புடைய கற்பிதங்கள் மற்றும் களங்களை வெற்றி கொள்ள ‘டஃபீஸ்’ பிரச்சாரம் 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் கவனிப்போர்களை இலக்காகக் கொண்டுள்ளது. காமிக் புத்தகங்களும், விரைவில் வெளியாகவுள்ள சலனக் காணொலிகளும், இப்பிரச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும்.

‘டஃபீஸ்’  பிரச்சாரம் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஏ.என்.கார்த்திக் கூறுகையில், ‘குழந்தைக்கு ஏற்படும் ஆஸ்துமா குழந்தையை மட்டுமின்றி அதன் குடும்பத்தையும் பாதிக்கும். இது நாள்பட்ட நோய் என்பதால், நோய்க்குறிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நீண்ட கால மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்.  உரிய காலத்துக்குள் பரிசோதனைகள் மூலம் நோயைக் கண்டறிந்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். டஃபீஸ் போன்ற பிரச்சாரங்கள் களங்கத்தை எதிர்கொள்ளவும், ஆஸ்துமாவுடன் வாழும் குழந்தைகளுக்கு ஆதரவான சூழலை உருவாக்கவும் உதவும்’ என்றார்.

இந்த பிரச்சாரமானது ‘டஃபீஸ் காமிக் புத்தக’ அறிமுகத்துடன் தொடங்கியது. ஆஸ்துமா காரணமாக குழந்தைகள் முடங்காமல் இருக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும், உருவாக்கப்பட்ட, தொடர்புடைய, இளம், சாகசக் கதாபாத்திரங்கள் டஃபீஸ் குழுவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டும் துவளாமல் சுறுசுறுப்பாக இயங்கும் துப்பறியும் நிபுணனான விக்கி, அவனது சகோதரி மினி, சிறந்த நண்பன் குல்லு, விக்கியின் நம்பகமான சகா பஃபி ஆகியோர் காமிக் புத்தகத்தில் இடம் பெறும் முக்கியக் கதாபாத்திரங்கள். ‘டஃபீஸ் குழு’ புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கதையும் சவால்களைச் சமாளிக்கும் சாகசம், மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் திறனைக் காட்சிப்படுத்தும்.  ‘மூச்சை உள்ளிழுத்து பத்து வரை எண்ணுங்கள், மூச்சை வெளியே விடும்போது சந்தேகத்தையும் வெளியேற்றுங்கள்’ என்னும் தாரக மந்திரத்துடன் பஃபி வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பே முக்கியக் காரணமாக விளங்குகிறது, என்று சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form