அரசு சொன்ன அளவில் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு நம் வீட்டின் சமையலறைகளில் இருக்கிறது. இதைத் தாண்டியும் அயோடின் உப்புக்கு பல அம்சங்கள் உள்ளன. அயோடின் உப்பு என்பது நமது சாப்பாட்டின் ருசியை மட்டும் அதிகரிப்பதாக இல்லாமல் நமது ஆரோக்கியத்தையும் பலவழிகளில் மேம்படுத்துகிறது. உலகளாவிய அயோடின் சேர்ப்பு திட்டத்தின் அடிப்படையில் சமையல் உப்பில் அயோடின் சேர்ப்பது வழக்கமாகிவிட்டது. இது அயோடின் குறைபாட்டால் ஏற்படும் சீர்குலைவைத் தடுப்பதற்கு உதவுகிறது. பல ஆண்டுகளாக உலகளவில் பொது ஆரோக்கிய நலன் தொடர்பில் அயோடின் குறைபாட்டு சீர்குலைவு மற்றும் அதன் மோசமான பின்விளைவுகளைக் குறைக்க பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அயோடின் குறைபாட்டு சீர்குலைவைத் தீர்ப்பதில் இந்தியா பெரியளவில் சாதித்துள்ளது. இந்தியாவின் அயோடி சர்வே 2018-2019 -ன் அடிப்படையில் 76.3% வீடுகளில் அயோடின் உப்பு போதுமான அளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் 15 பிபிஎம் அயோடினை உப்பின் மூலம் உட்கொள்கின்றனர். ஆனால் இந்த ஆய்வு முடிவுகளின் வழியாக அயோடின் உப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அயோடின் கலந்த உப்பின் ஆரோக்கிய பலன்கள் பற்றி 22.4% பேர்தான் சரியான தெளிவைக் கொண்டுள்ளனர். உப்பில் சரியான அளவு அயோடினைச் சேர்த்துக் கொள்வது முன்கழுத்து கழலை நோயைத் தடுக்குமென்று 61.4% பேர்தான் அறிந்து வைத்துள்ளனர்.
அதனால் தினசரி வாழ்க்கையில் உப்பில் அயோடின் சேர்ப்பதை புரிந்துகொள்வது மட்டுமில்லாமல் அதனால் என்னென்ன பயன்கள் என்பது குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்குவது அவசியமாகவுள்ளது.
அயோடின் குறைபாட்டு சீர்குலைவை தடுப்பதற்கு உதவுகிறது
அயோடின் குறைபாட்டு சீர்குலைவை தடுப்பதில் அயோடின் மிக முக்கியமான விளைவை உண்டாக்குகிறது. அத்துடன் அயோடின் மூளை வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மருத்துவ ஆய்வுக்கான இந்திய கவுன்சில் மற்றும் என்ஐஎன் இரண்டு அமைப்புகளும் சேர்த்து ஒரு நாளைக்கு 140 மைக்ரோகிராம் அயோடினை உப்புடன் எடுத்துக்கொள்ள பெரியவர்களுக்குப் பரிந்துரைக்கிறது. குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்துள்ள அளவு 90 முதல் 100 மைக்ரோகிராம்கள். கர்ப்பவதிகள் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு 220 முதல் 280 மைக்ரோகிராம்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு உதவுகிறது
அயோடின் குறைபாட்டு சீர்குலைவால் ஏற்படும் மோசமான பின்விளைவு கர்ப்ப காலத்திலும் குழந்தைப் பருவத்திலும் ஏற்படும் கோளாறுகளாகும். மூளை மற்றும் அறிதிறன் வளர்ச்சியைப் பாதிக்கும் கோளாறுகள் அவை. அயோடின் குறைபாட்டால் குறைப்பிரசவமும் ஹைப்போதைராடிசம் எனச் சொல்லப்படும் நிலையும் ஏற்படலாம். அதனாலேயே அயோடினை கர்ப்பகாலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை தேசிய அளவிலான வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது
குழந்தையின் மூளை ஆரோக்கியமாக வளர்வதற்கு அயோடின் குறிப்பாக அவசியமானது. குறிப்பாக கருப்பையில் சிசுவாக வளர்வதற்கும் பிறந்தபிறகு முதல் சில ஆண்டுகளுக்கும் அயோடின் தேவை. தைராய்டு ஹார்மோன் தயாரிப்பு இயல்பான அளவில் குழந்தையின் முதல் 1000 நாட்களுக்கு இருத்தல் அவசியம். குழந்தை கருவில் உருவாவது தொடங்கி இரண்டாவது பிறந்த நாள் வரைக்கும் அயோடின் உட்கொள்வது குறையாமல் இருக்க வேண்டியது முக்கியமாகும். சமீபத்திய ஆய்வுகள் குழந்தையின் 5 வயது வரை அயோடினைத் தவிர்க்க கூடாத வயது என்று தெரிவிக்கின்றன. தைராய்டு ஹார்மோன் மூளை செல்கள் உருவாவதற்கும் நரம்புத் தொடர்புகள் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. நரம்பிழைகளுக்கு அரணாகவும் அயோடின் இருக்கின்றன. அயோடின் குறைபாடு குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளில் ஏற்பட்டால் அது மூளை வளர்ச்சியையும் அறிதிறன் குறைபாட்டையும் ஏற்படுத்தும்.
ஒரு நபரின் பொதுவான ஆரோக்கியத்துக்குப் பங்களிப்பு
மூளை ஆரோக்கியம் மற்றும் தைராய்டு வளர்சிதை மாற்றத்துக்கு அயோடின் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் ஒரு மனிதனின் பொதுவான ஆரோக்கியம் மேம்படுகிறது. அயோடின் உட்கொள்வது குறையும்போது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி பாதிக்கிறது. இதனால் வளர்சிதை மாற்றத்தில் வேகமின்மை ஏற்படுகிறது. அறிதிறன் சார்ந்த வளர்சிதை மாற்றம் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த போதுமான அயோடினை உட்கொள்வது அவசியம். இதனால் பொதுவான ஆரோக்கியம் மேம்படுகிறது.
டாடா சால்ட் 1983-ம் ஆண்டு அறிமுகமானது. ஒரு காலத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த பொது சுகாதார சவாலான அயோடின் குறைபாடு கோளாறு (IDD) க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் டாடா சால்ட் அறிமுகமானதில் இருந்து முக்கிய பங்கு வகித்துள்ளது. டாடா சால்ட், இந்தியாவின் முதல் தேசிய பிராண்டட் அயோடின் கலந்த உப்பாக, அயோடின் கலந்த உப்பின் தரத்திற்கான வரையறையை நிர்ணயித்ததோடு நாடு முழுவதும் உள்ள இல்லங்களில் அயோடின் கலந்த உப்பை எளிதில் பெறக்கூடியதாக மாற்றியது.
பல ஆண்டுகளாக, இது நம்பிக்கை மற்றும் நல்வாழ்வின் அடையாளமாக மாறியுள்ளது. லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களின் அன்றாட வாழ்வில் ஆழ்ந்த உறவாக இணைந்துள்ளது. அயோடின் கலந்த உப்பு ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம், நாட்டின் ஊட்டச்சத்து தேவைகளை ஆதரிப்பதில் டாடா சால்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் டாடா சால்ட் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான முயற்சிகள், இந்தியாவை உறுதியாக இருக்க செய்வதோடு, துகள் உப்பாக தனித்துவம் பெற்றிருக்கிறது.