டி2சி ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் அமேசான் இந்தியா



அமேசான் இந்தியா அமேசான் குளோபல் செல்லிங் ப்ரோபெல் ஸ்டார்ட்அப் ஆக்சிலரேட்டர் (ப்ரோபெல் 3) இன் மூன்றாவது சீசனை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ப்ரோபெல் எஸ்3 ஆனது, 50 டி2சி ஸ்டார்ட்அப்கள்  சர்வதேச சந்தைகளில் தங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கும், இந்தியாவில் இருந்து உலகளாவிய பிராண்டுகளை உருவாக்குவதற்கும் ஆதரவளிக்கும். இந்த திட்டமானது ஓராண்டுகளுக்கு ஏடபிள்யுஎஸ் ஆக்டிவேட் கிரெடிட்கள், விளம்பரங்கள் கிரெடிட்கள் மற்றும் கணிப்பியல் மற்றும் கணக்கு மேலாண்மை தொடர்பான ஆதரவைப்  பெறுவதற்கும் , 1.5 மில்லியன் டாலர்கள் அதிகமான மதிப்புள்ள மொத்த வெகுமதிகளை வெல்வதற்கும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.  

முதல் 3 வெற்றியாளர்கள், ஈக்விட்டி இலவச மானியமாக 100கே டாலர்கள் பெறுவார்கள். பங்குபெறும் ஸ்டார்ட்அப்கள், க்ளப் மற்றும் வெலாசிட்டி உள்ளிட்ட வருவாய் -அடிப்படையிலான நிதி நிறுவனங்களுடன் இணைவதற்கு அமேசான் உதவி செய்யும்.இந்த நிகழ்விற்கான விண்ணப்பங்கள் மார்ச் 23 முதல் துவங்கப்பட்டு ஏப்ரல் 23, 2023 அன்று முடிவடையும். இந்த நிகழ்வானது  பங்கேற்பாளர்கள் தங்கள் வணிக முன்மொழிவுகளை முன்னணி விசி நிறுவனங்களுக்கு வழங்கவும், அவர்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான நிதியைப் பெறவும் வாய்ப்பைப் பெறும் டெமோ-டேவுடன் முடிவடையும்.

 ப்ரோபெல் எஸ்3 இன் ஒரு பகுதியாக  அமேசான்,  இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள அமேசான் தலைவர்கள், விசி பங்குதார்கள் மற்றும் மூத்த தொழில்துறை தலைவர்களைக் கொண்ட ஒரு வழிகாட்டல் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவானது, வளர்ந்து வரும் பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்புடைய வள ஆதாரங்கள், 1:1 வழிகாட்டுதல் மற்றும் உலகளாவிய தேவை முறைகள் மற்றும் மின்வணிகத்தின் மூலம் வெற்றிகரமான ஏற்றுமதி வணிகத்தை உருவாக்குவதற்கான நுண்ணறிவு போன்றவற்றில் தேவையான உதவிகளை வழங்கும்.

அமேசான் இந்தியாவின் குளோபல் டிரேட் இயக்குனர் பூபென் வாகங்கர் கூறுகையில், "வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு அவர்களின் வணிகக் கருத்துரை மற்றும் நோக்கங்களை உயிர்ப்பிக்கவும், இந்தியாவில் இருந்து பிரபலமான பிராண்டுகளை உலகளவில் உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக நாங்கள் குளோபல் செல்லிங் ப்ரொபல் ஆக்சிலரேட்டரைத் தொடங்கியுள்ளோம்.  இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 50 ஸ்டார்ட்அப்களை உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்த சீசன் 3 பிரம்மாண்டமான முறையில் விரிவுபடுத்தப்பட்ட பலன்கள் மற்றும் ஆதரவைக் கொடுத்து உதவ முன்வந்துள்ளது. இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து 20 பில்லியன் டாலர் ஈ-காமர்ஸ் ஏற்றுமதியை செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் முக்கிய பகுதியாகும்” என்றார்.

ப்ரோபெல் ஆக்சிலரேட்டர் சீசன் 2 இன் வெற்றியாளர்களில் ஒருவரான ஈகோரைட்-ன் இணை நிறுவனர் உதித்சுத் "எங்கள் சர்வதேச விரிவாக்கத்தைத் திட்டமிடுவதில் கடினமாக இருந்த சில முக்கியமானதாக விசயங்கள் குறித்து  அமேசான் தலைவர்கள் மற்றும் பிற நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாட  இந்தத் திட்டம் எங்களுக்கு உதவியது.  சீசன் 2-ஐ வென்ற பிறகு  உலகளாவிய வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்துள்ள ஆதரவினால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளதுடன் இன்னும்  பிற சந்தைகளிலும் எங்களின் இருப்பை மேம்படுத்த எதிர்நோக்கியுள்ளோம்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form