ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்டு ரீடெய்ல் லிமிடெட் இன் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ரீடெய்லர்-களில் ஒன்றான பாண்டலூன்ஸ், அதன் ஃபெஸ்டீவ் எடிட் கலெக்ஷனை, பாலிவுட் ஸ்டைல் ஐகான் ரியா கபூர் சுய வெளிப்பாடு மற்றும் நவீன ஸ்டைலைக் கொண்டாடும் பலவித, ஃபெஸ்டீவ்-ரெடி தோற்றத்தை தேர்தெடுப்பதுடன் அறிமுகப்படுத்தியது. பாண்டலூன்ஸின் புதிய ரீடெயில் அடையாளமான, இன்றைய நுகர்வோருக்கான ஷாப்பிங் அனுபவத்தை மறுவரையறை செய்கின்ற ஒரு துடிப்பான, ஃபேஷன்-ஃபர்ஸ்ட் இலக்கிடமான காட்கோபரில் அமைந்துள்ள ஆர் சிட்டி மாலில் உள்ள இந்த பிராண்டின் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்டோரில் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது. மேலும், ரியா கபூர், ஸ்டோரில் ஒரு பிரத்யேக ஸ்டைலிங் மாஸ்டர்கிளாஸ்-ஐயும் நிகழ்த்தினார்.
ரியா கபூரின் பிரத்யேக ஸ்டைலிங் அமர்வானது, இவ்வெளியீட்டின் சிறப்பம்சமாக மாறியது; இதில் அவர் பாண்டலூன்ஸின் தொகுப்பிலிருந்து பலவித, வெகு நேர்த்தியான தோற்றத்தை உருவாக்குவதற்கான தனது முத்திரை அணுகுமுறையைப் பகிர்ந்து கொண்டார். தனது துணிச்சலான மற்றும் சிறந்த ஸ்டைலை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற ரியா, நேர்த்தியான வேலைப்பாடுடைய உடைகள் முதல் பண்டிகைக்காலத்திற்கான மற்றும் கேஷுவல் ஆடைகள் வரை ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற கலவையான மற்றும் பொருத்தமானவை குறித்து விருந்தினர்களுக்கு வழிகாட்டினார்.
இந்த ஃபெஸ்டீவ் எடிட்-ஆனது, பருவகாலத்தின் பல கொண்டாட்டங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சமகால மற்றும் பாரம்பரிய ஸ்டைல்களின் பலவித கலவையை ஒன்றிணைக்கிறது. பகட்டான ஜுவல் டோன்கள் மற்றும் ஆடம்பரமான இழைநயம் முதல் நவீன நிழல் உருவங்கள் மற்றும் குறும்புத்தனமான லேயர் விருப்பத்தேர்வுகள் வரை, இத்தொகுப்பனது, ஒரு குடும்ப ஒன்றுகூடல், ஒரு பண்டிகைக்கால மாலை உல்லாச சுற்று அல்லது ஒயிலான உடைகள் ஆகிய எதுவாயினும் ஒவ்வொரு மனநிலையையும் பூர்த்தி செய்கிறது. பரந்த அளவிலான ஆடைகள், அணிகலன்கள் மற்றும் ஃபெஸ்டீவ்-ரெடி ஆடைகளுடன், பாண்டலூன்ஸ் இந்த சீசனை ஸ்டைலாகக் கொண்டாடுவதை எளிதாக்குகிறது.
பாண்டலூன்ஸ் மற்றும் ஓடபிள்யுஎன்டியின் தலைமை நிர்வாக அதிகாரி சங்கீதா தன்வானி கூறுகையில், இந்த ஸ்டோரின் துவக்கம் பற்றி பேசுகையில், "எங்கள் ஆர் சிட்டி மால் ஸ்டோரின் மறுதுவக்கமானது, பான்டலூன்ஸின் ஃபேஷன்-ஃபர்ஸ்ட் தத்துவத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கும் ஒரு புத்தம்புதிய, மேம்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. நவீன காலத்திற்கேற்ற வடிவமைப்பு மற்றும் துடிப்பான சூழல் ஆகியவை எங்கள் வாடிக்கையாளர்கள் ஸ்டைலுடன் ஆய்ந்து பரிசோதிக்க சிறந்த கேன்வாஸை உருவாக்குகின்றன. ஒரு பிரத்யேக ஸ்டைலிங் மாஸ்டர்கிளாஸ்-க்காக, ரியா கபூருடன் கூட்டிணைவது ஒரு இயல்பான தேர்வாகும். அவரது துணிச்சலான, ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கும் உணர்வு ஆகியவை எங்கள் புதிய ஸ்டோரின் ஆற்றலை முழுமையாகப் பூர்த்தி செய்கிறது மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களை நம்பிக்கையுடன் வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது." என்றார்.
சுமார் 30000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள, புதுப்பிக்கப்பட்ட இந்த பாண்டலூன்ஸ் ஸ்டோர்-ஆனது, முற்றிலும் ஒரு 'ஃபேஷன் தலமாக' வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் வெள்ளை நிறத்தில், நவீன உட்புறங்களானவை, பாண்டலூன்ஸின் பல்வேறு கலெக்ஷன்களை ஆராய்வதற்கான ஒரு புத்தம்புதிய, நவீன ஆடைகளை வழங்குவதன் மூலம், ஃபேஷன் கண்டுபிடிப்பை எளிதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்குகிறது. இப்புதிய அடையாளமனது, ஒரு தடையற்ற, வெளிக்காட்டுகின்ற மற்றும் இனிய ஷாப்பிங் பயணத்தை உருவாக்குவதற்கான பாண்டலூன்ஸின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ட்ரெண்ட்கள், தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இடம் இதுவாகும்.
புதிய பெஸ்டிவ் எடிட் தொகுப்பு இப்போது கோயம்புத்தூரிலுள்ள பாண்டலூன்ஸ் கடைகளில் கிடைக்கிறது.
.jpg)