டிபிஎஸ் வங்கியின் புதிய முதலீடு தீர்வு அறிமுகம்



டிபிஎஸ் பேங்க் இந்தியா  தனது டிஜிபேங்க் தளத்தில் 'டிஜிபோர்ட்ஃபோலியோ' என்கிற புதுமையான முதலீட்டு தீர்வை அறிவித்துள்ளது. டிஜிபோர்ட்ஃபோலியோ என்பது தொழில்நுட்பம் மற்றும் மனித நிபுணத்துவம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி மார்னிங்ஸ்டார்  நிறுவனம் மூலம் பல்வேறு முதலீட்டாளர்களின் இடர் முன்னுரிமைகளுடன் பொருந்தக்கூடிய முதலீட்டு விருப்பங்களின் தொகுப்பை உருவாக்குகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளின் ஆயத்த தொகுப்புகளில்  பணத்தை முதலீடு செய்ய பயனர்களுக்கு இந்த தளம் எளிதான தீர்வாகும். இந்தியாவில் இந்த வகையான டிஜிட்டல் தீர்வை வழங்கும் முதல் வங்கியாக டிபிஎஸ் பேங்க் இந்தியா உள்ளது.

இதில், முதலீட்டாளர்களின் பல்வேறு இடர் சுயவிவரங்களுக்கு ஏற்ப பல்வேறு முதலீட்டுக் கலவைகள் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய பங்குச் சந்தை முதலீடுகள், கடன் சந்தை மற்றும் பணச் சந்தை ஆவணங்கள் போன்ற பல்வேறு வகையான முதலீட்டு விருப்பங்கள் அடங்கும். டிஜிபோர்ட்ஃபோலியோவின் இயங்குதளமானது குவான்டிஃபீடு நிறுவனத்தால் இயக்கப்படுகிறது மற்றும் தானியங்கி முறையில் சுலபமாக பயன்படுத்தப்படுகிறது.

டிஜிபோர்ட்ஃபோலியோ, முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மற்றும்  ரூ.50,000 முதலீட்டில் தொடங்கும் இரண்டு திட்டங்களுக்கான எளிதில் பெறுவதற்கான வாய்ப்புகளை உடனடியாக வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் மார்னிங்ஸ்டார் நிறுவனம் மூலம் இயக்கப்படும் முதலீட்டுக் கலவை கட்டுமானம், கண்காணிப்பு மற்றும் மறுசீரமைப்பு சேவைகள் போன்ற அம்சங்கள் அடங்கும். 

இந்த வங்கி, முதலீட்டாளர்களுக்கு விஷயங்களை விரைவாகவும், மலிவாகவும், திறமையாகவும் மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துகிறது.  முதலீட்டாளர்கள் தங்களின் இலக்குகள், இடர்பாட்டை சந்திக்கும் திறன் மற்றும் முதலீட்டு காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்களுக்குப் பொருத்தமான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

டிபிஎஸ் பேங்க் இந்தியாவின் நுகர்வோர் வங்கி குழுமம் - நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் பிரசாந்த் ஜோஷி, கூறும் போது, "இந்த வித்தியாசமான சேவையின் மூலம், முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது முதலீட்டு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை சமநிலைப்படுத்த உதவும் அதே வேளையில், செயல்முறையை எளிதாக்குவதும் முதலீடு குறித்த அறிவாற்றல் இடைவெளியைக் குறைப்பதும் எங்கள் நோக்கமாகும். டிஜிபோர்ட்ஃபோலியோவின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களில் பலர் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கேற்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாகும்." என்றார்.

மார்னிங்ஸ்டார் நிறுவனத்தின் டைரக்டர் - போர்ட்ஃபோலியோ ஸ்பெஷலிஸ்ட், தவல் கபாடியா, கூறும் போது,"  டிஜிபோர்ட்ஃபோலியோ, மார்னிங்ஸ்டார் நிறுவனத்தின் நீண்ட கால சொத்து ஒதுக்கீடு பற்றிய ஆராய்ச்சியுடன் தொடங்குகிறது.இந்த அணுகுமுறையானது, உள்நாட்டுப் பங்குகள் மற்றும் நிலையான வருமான  திட்டங்களின் பல்வகைப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்களின்  அடிப்படையிலான முதலீட்டுக் கலவைகளை உருவாக்க பல்வேறு சொத்து பிரிவுகளாக கருதுகிறது.  இது உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும், உங்கள் இடர்பாட்டை சந்திக்கும் திறன மற்றும் முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

குவான்டிஃபீடு நிறுவனத்தின்  தலைமை தொழில்நுட்ப அதிகாரி அண்ட் இணை நிறுவனர் ராஸ் மில்வர்ட், கூறும் போது," டிபிஎஸ் வங்கியுடனான எங்கள் உறவைத் தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தியாவில் அவர்களின் சமீபத்திய புதிய அறிமுகத்தை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  டிஜிபோர்ட்ஃபோலியோ, டிஜிட்டல்  முதலீட்டு செல்வம் உருவாக்குவதில் தொடர்ந்து புரட்சியை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட முதலீட்டு அனுபவத்தை கொண்டு வரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்." என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form