டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் சோல்ஜர் பதிப்பை அறிமுகப்படுத்திய டிவிஎஸ் மோட்டார்



இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மார்வெல் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஸ்குவாட் வாகன வரிசையில் டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் சோல்ஜர் பதிப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த சிறப்பு பதிப்பு, டிவிஎஸ் எண்டார்க் சூப்பர் ஸ்குவார் சீரிஸ்க்கு கம்பீரத்தையும், சாகச உணர்வையும் அளிக்கும் வகையில் தோற்றத்தில் மெருகேற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற மார்வெலின் சூப்பர் ஹீரோக்களை, டிவிஎஸ் என்டார்க் சூப்பர் ஸ்குவாட் வாகன வரிசையில் இடம்பெற செய்திருக்கிறது.

மார்வெல் உடனான வெற்றிகரமான கூட்டு முயற்சியை  மேலும் சிறப்பானதாக உருவாக்கும் வகையில், டிவிஎஸ் என்டார்க்-கின் அட்டகாசமான பயணத்தில்  மார்வெலின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சி, சூப்பர் சோல்ஜர் பதிப்பின்அறிமுகத்துடன் தொடர்கிறது. சாகச ப்ரியர்களின் விருப்பத்திற்குரிய சூப்பர் ஹீரோவான கேப்டன் அமெரிக்காவின் கம்பீரம் புதிய டிவிஎஸ் என்டார்க் 125ஐ தனித்துவமிக்கதாக மாற்றியிருக்கிறது. இந்தப் பதிப்பு,  நவீன தலைமுறையான ஜென் - இசட் வாகன ப்ரியர்களை கவரும் வகையில், காமோப்ளாஜ் வடிவமைப்பில்  ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125, இந்தியாவில் புளூடூத்-இணைக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அபாரமான செயல்திறன், கண்களைக் கவர்ந்திழுக்கும் ஸ்போர்ட்டி ஸ்டைலிங் மற்றும் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அசத்தலான தொழில்நுட்ப அம்சங்களுக்கு பெயர் பெற்ற இருசக்கர வாகனமாக ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. டிவிஎஸ் என்டார்க்  சூப்பர் ஸ்குவாட் வாகன வரிசையின் ஒரு பகுதியாக 2020-ல் கேப்டன் அமெரிக்கா பதிப்பு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பதிப்பு நாடு முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்களின் கற்பனையை நிஜமாக்கியது.  இப்போது தோற்றப் பொலிவுடனும், செயல்திறன் மேம்பாட்டு அம்சங்களுடனும் புதுப்பிக்கப்பட்டிருக்கும் சூப்பர் ஸ்குவாட் பதிப்பில் ஸ்கூட்டரின் ஸ்போர்ட்டி தோற்றம், அசத்தலான செயல்திறனை உணர்த்தும் வகையில் கண்களைக் கவரும் வகையிலான கிராபிக்ஸ் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் சோல்ஜர் பதிப்பின் விலை ரூ. 98,117/- (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும். இந்த மாதம் முதல் அனைத்து டிவிஎஸ் மோட்டார் நிறுவன டீலர்ஷிப்களிலும் கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form