வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்களில் உலகளவில் முன்னணி வகிப்பதுடன், 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக முக்கிய சாதனங்களில் உலகில் நெ.1 நிறுவனமாகவும் விளங்கும் ஹயர், கினௌசி 5 நட்சத்திர ஹெவி-ட்யூடி ப்ரோ குளிர் சாதனம் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. கினௌசி ஏசி வரிசை ஆற்றல்மிகு செயல்பாடு, உச்சக்கட்டக் குளிர்ச்சி, இண்டெலி ஸ்மார்ட் அம்சங்கள், ஹயர் ஸ்மார்ட் செயலி ஆகியவற்றுடன் கட்டுப்படுத்தும் வசதியையும் கொண்டுள்ளது.
ஹயர் கினௌசி ஹெவி ட்யூடி ப்ரோ 5 நட்சத்திர குளிர் சாதனங்கள் ரூ 47,990/- விலை தொடங்கி இந்தியா முழுவதும் அனைத்து ஹயர் மின் வணிகக் கடைகள், ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர சில்லரை அவுட்லெட்களில் கிடைக்கும்.
ஹயர் இந்தியா 99 சதவிகிதம் கிருமிகளை ஒழிக்கும் ஃப்ராஸ்ட் செல்ஃப் க்ளீன் தொழில்நுட்பத்தில் இன்வெர்டர் குளிர் சாதனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஒரு பொத்தானை அழுத்திப் பயனீட்டாளர்கள் முழுமையான இண்டோர் வெட் வாஷ் வசதியைப் பெறலாம். ஃப்ராஸ்ட் செல்ஃப் க்ளீன் இயக்கம் குளிர்சாதனத்தின் ஆவியாக்கக் கலன் மீது பனி படர்ந்து கம்பிச் சுருளிலுள்ள தூசியை ஈர்க்க உதவும். பனி உருகியதுடன் அழுக்கு தண்ணீருடன் கலந்து வடிகால் குழாய் வழியே வெளியேறும். புதிய குளிர்சாதனங்களில் உள்ள சூப்பர்சானிக் அம்சம் அறையை 20 மடங்கு அதி வேகமாகக் குளிர வைக்கும். மேலும் 600 செல்ஷியஸ் தட்ப வெப்பத்திலும் அதிக குளிர்ச்சியையும் தரும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள இசிஓ பொத்தானை அழுத்துவதன் மூலம் குளிர்சாதனத்தின் டன் திறனை 1.6 டன்-இல் இருந்து குறைந்தபட்சம் 0.8 டன்-ஆகக் குறைக்கலாம். இது ஏசி-இல் உள்ள டன் திறனை தேவைக்கேற்பத் தேர்ந்தெடுக்க உதவுவதால், மின் சிக்கனத்தையும், சேமிப்பையும் தரும். ட்ரிப்பிள் இன்வெர்டர் ப்ளஸ் தொழில்நுட்பம் பயனீட்டாளர்களுக்கு 65 சதவிகித மின் சேமிப்பை வழங்கும். ஸ்மார்ட் ஃபோன் அல்லது அலெக்ஸா மற்றும் கூகிள் ஹோம் ஸ்மார்ட் கருவிகள் மூலம் குரல் ஆணை வழியே இயக்கலாம். ஸ்மார்ட் ஹயர் செயலி மூலம் பயனீட்டாளர் தேவைப்படும் 7 நாளுக்கான குளிரூட்டும் அட்டவணையை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். சுத்தப்படுத்துதல் அல்லது ஃபில்டரை மாற்றுதல் மற்றும் தினசரி மின் நுகர்வு ஆகியவை குறித்த நினைவூட்டல்களையும் பெறலாம்.
அறிமுக விழாவில் ஹயர் அப்ளையன்சஸ் இந்தியா தலைவர் என்.எஸ்.சதீஷ் பேசுகையில் ‘அதிக வெப்பத்திலும், உச்சக்கட்டக் குளிர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் கினௌசி 5 நட்சத்திர ஹெவி-ட்யூடி குளிர் சாதனங்களை அறிமுகப்படுத்துகிறோம். அதே தருணம் இதிலுள்ள ட்ரிப்பிள் இன்வர்டர் ப்ளஸ் தொழில்நுட்பம் அதிகபட்ச வசதி, நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டை வழங்குவதுடன் மின் சிக்கனத்துக்கும் வழிவகுத்துச் செலவைக் குறைக்கும். 2023இல் இரட்டை இலக்க வளர்ச்சியை நிச்சயம் எட்டுவோம் எனவும் நம்புகிறோம்’ என்றார்.
ஹயர் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்தின் குளிர்சாதனப் வணிகப் பிரிவு இயக்குனர் ஷஃபி மேத்தா கூறுகையில் ‘கினௌசி 5 நட்சத்திர ஹெவி-ட்யூடி ப்ரோ குளிர்சாதன வரிசை, வசதி மற்றும் மின் சிக்கனத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஸ்மார்ட் கருவியாகும். இண்டெலி ஸ்மார்ட் அம்சங்களுடன் கூடிய சூப்பர் கூலிங்க் அம்சம், கம்ஃப்ர்ட் கண்ட்ரோல் மற்றும் கினௌசி ஏசி வரிசையின் ஹயர் ஸ்மார்ட் செயலி ஆகியவையே வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அடுத்த தொழில்நுட்ப மேம்பாடு ஆகும்’ என்றார்.