விருது பெற்ற பிராண்டும், புத்தம்புதிய டெக்4.0 தயாரிப்புமான உடல் பிராண்டின் எக்ஸ்8 ஹைட்ரஜன் தண்ணீர் பாட்டில்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உடல் எக்ஸ்8 ஹைட்ரஜன் தண்ணீர் பாட்டில்கள் உற்பத்தி செய்யும் ஹைட்ரஜன் நிறைந்த தண்ணீரில் வயது-முதிர்வுக்கு எதிராக இளமையைப் பேணும் குணநலன்கள் உள்ளன.
அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கத்தான் விரும்புகிறார்கள்; ஆனால், எந்தவொரு நோயும் தன்னை ஒருபோதும் தாக்காது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். நாம் வாழும் உலகில், அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் கதிர்வீச்சு அளவுகள், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகள் ஆகியவற்றால் நம் உடலில் அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல் எனப்படும் நிலையற்ற மூலக்கூறுகளின் உற்பத்தி தூண்டப்படுகின்றன. இதுபோன்ற நிலைமையைத் தொடர்ந்து சமாளிப்பது மனித உடற்திறனின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். காலப்போக்கில், இந்த நிலைமை ‘செல்லுலார் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ எனப்படும் சமநிலையற்ற ஆக்ஸிஜனேற்ற அழுத்த நிலைக்கு வழிவகுக்கும், இது பல நோய்களுக்கு மூலக் காரணமாகவும் அமைகிறது. அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்த நமக்கு வெளியிலிருந்து பெறப்படும் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸின் உதவி தேவைப்படுகிறது. அதை நாம் எப்படிப் பெறுவது?
அதனை வழங்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு தான் எக்ஸ்8. இதன் ஹைட்ரஜன் நிறைந்த தண்ணீரை உட்கொள்வதால், அது ஃப்ரீ ரேடிக்கல்களின் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகளை நடுநிலைப்படுத்துகிறது, மற்றும் நமது உடலின் திறனை மேம்படுத்துகிறது.
எதிர்கால தொழில்நுட்பத்தில் உருவான இந்த எக்ஸ்8 ஹைட்ரஜன் தண்ணீர் பாட்டில்கள் பின்வரும் அற்புதமான பலன்களைத் தருகின்றன:
● சருமத்திற்கு சிறப்பாக ஈரப்பதம் தருகிறது
● வீக்கத்தை நீக்குகிறது
● இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
● உடல் ஆற்றலை மீட்டெடுக்கிறது
● உடலின் இயக்கத் திறனை அதிகரிக்கிறது
● செல்லுலார் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
● மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
● வயது முதிர்வுக்கு எதிராக இளமையைப் பாதுகாக்கிறது
ஒரு நாளைக்கு எச்2 தண்ணீரை உட்கொள்வது என்பது, ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளான (தோராயமாக) 4 பரங்கிக்காய்கள், 750 வாழைப்பழங்கள், 38 கேரட், 45 கீரைகள் மற்றும் 500 ஆப்பிள்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்குச் சமமாகும்!
செரீன் என்விரோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர், சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர், டாக்டர். பாபு சுதாகர் மிகவும் நம்பிக்கையுடன் கூறியதாவது, “ எங்களது எக்ஸ்8 ஹைட்ரஜன் வாட்டர் பாட்டில்கள் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்; இதில் உடல் ஆண்டி-ஆக்ஸிடன்ட்களுடன் சப்-செல்லுலார் நிலையிலிருந்து சமநிலையில் வைக்கப்படுகிறது. கூடுதலாக, இந்தியாவில் ஆரோக்கியத்தினை பேண உதவும் தொழில்கள் ஒரு முழுமையான மாற்றத்தினை சந்தித்துள்ளன; அதிகரித்து வரும் நுகர்வோர் எண்ணிக்கை, குறிப்பாக 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அதிகரித்து வருவதால், அவர்கள் வழக்கமான சிகிச்சை முறையைத் தவிர்த்து சித்தா அல்லது ஆயுர்வேத மாற்று சிகிச்சை வழிகளைத் தேர்வு செய்கிறார்கள். இன்று, உலகளாவிய பெருந்தொற்றுநோயின் ஒரு விளைவாக, இரசாயன அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளிலிருந்து விலகி - ஆரோக்கியமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயற்கையான, பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் பயனுள்ள தீர்வுகளை நோக்கி எங்கள் கவனத்தை மாற்ற முயல்கிறோம். இந்த தயாரிப்பு வயதானவர்களை குறைவான மருத்துவத்தை சார்ந்திருக்கும் வகையில், மேன்மையுடன் வயது முதிர்வை அடைய நிச்சயம் உதவும் என்பது எங்கள் தொலைநோக்குப் பார்வையாகும்" என்றார்
இந்த எக்ஸ்8 தண்ணீர் பாட்டில், எச்2-நிறைந்த தண்ணீரை உற்பத்தி செய்ய, எலக்ட்ரோலிசிஸ் எனப்படும் மின்னாற்பகுப்பு செயல்முறையைப் பயன்படுத்துகிறது. எச்2 தண்ணீருடன் தொடர்புடையதாக இல்லாமல், அதன் தூய மூலக்கூறு வடிவத்தில் உள்ளது; எனவே இது குடிநீரின் சுவை அல்லது நறுமணத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. எக்ஸ்8 தண்ணீர் பாட்டில்களால் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் நிறைந்த தண்ணீரை ஒரு நாளைக்கு குறைந்தது 1.5 லிட்டர் பருகுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.