ஓபோ இந்தியா நிறுவனம் ரெனோ14 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஒவ்வொரு அம்சத்திலும் செயல்திறன், சக்தி, துல்லியம் ஆகியவற்றைக் கோரும் பயனர்களுக்கு முழுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது. ரெனோ 14 மற்றும் ரெனோ 14 ப்ரோ உடன், ஓபோ பயனர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு படம் பிடிக்கிறார்கள், எடிட் செய்கிறார்கள், பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை நிலைமாற்றுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் இழப்பற்ற 3.5எக்ஸ் அப்டிக்கல் ஜூம் மற்றும் 120 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை மேம்பட்ட ஏஐ எடிட்டிங் கருவிகள், நீர் - எதிர்ப்பு நீடித்துழைக்கும் தன்மை ஆகியவற்றை ஒவ்வொரு வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு சக்திவாய்ந்த ஆல் - ரவுண்டராக ஒருங்கிணைக்கின்றன.
அதே நேரத்தில், ரெனோ 14 சீரிஸ் அதன் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான ஏஐ இமேஜிங் மற்றும் ஆக்கத்திறன் அம்சங்களை பேக் செய்வதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிச் செல்கிறது. ரெனோ14 சீரிஸை பணத்திற்கு உண்மையான மதிப்பாக மாற்றுகிறது. இதன் விலை ரூ.34,200**-இல் தொடங்குகிறது, வாடிக்கையாளர்கள் முதல் விற்பனை காலத்தில் அதன் உண்மையான விலைக்கே பெறலாம்.
ஓபோ கார்னிங் கொரில்ல க்ளாஸ் 7ஐ மற்றும் ஐபி66. ஐபி68, ஐபி69 தர மதிப்பீடுகளுடன் நீடித்தத்தன்மையை மேம்படுத்துகிறது, தூசி, நீரில் மூழ்குதல், 80 டிகிரி செல்சியஸ் வரை உயர் அழுத்த சூடான நீர் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
ஸ்பாஞ்ச் பயோனிக் கசனிங் டிசைன் கடல் ஸ்பாஞ்சுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதிர்ச்சிகளை உறிஞ்சி, கீழே விழும்போது மிகுந்த பாதுகாப்பை வழங்குகிறது.
இச்சாதனங்கள் ஒளிரும், பல அடுக்கு ஒளிரும் பினிஷுடன் வருகிறது ரெனோ 14 ப்ரோவானது ஆனது பியர்ல் ஒயிட் உடன் வெல்வெட் க்ளாஸ் மற்றும் டைட்டானியம் கிரே நிறத்தில் பிரதிபலிப்பு மேட் பினிஷுடன் வருகிறது. ரெனோ 14 போன், பியர்ல் வொயிட் மற்றும் ஃபாரஸ்ட் க்ரீன் நிறத்தில் ஒளிரும் லூப் டெகோவுடன் வருகிறது.
இரண்டு மாடல்களிலும் கையுறைக்கு ஏற்ற, அல்ட்ரா - ஸ்லிம் - பெசல் 120 எச் இசட் எல்டிபிஎஸ் அமோல்ட் டிஸ்ப்ளேக்கள் உள்ளன, அவை 1200 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை வழங்குகின்றன.
ரெனோ 14 ப்ரோ 6.83 இஞ்ச் நெகிழ்வான அமோல்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ரெனோ 14 சற்று சிறிய 6.59-இஞ்ச் ஸ்கிரீனை வழங்குகிறது - இரண்டும் 1.5கே ரெசுலுஷன் மற்றும் 93 சதவீதத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்க்கு பாடி விகிதத்துடன் உள்ளது. அவற்றின் உயர்ந்த உருவாக்கத் தரமும் உறுதியான வடிவமைப்பும் இருந்தபோதிலும், இரண்டு மாடல்களும் இலகுரகத்துடன் மெலிதானவை.
ரெனோ 14 சீரிஸ், படைப்பாளிகள், ஆய்வாளர்கள், கதைசொல்லுவோர் ஆகியோருக்காக வடிவமைக்கப்பட்ட ஓபோவின் மிகவும் மேம்பட்ட கேமரா அமைப்பை முதல் முறையாக ரெனோ 14, ரெனோ 14ப்ரோ ஆகிய இரண்டிலும் 3.5 எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் உடன் கொண்டு வருகிறது. 50 எம்பி ஹைப்பர்டோன் கேமரா அமைப்பு, நினைவுச்சின்னங்கள் முதல் தெருக்காட்சிகள் வரை எந்த அமைப்பிலும் தெளிவான பட முடிவுகளுக்காக, உருவப்படம்-சரியான குவிய நீளத்துடன் ஆப்டிகல் ஜூமை வழங்குகிறது.
பயனர்கள் ஏஐ இயங்கும் ஹைப்ரிட் ஜூமைப் பயன்படுத்தி 120 எக்ஸ் வரை ஜூம் செய்யலாம், தொலைதூர நிலப்பரப்புகள், தெளிவற்ற நினைவுச்சின்னங்கள் அல்லது அரிய வனவிலங்குகளின் நுணுக்கங்களைப் படம் பிடிக்கலாம்.
ரெனோ 14 80வாட் சூப்பர்வோக் வேகமான சார்ஜிங்குடன் வலுவான 6000எம்ஏஎச் , 5 ஆண்டு நீடித்தத் தன்மையுள்ள பேட்டரியைக் கொண்டுள்ளது. ரெனோ 14 ப்ரோ 50வாட் ஏர்வோக் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 6200எம்ஏஎச், 5 ஆண்டு நீடித்தத் தன்மையுள்ள பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 10 நிமிட விரைவான ரீசார்ஜ் 13.2 மணிநேர போன் அழைப்பு, 14 மணிநேர ஸ்போர்ட்டிபை அல்லது 7 மணிநேர யூடியுப்ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. முழு வயர்டு சார்ஜ் வெறும் 47 நிமிடங்களில் நிறைவடைகிறது.
ரெனோ 14 சீரிசுடன் கூடுதலாக, ஒபோ இந்தியா, ஓபோ பேட் எஸ்இ-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய 9,340எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட 33வாட் சூப்பர்வோக் வேகமான சார்ஜிங்குடன் தனிச்சிறப்பு வாய்ந்த நீடித்தத்தன்மையை வழங்குகிறது. 11 மணிநேரம் வரை தொடர்ச்சியான வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது. 11-இஞ்ச் எல்சிடி ஐகேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது மற்றும் 500 நிட்ஸ் வரை பிரகாச நிலைகளைக் கொண்டுள்ளது. ஜூலை 12 அன்று நள்ளிரவு 12 மணி முதல் பிளிப்கார்ட், ஓபோ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபோ பிராண்ட் ஸ்டோர்களில் ரூ.13,999 (4ஜிபி+128ஜிபி வைபை), ரூ.15,999 (6ஜிபி+128ஜிபி எல்டிஇ) மற்றும் ரூ.16,999 (8ஜிபி+128ஜிபி எல்டிஇ) விலையில் கிடைக்கிறது.