மிந்த்ரா அதன் புதிய பிரச்சாரத்தின் விளம்பரம் படங்களை வெளியிட்டது


 ‘ஒவ்வொரு நாளும் அற்புதமாக இருங்கள்’ என்ற மிந்த்ராவின் சமீபத்திய பிரண்டு பிரச்சார முன்மொழிவின் ஒரு பகுதியாக - மிந்த்ராவின் பிராண்டு தூதுவர்களான தமன்னா பாட்டியா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது நடிப்பில் பல்வேறு விளம்பரப் படங்களை இந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இரண்டு விளம்பரப் படங்களில் வரும் தமன்னா பாட்டியா, பெண்களுக்கான மேற்கத்திய  உடைகள் மற்றும் பாரம்பரிய (எத்னிக்) உடைகளை விளம்பரப்படுத்துகிறார். மற்றொரு விளம்பரப் படத்தில் வரும் விஜய் தேவரகொண்டா, ஆண்களுக்கான கேஷுவல் உடைகளை விளம்பரப்படுத்துகிறார். நாடு முழுவதும் மில்லியன்கணக்கான ரசிகர்களைக் கொண்ட இருவரும் மிந்திராவின் ஃபேஷன் முன்மொழிவை தெளிவாக அனைவருக்கும் எடுத்துரைக்கின்றனர்.

ஒரு முழுமையான 360 டிகிரி அணுகுமுறையை செயல்படுத்தியுள்ள மிந்த்ரா - நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையும் நோக்கில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூக தளங்களில் இந்த விளம்பரப் படங்களை ஒளிபரப்பவுள்ளது.

 ஒவ்வொரு நாளும் அற்புதமாக இருங்கள்’ என்கிற இந்த முன்மொழிவு, அதன் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான சர்வதேச மற்றும் உள்நாட்டு பிராண்டுகளின் விரிவான ரகங்களிலிருந்து ஆடைகளைத் தேர்ந்தெடுக்க உதவும் மிந்த்ரா தளத்தின் வாக்குறுதியினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘முன்னணி பிராண்டுகளின் விரிவான ரகங்களின் சமீபத்திய ஸ்டைல்கள் மற்றும் டிரெண்டுகளை அணுகுவதை எளிதாக்குவதன் மூலம், ஒருவரது தினசரி ஆடை உடுத்தும் ஸ்டைல் ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடிகிறது. 

இந்த விளம்பரப்படத்தில் சாதாரண நபர்கள் பிரபலங்கள் போல அசத்தலாக வருவார்கள். பிரபலங்கள் அவர்களது நண்பர்களின் அட்டகாசமான ஃபேஷன் சிந்தனையைக் கண்டு ஆச்சரியப்படுவதாகவும், அதுபோன்ற பிராண்டட் ஃபேஷன் ஆடைகளை அவர்கள் மிந்த்ரா மூலம் பெற்றதையும் இந்த விளம்பரம் காண்பிக்கிறது. அவர்களது ஆடைகளின் ஸ்டைல் அட்டகாசமாக இருக்கிறது என்பதற்கான அங்கீகாரத்தினை பிரபலங்களே வழங்குவதால் மக்கள் மீதும், அவர்களது ஃபேஷன் மீது நேரடியான கவனத்தை இந்த விளம்பரப் படம் உருவாக்குகிறது.

மிந்த்ராவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து உற்சாகமாகப் பேசிய தமன்னா பாட்டியா, “ ஃபேஷன் துறையில் முன்னோடியாக இருக்கும் மிந்த்ரா பிராண்டுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் உற்சாகமளிப்பதாக உள்ளது” என்று கூறினார்.

மிந்த்ராவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய விஜய் தேவரகொண்டா, “ எனது தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கையில் ஃபேஷன் முக்கியப் பங்காற்றுவதால், இந்தியாவின் ஃபேஷன் மதிப்பை உயர்த்துவதற்கான அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் மிந்த்ராவுடன் இணைந்து செயல்படுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த விளம்பரப் படங்களின் வெளியீடு குறித்து பேசிய மிந்த்ரா நிறுவனத்தின், சிஎம்ஒ சுந்தர் பாலசுப்பிரமணியன், “அன்றாட ஃபேஷனுக்கான இடமாக மிந்த்ரா உள்ளது என்பதே இந்த விளம்பரப் பிரச்சாரம் கூறவரும் முக்கிய செய்தியாகும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற  தினசரி ஆடைகளின் ஃபேஷன்களை எளிதாக அணுகும் வகையில் மிந்த்ரா வழங்குகிறது.  பிரபலங்கள் இந்த விளம்பரத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பதால், அவர்களின் ரசிகர்களுடன் எங்களது தொடர்பை வலுப்படுத்திக்கொள்ளவும், அவர்களுக்கான சிறந்த தினசரி ஃபேஷனை வழங்கவும் மிந்த்ராவில் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தனது உற்சாகத்தைப் பகிர்ந்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form