நெசவாளர்கள் பாதுகாப்பு குறித்து நிதியமைச்சருக்கு எம்பிகள் கோரிக்கை



அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் பிரதிநிதியான ஆனந்த பாஸ்கர் ரபோலு (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியாவின் ஜவுளி மற்றும் நெசவுத் தொழிலின் முக்கிய பிரமுகர்) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமீபத்திய டிஜிடிஆர் விஸ்கோஸ் ஸ்டேபிள் ஃபைபர்  மீது குவிப்பு தடுப்பு வரி  விதிக்கும் பரிந்துரை நடவடிக்கைக்கு எதிராகப் பேசினர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவனத்திற்குரிய அரசியல்வாதிகள் அடங்கிய மற்றொரு பிரதிநிதி குழு பி.ஆர்.நடராஜன் (தமிழ்நாடு),  மு. சண்முகம் (தமிழ்நாடு),  நீரஜ் சேகர் (உத்தர பிரதேசம்), எஸ். எம்.டி. நதிமுல் ஹக் (மேற்கு வங்கம்), டாக்டர். அமீ யாஜ்னிக் (குஜராத்), ஜோஸ் கே மணி (கேரளா),  கே.ஆர். சுரேஷ் ரெட்டி (தெலுங்கானா), சௌமித்ரகான் (பிஷ்ணுபூர்),  ஜாவேத் அலி கான் (உத்தர பிரதேசம்)  ஜி.கே.வாசன் (தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு, முன்னாள் எம்.பி), மற்றும்  பிரதீப் காந்தி (சத்தீஸ்கர், முன்னாள் எம்.பி.) ஆகியோருடன் ராபோலு இந்திய நெசவு மற்றும் ஜவுளி துறைகளில் ஏடிடி- இன் பாதிப்பை தெளிவுபடுத்தும் தீர்மான கடிதத்தில் கையெழுத்திட்டார். இந்த கடிதம் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கும் அளிக்கப்பட்டது.

ரபோலு உடன் எம்.பி.க்கள், இந்த விஷயத்தின் முக்கியத்துவம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரிவித்னர். எழுப்பப்பட்ட பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்தார்.  பிரதிநிதிகளின் இந்த முயற்சியானது இந்தியாவின் நெசவாளர்கள் மற்றும் ஜவுளித் தொழில்துறைக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்நாட்டு விநியோக தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் இந்தியாவின் விஸ்கோஸ் மதிப்பு தொடர் பற்றாக்குறையை சந்திக்கிறது. இங்கு, பருத்தி விலைகள் அதிகரித்த போது, தரமான மூலப்பொருட்களை ஒப்பீட்டு விலையில் வாங்குவதற்கு, இறக்குமதியானது கீழ்நிலைத் தொழில்துறைக்கு நிவாரணமாக உள்ளது. இருப்பினும், விஸ்கோஸ் ஸ்டேபிள் ஃபைபர்  மீது மீண்டும்-குவிப்பு-தடுப்பு வரி விதிக்கப்படுவதால், இறக்குமதி செய்யப்பட்ட ஃபைபர் 28 சதவிகிதம் அதிகமாக செலவாகும் என்பதால், முழு மதிப்பு தொடரையும் பாதிக்கும். எனவே, ஒப்பீட்டு மற்றும் மலிவு விலையில் உற்பத்தி செய்ய கூடிய தரமான மூலப்பொருட்களை உறுதி செய்ய விஎஸ்எஃப் மீது குவிப்பு தடுப்பு வரியை விதிக்கமால் இருப்பதை உறுதி செய்வதற்கான முதல் படியாகும்.

இதுபற்றி ரபோலு கூறுகையில், “விஸ்கோஸ் என்பது ஏழைகளின் பட்டு, விஸ்கோஸ் உடன் கலந்த பருத்தி தான் எதிர்காலம். இந்திய ஜவுளித் தொழில்துறையின் எதிர்காலத்திற்கு குவிப்பு தடுப்பு வரி தடையாக இருக்கும். தொழில்துறையில் பாதுகாப்பை உறுதிசெய்து, சமதளத்தை வழங்குவது குறித்து நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்த விஷயத்தை நிதியமைச்சரிடம் தெரிவித்துள்ளோம், மேலும் அரசாங்கம் எடுக்கும் முக்கியமான நடவடிக்கைகளைக் காண்போம் என்று நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form