கண்டெண்ட் கிரியேட்டர்களின் வளர்ச்சிக்கு உதவும் மோஜ்



இந்தியாவின் மிகப் பெரிய குறுங்காணொலி தளமான மோஜ் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. தளத்தின் வளர்ச்சியோடு, கண்டெண்ட் கிரியேட்டர் சமூகமும் கடந்த சில ஆண்டுகளாக மகத்தான வெற்றியையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.


தமிழகத்தில், கோவையைச் சேர்ந்த, சூர்ய பிரகாஷ் மிகக் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் 224.9கே நபர்கள் தளத்தில் பின்தொடரும் வகையில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளார். பொழுதுபோக்குத் துறையில் புதுமுகமாகக் களமிறங்கி இரண்டே ஆண்டுகளில் மோஜ்-இன் முன்னணி கண்டெண்ட் கிரியேட்டர்களுள் ஒருவராக முன்னேறி உள்ளார். தற்போது இவர் வெப் தொடர்களில் நடிகராகவும் தடம் பதித்துள்ளார்.

சூர்யாவுக்கு தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவு.  கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு  நகைச்சுவை மற்றும் உதடு - ஒத்திசைவு காணொலிக்களைத் தயாரித்து மக்களைச் சிரிக்க வைத்துத் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். சினிமா மீதுள்ள தணியாத ஆர்வத்தால் பல்வகையான கேமரா கோணங்களைத் தனது யுஜிசி-இல் அமைத்துக் காண்போரை வியக்க வைத்தார். அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் பின்பற்றவும், ஆதரவு பெருகவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் அவரது பக்கம் டிரெண்டிங்க் டேப் ஆக உருவாகவும் இவையே காரணங்கள்.

சூர்ய பிரகாஷ் கூறுகையில் ‘மோஜ்-இன் அடிப்படை உள்ளடக்கங்களாக நகைச்சுவை மற்றும் உதடு-ஒத்திசைவு காணொலிகளை உருவாக்கத் தொடங்கினேன். எனது திறமை எனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து நடிகனாவதற்கான வழியைத் திறந்துவிட்டது. மோஜ்-இன் விளம்பரப் பிரச்சாரங்கள், இசைக் காணொலிகள் வெளியீடு உள்பட பல வாய்ப்புகள் எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. என் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட இவையே காரணம்.  இதைத் தொடர்ந்து குறும்படங்கள், வலைத் தொடர்கள், ஆல்பம் பாடல்கள் ஆகியவற்றில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனது திறமையை வெளிப்படுத்தவும், வாழ்க்கையில் முன்னேறத் தேவ்சையான நம்பிக்கை கொள்ளவும், தளம் அமைத்துக் கொடுத்த மோஜ்-க்கு மனமார்ந்த நன்றிகள்" என்றார்.

தங்கள் திறனை வெளிப்படுத்தவும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறப் புதிய வாய்ப்புகளை வழங்கி ஆதரவு அளிக்கவும், கண்டெண்ட் கிரியேட்டர்களுக்காகத் தனித்துவமான தளத்தை உருவாக்கி, ஈடு இணையற்ற சமூகத்தையும் அமைத்துக் கொடுக்கிறது மோஜ். திறமையை ஊக்குவிக்கவும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறப் புதிய வாய்ப்புகளை வழங்கவும், மோஜ் தனித்துவமான தளம் அமைத்துள்ளது.  தங்கள் திறமைகளைக் காட்சிப்படுத்தவும், பிரதான ஊடகங்களில் வாய்ப்புகளைப் பெற்று வாகை சூடவும்,  கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கும், ஆர்வமுள்ள நடிகர்களுக்கும், மோஜ் ஃபார் கிரியேட்டர்ஸ் அகாடமி உள்ளிட்ட முனைவுகளை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form