பாட்டா இந்தியாவின் இரண்டாம் காலாண்டு வருவாய் 7.5% வளர்ச்சி


இந்தியாவின் மிகவும் நம்பகமான காலணி பிராண்டான பாட்டா இந்தியாஅ, செப்டம்பர் 30, 2026-உடன் முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்தது. நிறுவனம் ₹8,618 மில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது 26ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ₹8,013 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 7.5 சதவிதத்துக்கும் அதிகமான வளர்ச்சியாகும். வரிக்குப் பிந்தைய லாபம் ₹180 மில்லியன் ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டின் ₹138 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 31 சதவிதத்துக்கும் அதிகமான வளர்ச்சியாகும்.

இந்தக் காலாண்டின் ஒருமுறைச் செலவுகளில், தொடர்ந்த நாணய மதிப்புச் சரிவால் உரிமக் கட்டணத்தில் ஏற்பட்ட ₹30 மில்லியன் ரொக்கமில்லாத அந்நியச் செலாவணி இழப்பும், ஒருமுறை சொத்து தள்ளுபடிக்கான ₹39 மில்லியனும் அடங்கும். இந்தக் காலாண்டில் ₹3,213 மில்லியன் உபரி நிதி சிறப்பு ஈவுத்தொகையாக வழங்கப்பட்டதால், பிற வருமானம் ₹46 மில்லியன் குறைந்தது.

முடிவுகள் குறித்து,  பாட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் எஸ். ராவ் கூறுகையில், “காலாண்டு அடிப்படையில், தொடர்ந்து நான்காவது காலாண்டாக வளர்ச்சி வேகம் நீடித்தது. 27ஆம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் வருவாயில் 7.5 சதவித வளர்ச்சி, ரீடெய்ல் பிரிவில் வலுவான எல்எஃப்எல் மற்றும் ஏஎஸ்பி வளர்ச்சி, ஃபிரான்சைஸ் மற்றும் ஐஅண்ட்டி சேனல்களில் இரட்டை இலக்க வளர்ச்சி ஆகியவை பதிவாகியுள்ளன" என்றார்.

மேலும் கூறுகையில், “மொத்த லாப வரம்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் மேம்பட்டுள்ளன. சரக்கு இருப்பில் 92 சதவிதம் புதிய சரக்குகளாக உள்ளதுடன், நிகர இருப்பு கடந்த ஆண்டைவிட 7 சதவிதம் குறைந்துள்ளது. தற்போது 2,000-க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் மற்றும் 3,800-க்கும் மேற்பட்ட கேஆர்ஓ-க்கள் செயல்பட்டு வருகின்றன. 850 ஸ்டோர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜீரோ பேஸ் மெர்கண்டைசிங் வாடிக்கையாளர் அனுபவத்தையும் சதுர அடிக்கான வருவாயையும் மேம்படுத்தியுள்ளது. மூலப்பொருள் மற்றும் ஊதியச் செலவுகள் அதிகரித்தபோதிலும், முழு விலை விற்பனை அதிகரித்து, தள்ளுபடிகள் குறைந்துள்ளன. பண்டிகைக் கால வணிகம் மூன்றாம் காலாண்டுக்கு மாறியுள்ளதால், வளர்ச்சி வேகம் தொடரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form