எச்சிஎல் அறக்கட்டளை தனது முதன்மைத் திட்டமான எச்சிஎல் கிரான்ட் 2023 பதிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்ஜிஓ-க்களை அறிவித்தது. இந்த என்ஜிஓ-க்கள் இந்தியாவில் நிலையான கிராமப்புற வளர்ச்சிக்கான பணியை ஆதரிக்கிறது. ப்ளான்அட்எர்த், இன்னவேட்டர்ஸ் இன் ஹெல்த் (ஐஐஎச்) இந்தியா மற்றும் மேக்ஷாலா ட்ரஸ்ட் ஆகியவை எச்சிஎல் மானியத்தின் கீழ் தங்களின் திட்டங்களுக்காக தலா 5 கோடி ரூபாயைப் (சுமார் 620,000 டாலர்கள்) பெறும். இந்த ஆண்டு வெற்றியாளர்கள் 15,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சமர்ப்பிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர், இது கடந்த ஆண்டை விட 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கூடுதலாக, ஆறு இறுதி என்ஜிஓ போட்டியாளர்களான இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், புனே மற்றும் நார்த் ஈஸ்ட் இனிசியேட்டிவ் டெவலப்மெண்ட் ஏஜென்சி சுற்றுச்சூழல் பிரிவிலும், எம்எஎச்எஎன் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரூரல் டெவலப்மெண்ட் ப்ரோகிராம் ட்ரஸ்ட் கல்வி பிரிவிலும், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்சஸ், குரியா ஸ்வயம் சேவி சன்ஸ்தான் ஆரோக்கியப் பிரிவிலும் தலா 25 லட்சம் (சுமார் 30,000 டாலர்கள்) பெறுகிறார்கள்.
எச்சிஎல் கிராண்ட் நிர்வாகக் கூட்டாளியான கிராண்ட் தோர்ன்டனால் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட ஒரு சிறந்த நடுவர் மன்றத்தால் விண்ணப்பங்களைத் திரையிட்டு மதிப்பாய்வு செய்த பிறகு என்ஜிஓ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் நடுவர் மன்றத்தின் தலைவர், எச்சிஎல் டெக் குழு உறுப்பினர் ராபின் ஆன் ஆப்ராம்ஸ், நெஸ்லே இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், சுரேஷ் நாராயணன், இந்திய பொது நிர்வாகக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் . பி. எஸ். பஸ்வான், ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் அண்ட் கோ நிர்வாக பங்குதாரர் பல்லவி ஷ்ராஃப், சமஸ்கிருத அறிஞர் அண்ட் பிரசிடென்ட் எமரிடஸ், ஃபீல்ட் மியூசியம் (சிகாகோ) டாக்டர் ரிச்சர்ட் லாரிவியர் மற்றும் எச்சிஎல் குழுமத்தின் நிறுவனர் மற்றும் எமிரெடெஸ், எச்சிஎல் டெக் தலைவர் ஷிவ் நாடார் ஆகியோர் ஜூரி மெம்பர்களாக இருந்தனர்.
எச்சிஎல் கிராண்ட் ஜூரியின் தலைவரும், எச்சிஎல் டெக், நிர்வாகக் குழு உறுப்பினருமான ராபின் ஆன் ஆப்ராம்ஸ் கருத்துப்படி, “எச்சிஎல் ஃபவுண்டேஷன் கவனம் செலுத்தும் முக்கிய பகுதிகளான சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றுடன் இந்த அமைப்புகளும் அவற்றின் திட்டங்களும் ஒத்துப்போகின்றன. இவர்களின் பணி, சுகாதாரப் பாதுகாப்பில் சமத்துவமின்மையைக் குறைப்பதன் மூலமும், நன்னீர் பாதுகாப்பில் உதவுவதன் மூலமும், பின்தங்கிய மக்களுக்கு கல்வியை எளிதாகக் கொண்டு செல்வதன் மூலமும் கிராமப்புற சமூகங்களுக்கு ஒரு முக்கியமான உயிர்நாடியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
எச்சிஎல் ஃபவுண்டேஷன் குளோபல் சிஎஸ்ஆர் துணைத் தலைவர் டாக்டர் நிதி புந்திர், "இந்த ஆண்டு தேர்வு செயல்முறைக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எச்சிஎல் கிராண்ட் மூலம் இந்த என்ஜிஓ-க்கள் அவர்களில் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நிலையான கிராமப்புற வளர்ச்சிக்கான அவர்களின் புதுமையான யோசனைகளை அளவிடவும் உதவுகிறது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, கிராமப்புற சமூகங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கச் செய்யும் புதுமையான தீர்வுகளை அளவிடுவதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்றார்