ஸ்கோடாவின் புதிய வாரண்டி பேக்கேஜ் அறிமுகம்

 


விற்பனையில் கடந்த 2022 மிகப் பெரிய ஆண்டாக விளங்கிய நிலையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, முதல் அறிமுகத்துடன் 2023ஐத் தொடங்குகிறது. இது புதிய கார் இல்லை எனினும், அனைத்தும் புத்தம் புதிய, புரட்சிகரமான, உரிமையாளர் அனுபவ மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘எனிடைம் வாரண்டி’ எனப்படும் இச்சேவை 1 ஆண்டு அல்லது 20,000 கிமீ வாரண்டி பேக்கேஜை, ஏற்கனவே உள்ள ஸ்டாண்டர்ட் அல்லது நீட்டிக்கப்பட்ட வாரண்டியை விரிவுபடுத்த, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  வாடிக்கையாளர் திருப்தி, சிக்கலற்ற பராமரிப்பு மற்றும் உரிமை அனுபவம் ஆகியவற்றை வழங்க, வாடிக்கையாளரை மையப்படுத்தும் தயாரிப்பாளர் முனைவின் ஓர் அங்கம் “எனிடைம் வாரண்டி” ஆகும்.

ஏற்கனவே உள்ள ஸ்டாண்டர்ட் மற்றும் எக்ஸ்டெண்டெட் வாரண்டிகளுடன், கூடுதலாக வழங்கப்படும் புத்தம் புதிய எனிடைம் வாரண்டி மூலம், வாடிக்கையாளர்கள் கூடுதல் வாரண்டி பாதுகாப்பை 8 ஆண்டுகள் அல்லது 150,000 கிமீ (ஏது முதலோ) தருகிறது. கோடியாக் (டிடிஐ), சூப்பர்ப், ஆக்டேவியா, யெடி மற்றும் ராபிட் பழைய தலைமுறை வாகனங்களுக்காக 1 ஆண்டு அல்லது 20,000 கிமீ என எனிடைம் வாரண்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

7ஆண்டுகளுக்கு உட்பட்ட மற்றும் 130,000 கிமி குறைவான மைலேஜ் ஓடிய பழைய ஸ்கோடா வாகனம் ஆய்வு மற்றும் தரச் சான்றளிப்புக்குப் பின்னர் எனிடைம் வாரண்டிக்கான தகுதியைப் பெறும். ஸ்டாண்டர்ட், எக்ஸ்டெண்டெட் அல்லது எனிடைம் வாரண்டி ஆகிய மூன்று வாரண்டிகளும் அடுத்த உரிமையாளருக்கு மாற்றம் செய்யத் தக்கவை.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் சோல்க் கூறுகையில் ‘ஸ்கோடா ஆட்டோ இந்தியாவுக்கான முன்னெடுப்பு புதிய கார்கள் அறிமுகம் மட்டுமல்ல என்பதுடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஈடு இணையற்ற உரிமை மற்றும் பராமரிப்பு அனுபவத்தை வழங்கும் புதிய கண்டுபிடிப்புகள் என,  2023 தொடங்கும் போதே சொல்லியிருந்தேன்.  “எனிடைம் வாரண்டி” என்பது வளர்ச்சியை வேகப்படுத்தும் பாதையில், வாடிக்கையாளர் திருப்தி, சிக்கலற்ற உரிமை அனுபவம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வழங்கும் சலுகைகளுள் ஒன்றாகும்’ என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form