மர பர்னிச்சர்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் கைவினை கலைஞர்களை போற்றி கவுரவிக்கும் விதமாக இரண்டாவது ஆண்டாக தேசிய தச்சர் தினத்தை நாட்டின் முன்னணி ‘என்ஜினியர்டு உட்’ மர பர்னிச்சர்கள் உற்பத்தி நிறுவனமான ஆக்ஷன் டெசா, வெகு விமர்சையாக கொண்டாடியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தேசிய தச்சர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 'மெகா கூட்டங்கள்' நடத்தப்பட்டன. அங்கு ஆயிரக்கணக்கான தச்சர்கள் தங்கள் துறை சார்ந்த பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டதோடு ஏராளமான பேர் பங்கேற்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் துவக்கி வைத்து அவர்களின் திறமையை வெகுவாக பாராட்டி கவுரவித்தார்.
முதல் வருட வெற்றியை தொடர்ந்து, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் இணைந்து துவக்கப்பட்ட 3 மாத திறன் மேம்பாட்டு பயிற்சியில் மரப் பலகை செயலாக்க நுட்பங்கள் குறித்து 30 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பையும் அளித்துள்ளது. படிப்பை முடித்தவுடன் ஒவ்வொரு மாணவருக்கும் உடனடியாக வேலை வழங்கப்பட்டது, இது உயர்தர பயிற்சி மற்றும் திட்டத்தின் வலுவான தொழில்துறை பொருத்தத்திற்கு சான்றாகும். ஆக்ஷன் டெசாவால் முழுமையாக நிதி உதவி அளிக்கப்பட்ட மரப் பலகை செயலாக்க நுட்பங்கள் பயிற்சியானது, புதிய தொழில்கள் மற்றும் வளமான எதிர்காலத்திற்கான தொடக்க தளமாக மாறி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆக்ஷன் டெசா நிர்வாக இயக்குனர் அஜய் அகர்வால் பேசுகையில், மர தளபாட சந்தையின் முதுகெலும்பாக தச்சர்கள் உள்ளனர், ஏனெனில் அவர்களின் கைகள் ஒவ்வொரு கனவுக்கும் வடிவம் கொடுக்கின்றன. டெசா சலாம் மற்றும் மர பலகை செயலாக்க நுட்பங்கள் பயிற்சி போன்ற முயற்சிகள் மூலம், இன்று அவர்களை கவுரவிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் இன்று அமைத்து தருகிறோம். இது வெறும் ஆரம்பம் மட்டுமே, மேலும் வரும் காலங்களில் தச்சர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இன்னும் பெரிய வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
தேசிய தச்சர் தினத்தில், ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலகங்களை அழகாக வடிவமைக்கும் தச்சர்களை போற்றி கவுரவிக்கும் வகையில் ஆக்ஷன் டெசா இந்த நிகழ்ச்சியை நடத்தியது. புதுமை, சுற்றுச்சூழல் பாதிப்பின்மை மற்றும் சிறந்த தரத்திற்கு பெயர் பெற்ற ஆக்ஷன் டெசா, கட்டிடக் கலைஞர்கள், உள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் தளபாடங்கள் உற்பத்தியாளர்களுக்கு நம்பகமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.