அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் தயாரிக்கும் ஆன்செல் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை பெருந்துறையில் திறக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் உலக அளவில் முன்னணியில் உள்ள 'ஆன்செல்' நிறுவனம், பெருந்துறையில் தனது புதிய உற்பத்தி ஆலை ஒன்றை இன்று திறந்துள்ளது. இந்த ஆலை ஏற்கனவே உள்ளூர் சந்தைக்கான உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. வரும் மாதங்களில், ஆன்செல் நிறுவனத்தின் முக்கிய வெளிநாட்டு சந்தைகளுக்கு உதவும் வகையில் இதன் உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.
அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக ஆன்செல் நிறுவனம் சிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது. பெருந்துறையில் செய்யப்பட்டுள்ள இந்த முதலீடு, எங்கள் தொழிலின் நீண்டகால வளர்ச்சிக்கான ஒரு முன்னேற்றமாக இருக்கம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆன்செல் நிறுவனத்தின் தலைமை மருத்துவ வணிக அதிகாரி ஜெனிபர் ராஸ்-மர்பி கூறுகையில், எங்களின் இந்த ஆலை முழு வீச்சில் செயல்படத் தொடங்கும் போது, அறுவை சிகிச்சை கையுறைகளுக்கான உற்பத்தி அதிகரிக்கும். இதன் மூலம், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற எங்கள் முக்கிய சந்தைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்க முடியும் என்று கூறினார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மற்றும் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை பெருமளவு மறுசுழற்சி செய்யும் அமைப்பு ஆகியவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன. உலகளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆன்செல் நிறுவனத்தின் பொறுப்புணர்வையே இது காட்டுகிறது.
இந்தியாவில் அமைந்துள்ள இந்தப் புதிய உற்பத்தி ஆலை, உயர்தரமான அறுவை சிகிச்சை கையுறைகளை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளைப் பாதுகாக்கும் ஆன்செல் நிறுவனத்தின் முக்கிய நோக்கத்திற்கு இது உதவுகிறது. மேலும், மருத்துவத்துறையில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை மீதான நிறுவனத்தின் அக்கறையையும் இது காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.jpeg)