இந்தியாவில் முதன் முதலாக மொபைல் ஆக்சஸரீஸ் மற்றும் ஸ்மார்ட் கேஜெட்களை அறிமுகப்படுத்தும் நோப் நோப் தனது வருகையை நம்பமுடியாத ஒரு தயாரிப்பு போர்ட்ஃபோலியோவுடன் குறிப்பிட்டு காட்டியுள்ளது.  நோப்-இன் முதன்மை நெக்பேண்டுகள், பல்வேறு வகைகளில் கிடைக்கும் வயர்லெஸ் இயர்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுடன் இணைந்த எகோ, நியோ பட்டி  மற்றும் ஷாட்கள் என பெயரிடப்பட்ட டிடபிள்யுஎஸ் இயர்பட்கள் - ' தி பூம்' அண்டு 'பஸ்'  போன்றவை - இளம் அண்ட் துடிப்புமிக்க ஆடியோஃபில் ஆர்வம் கொண்ட மில்லினியல்களை கருத்தில்  கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நோப்-இன் நெக் பேண்டுகள் மற்றும் இயர்பட்கள், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங், கூகுள் அசிஸ்டென்ட் அண்ட் சிரி சப்போர்ட் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டு , டச் கன்ட்ரோல் மற்றும் 13 மிமீ டிரைவர்களுடன் இணைந்துள்ள சிலவற்றைக் குறிப்பிடலாம். நோப் ஆனது ஸ்மார்ட் வாட்ச்கள், யுஎஸ்பி சார்ஜர்களுடன் ஃபிட் பேண்டுகள், யுஎஸ்பி அண்ட் டைப்-சி சார்ஜிங் கேபிள்கள், கார் சார்ஜர்கள், பவர் பேங்க்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான ஸ்மார்ட் கேஜெட்டுகள் மற்றும் மொபைல் ஆக்சஸரீஸ்களையும் கொண்டுள்ளது.

நோப்  விநியோகஸ்தரை மையமாகக் கொண்ட அணுகுமுறையை செயல்படுத்தியிருக்கிறது. 15 பிராண்டு பங்குதாரர்களுடன், 30000க்கும் அதிகமான சில்லறை விற்பனை புள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகலைக் கொண்ட 370க்கும் அதிகமான விநியோகஸ்தர்கள், நோப்- இன் விநியோக நிபுணத்துவம், இலாபகரமான கூட்டாண்மை மாதிரிகள் மற்றும் ஆர்அண்ட்டி மீதான அசைக்க முடியாத கவனம் ஆகியவை பிராண்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். 

பி2பி விநியோக சேனல்கள் முதல் ஆன்லைன் சந்தைகள் வரை ஓம்னிசேனல் நெட்வொர்க்கில் அதன் தரத்தை மையப்படுத்திய அணுகுமுறையின் ஒரு படியாக தங்கள் சொந்த தனியுரிம தளத்துடன் சேர்த்து 360 டிகிரி முக்கியத்துவம் கொடுக்க  இந்த பிராண்ட் உத்தேசித்துள்ளது.

இதுகுறித்து பேசிய பிராண்டின் தலைவரான கேசவ் அரோரா, "எதிர்வரும் காலங்களில் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் தரத்தை மேம்படுத்த நோப் -இன் இடைவிடாத முயற்சிகளுடன் ஸ்மார்ட் கேஜெட்டுகள் மற்றும் மொபைல் துணை சந்தையில் புதுமையின் அடுத்த  அலையை வீசச் செய்ததில்  நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இளைஞர்கள் எங்கள் நிலைப்பாட்டின் முக்கிய மைய இலக்காக உள்ளனர். மேலும் தொழில்துறை வழங்கும் ஸ்மார்ட் மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்தை அனுபவிக்க விரும்பும் எவருக்கும் மற்றும் அனைவருக்கும் முதல் தேர்வாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.  இந்த நிதியாண்டில் ₹300 கோடி வருவாயை எட்டுவதும், அதை அங்கிருந்து அதிகரிக்கச்செய்வதும் எங்கள் இலக்காக உள்ளது. நோப் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1000 கோடி வருமானம் ஈட்டும் பிராண்டாக மாற உத்தேசித்துள்ளது" என்று  கூறினார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form