'எச்டிஎப்சி லைஃப் ஸ்மார்ட் பென்ஷன் பிளஸ்' திட்டம் அறிமுகம்இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎப்சி லைஃப், தனது புதிய எச்டிஎப்சி லைஃப் ஸ்மார்ட் பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது வாடிக்கையாளர்கள் ஓய்வுக்குப் பிறகும், சம்பளத்தைப் போலவே ஓர் வழக்கமான மற்றும் உத்தரவாதமான1 வருமானத்தை பெற்று, நிதி சுதந்திரம் அடைய உதவுகிறது. இந்த ஆன்யூட்டி புராடெக்ட் வாடிக்கையாளர்கள் அவர்களின் ஓய்வுக்குப் பிறகும் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ உதவும்.

இந்த புராடெக்ட், ஒருவர் தனக்கு மட்டுமின்றி தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கும் சேர்த்து நன்மைகளை பெறும் வகையில் உள்ளது. அதோடு, பிரீமியம் செலுத்தும் காலம், அதற்கான விருப்பமான கால இடைவெளி, உடனடியாக அல்லது சில ஆண்டுகளுக்குப் பிறகு வருமானத்தை எடுப்பதற்கான தேர்வு ஆகியவற்றையும் வழங்குகிறது.

வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தனித்துவமான லிக்யூடிட்டி ஆப்ஷனுடன் கூடிய ஆன்யூட்டி, பணவீக்கத்தை ஈடுகட்ட சிம்பிள் மற்றும் காம்பவுண்ட் ஆன்யூட்டி அதிகரிப்பு, சொந்த வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்ற பிரீமியத்தை முன்கூட்டியே திரும்புதல் போன்ற பல வகைகளைக் கொண்டுள்ளது. இதில், தனிநபர்கள் தங்கள் தேவைக்கு மிகவும் பொருத்தமான விருப்பத்தைத் தேர்வு செய்து, திட்டத்தைத் தனிப்பயனாக்கலாம். இதன் மூலம், முழு நிதி சுதந்திரத்துடன் அவர்கள் விரும்பும் வகையில் வாழ உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

எச்டிஎப்சி லைஃப் ஸ்மார்ட் பென்ஷன் பிளஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசிகளை விநியோகித்த 24 மணி நேரத்திற்குள் பெறலாம். இந்த திட்டம், ஒரே ஒருமுறை பிரீமியம் (ஒற்றை பிரிமீயம்) செலுத்தியிருந்தாலும் அல்லது வரையறுக்கப்பட்ட கால அளவுக்கு பிரீமியம் செலுத்தியிருந்தாலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான1 வருமானத்தை வழங்கும். 

ஆன்யூட்டி ரேட் குறித்து தொடக்கத்திலேயே உத்தரவாதம் அளிக்கப்படும். எச்டிஎப்சி லைஃப்பின் தற்போதைய வாடிக்கையாளர்கள் மற்றும் எச்டிஎப்சி குழுமத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் அல்லது அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு சிறப்பு கட்டணங்கள் உண்டு. இந்த திட்டம் தனிநபர்களுக்கு, வருமானம் பெறுவதை 15 ஆண்டுகள் வரை ஒத்திவைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. பாலிசி காலத்தின் போது எந்த நேரத்திலும் தற்போதுள்ள ஆன்யூட்டி கொடுப்பனவுகளை டாப்-அப்  மற்றும் சப்ளிமென்ட் செய்வதற்கான ஆப்ஷன்களையும் வழங்குகிறது.

எச்டிஎப்சி லைஃப் நிறுவனத்தின் புராடெக்ட்ஸ் மற்றும் செக்மென்ட்களின் தலைவர் அனீஷ் கண்ணா பேசுகையில், ‘‘எங்களின் இந்த புதிய எச்டிஎப்சி லைஃப் ஸ்மார்ட் பென்ஷன் பிளஸ் திட்டமானது ஒரு தனித்துவமான திட்டம் ஆகும். இது ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையில் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்க முடியும். இந்த பிளான் பல உத்தரவாத வருமான ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் ஓய்வுகால வாழ்க்கைக்கு போதுமான அளவு சேமிக்கவும் உதவுகிறது’’ என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form