ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் #அப்னாகர் பிரச்சாரம் தொடக்கம்

 


ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட்டின் ஹவுசிங் ஃபைனான்ஸ் பிரிவான ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்  தனது #அப்னாகர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் பிரச்சாரமானது வாடிக்கையாளர்களை அவர்களின் 'சப்னோ கா ஆஷியானா'-வை உருவாக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அவர்களின் 'சாஹி சலா, சாஹி சாத்தி, சாஹி ஹவுசிங் லோன் ரக்கம் மூலம் ஒவ்வொரு படிநிலையிலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கிறது.

இந்த கட்டுப்படியாகக் கூடிய மற்றும் முறைசாரா ஹவுசிங் திட்டமானது, பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கனவுகளை நனவாக்க உதவும். இத்திட்டன் மூலம் சரியான ஆலோசனையுடன் அவர்களை வழிநடத்தி ஹோம் லோன் வழங்குவதற்கான ஒரு முக்கிய வாக்குறுதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த சலுகையின் கீழ், வருமானச் சான்றை சமர்ப்பிக்காமல் நுகர்வோர் 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.

போதிய நிதியின்மை, ஆவணங்கள் இல்லாததால் கடன் வழங்குவோரை அணுகும் பயம் மற்றும் பல்வேறு நிதித் தீர்வுகளைப் பற்றிய தகவல் அறியாமை போன்றவற்றால் பொதுவாக தனது கனவுகளை அடக்கிக் கொள்ளும் ஒரு சாமானியனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இப்பிரச்சாரம் இருக்கும்.  ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் அதன் 'சாஹி சலா, சாஹி சாத்தி, சாஹி ஹவுசிங் லோன் ரக்கம்' ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் கட்டுப்படியாகக் கூடிய மற்றும் முறைசாரா வீட்டுக் கடன் தீர்வுகளை பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு காண்பிப்பதே இந்த டிஜிட்டல் பிரச்சாரம் உருவாக்கப்பட நோக்கமாகும். இந்த பிரச்சாரம் ஆதித்ய பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் ஓஓஎச்-இன் சமூக மற்றும் டிஜிட்டல் மீடியா சேனல்கள் முழுவதும் இந்தூர் மற்றும் மதுரை முழுவதும் உள்ள பரந்த பார்வையாளர்களை சென்றடையும்.

பிரச்சாரம் குறித்து, ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட், எம்டி மற்றும் சிஇஓ., பங்கஜ் காட்கில் கூறுகையில், “ #அப்னாகர் பிரச்சாரத்தின் மூலம், பின்தங்கிய பிரிவினரின் மனதை துளைக்கும் சந்தேகங்கள் மற்றும் அச்சங்களை நீக்கி, ஏபிஎச்எஃப்எல் அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கும், அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும், நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் உறுதியளிக்கிறது. வாடிக்கையாளர்கள் வங்கியின் நிதித் திட்டங்களை முழுமையாக நம்பலாம்” எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form