டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தனது உற்பத்தி ஆலையிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒரு கோடி என்ற எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனம் என்ற மைல்கல்லை எட்டும் விதமாக 'டிவிஎஸ் ஜூபிடர்' ஸ்கூட்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த மைல்கல் சாதனையின் மூலம், மொத்த உற்பத்தியில் ஒரு கோடி வாகனங்களை மிக வேகமாக எட்டிய இந்தியாவின் மிக இளைய ஸ்கூட்டர் பிராண்ட் என்ற பெருமையை டிவிஎஸ் ஜூபிடர் பெற்றுள்ளது.
2013-ம் ஆண்டில் 'ஸியாதா கா ஃபாய்தா' என்ற தத்துவத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர், வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் 'கூடுதல்' சிறப்பம்சங்களை வழங்குவதன் மூலம் அன்றாடப் பயண அனுபவத்தை மறுவரையறை செய்யும் நோக்குடன் தனது பயணத்தைத் தொடங்கியது.இன்று கூடுதல் செயல்திறன், கூடுதல் மைலேஜ், கூடுதல் சௌகரியம் மற்றும் கூடுதல் வசதிகளைத் தொடர்ந்து வழங்கி வரும் டிவிஎஸ் ஜூபிடர் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை, லட்சியங்கள் மற்றும் மாறிவரும் பயணத் தேவைகளுக்கு ஏற்ப தனது 'ஸியாதா' என்ற வாக்குறுதியையும் மேம்படுத்தி வருகிறது.
செயல்திறன், மைலேஜ், சௌகரியம் மற்றும் மேம்பட்ட வசதி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், குடும்ப ஸ்கூட்டர் குறித்த எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்தது. இரண்டு ஹெல்மெட்களை வைப்பதற்கான இடவசதி, முன்பக்க எரிபொருள் நிரப்பும் வசதி, இன்ஃபினிட்டி லைட் பார்கள், ஐ-கோ அசிஸ்ட், மெட்டல் மேக்ஸ் பாடி மற்றும் பாடி பேலன்ஸ் தொழில்நுட்பம், டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.அறிமுகமான முதல் ஆண்டிலேயே 5 லட்சம் விற்பனையை மிக வேகமாக எட்டிப்பிடித்த ஸ்கூட்டர் பிராண்ட் என்ற சாதனையைப் படைத்தது. 'ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர்' என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்கூட்டர் பிராண்டாக உருவெடுத்தது.
டிவிஎஸ் ஜூபிடர் 125 (2021): பிராண்டின் 'ஸியாதா' வாக்குறுதியை 125சிசி பிரிவுக்கும் விரிவுபடுத்தி, குடும்பப் பயணத்திற்குக் கூடுதல் இடவசதி, கூடுதல் சௌகரியம் மற்றும் கூடுதல் வசதியை வழங்கியது. அறிமுகமான 6 மாதங்களுக்குள்ளேயே 'அதிக விருதுகளை வென்ற ஆண்டின் சிறந்த ஸ்கூட்டர்' என்ற பெருமையைப் பெற்றது.
தனது முதல் 50 லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை ஒன்பது ஆண்டுகளில் எட்டியது. · அடுத்த 50 லட்சம் வாகனங்களை வெறும் நான்கே ஆண்டுகளில் உற்பத்தி செய்து, இந்தியா முழுவதும் இந்த பிராண்டிற்கு அதிகரித்து வரும் அமோக வரவேற்பை வெளிப்படுத்தியது.
இந்த மைல்கல் சாதனை குறித்துப் பேசிய டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மக்கள் போக்குவரத்துப் பிரிவு, இந்திய இருசக்கர வாகனப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் அனிருத்தா ஹல்தார் "'ஸியாதா' என்ற தனது தத்துவத்தின் மூலம், மாறிவரும் இளம் இந்தியாவின் மற்றும் அதன் வளர்ந்து வரும் லட்சியங்களின் வடிவமாக 'டிவிஎஸ் ஜூபிடர்' முக்கியத்துவம் பெற்ற்றிருக்கிறது. ஒரு கோடி இந்தியர்களின் அன்றாடப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை டிவிஎஸ் ஜூபிடர் கொண்டு சேர்த்துள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் உருவாக்கியுள்ள நம்பிக்கையையும், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள விசுவாசத்தையும் இந்தச் சாதனை வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், எங்கள் ஊழியர்கள், டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கடின உழைப்பையும், எங்களது பொறியியல் நிபுணத்துவம், உற்பத்தி திறன் மற்றும் விநியோகத் திறன்களின் வலிமையையும் இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியா தொடர்ந்து முன்னேறி புதிய உச்சங்களை எட்டும் நிலையில், இன்னும் பல மைல்கல்கள் எங்களுக்காகக் காத்திருக்கின்றன என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் உள்ளேன்," என்றார்.
