யுடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் ஸ்கீம் ஆனது, ஒரு திறந்த நிலை ஈக்விட்டி திட்டமாகும். இது முக்கியமாக அந்தந்தத் துறைகளில் போட்டி நன்மையைக் கொண்டிருக்கும் பெரிய காப் நிறுவனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பங்குத் தேர்வுக்கு, நியாயமான விலையில் வளர்ச்சி முதலீட்டு உத்தியைப்பின்பற்றுகிறது. ஒரு நிறுவனத்தின் வருவாயில் உள்ள அடிப்படை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, போர்ட்ஃபோலியோவில் அந்தப் பங்கைப் பெறுவதற்கு நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது இதனுடைய அர்த்தமாக இருக்கிறது.
கட்டுப்படுத்தப்பட்ட கடன்கள், நிலையான வருவாய் வளர்ச்சி, லாபத்தில் கவனம் செலுத்துதல், மூலதனச் செலவை விட மூலதனத்தின் மீதான அதிக வருமானம் மற்றும் நிலையான செயல்பாட்டு பணப்புழக்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றுடன், அடிப்படையில் வலுவான நிறுவனங்களில் முதலீடு செய்வதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய நிறுவனங்கள் எதிர்கால விரிவாக்கத்திற்காக தடையற்ற பணப்புழக்கங்களை உருவாக்கலாம் மற்றும் ஏற்கனவே உள்ள பங்குகளை மதிப்பு குறைப்பு செய்வதை தடுக்கலாம்.
சந்தையானது நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்கும் நிறுவனங்களின் திறனை அல்லது விலை நிர்ணய சக்தியின் நன்மைகளை குறைத்து மதிப்பிடுகிற பட்சத்திலும், சாதகமான தேவை சுழற்சி, ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை தடைகளை நீக்குதல் அல்லது செலவு போட்டித்தன்மை மற்றும் விவேகமான திறன் விரிவாக்கம் போன்ற நிறுவனத்தின் குறிப்பிட்ட காரணிகள் போன்ற தொழில்துறை அளவிலான நிகழ்வுகள் மூலம் வளர்ச்சிப் பாதை மேம்பாடு,வணிகமானது மூலதனம் மிகுந்ததானாலும் நிறுவனங்கள் விவேகத்துடன் முதலீடு செய்து திறமையாகச் செயல்படுவது, மூலதனத்தின் மீதான அதிக வருமான பணப்புழக்கத்தில் மீண்டும் முதலீடு செய்ய வாய்ப்புள்ள நிறுவனங்கள், துறைக்குள் இருக்கும் ஒப்பீட்டு மதிப்பீடு கவர்ச்சிகரமானதாக இருக்கும் பட்சத்தில் இது முதலீட்டாளர்களுக்கு தரமான நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பதன் மூலம் நீண்ட காலச் செல்வத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
யுடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் திட்டம், பெரிய மூலதன நிதி என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், பல முன்னணி நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. முதல் 10 பங்குகள் போர்ட்ஃபோலியோவில் சுமார் 51 சதவிகித பங்கு வகிக்கின்றன. பிப்ரவரி 28, 2023 நிலவரப்படி, இந்த நிதி, 7.60 இலட்சத்திற்கும் அதிகமான நேரடி முதலீட்டாளர் கணக்குகளுடன் ரூ. 10,312 கோடி கார்பஸ் ஐக் கொண்டுள்ளது.
யுடிஐ மாஸ்டர்ஷேர் யூனிட் திட்டம் பிப்ரவரி 28, 2023 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 14.13 சதவிகிதம் நிலையான வரம்பு எஸ்அண்ட்பி பிஎஸ்இ 100 டிஆர்ஐ வருமானத்திற்கு எதிராக 15.32 சதவிகித வருமானத்தை உருவாக்கியுள்ளது. மேலும், முதலீட்டுத் தொகை ரூ. 10 லட்சம் தொடக்க நிதியானது ரூ.11.91 கோடிக்கு நிலையான வரம்பு எஸ்அண்ட்பி பிஎஸ்இ 100 டிஆர்ஐ எதிராக ரூ.17.91 கோடியாக உயர்ந்துள்ளது என யுடிஐ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.