அலன் கரியர் இன்ஸ்டிடியூட் சார்பில் சோபான் எனப்படும் பாராட்டு விழா

அலன் கரியர் இன்ஸ்டிடியூட் பிரைவேட் லிமிடெட் பயிற்சி மையம் சார்பில் சோபான் எனப்படும் பாராட்டு விழா நிகழ்வு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. சோபான் என்பது, ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களை பாராட்டும் அலனின் விழா ஆகும். இதில் ஒலிம்பியாட்கள், ஐஐடி, ஜேஇஇ மற்றும் நீட் (யுஜி) போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள பாராட்டி கவுரவிக்கப்படுவார்கள். சென்னையில் நடந்த சோபன் பாராட்டு விழா இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. 

இந்த ஆண்டு, சோபான் விழாவில் 6,500 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சென்னை ஆவடி காவல்துறை ஆணையர் கே.சங்கர், ஐஐடி, என்ஐடிமற்றும் ஒலிம்பியாட்களில் தகுதியான மாணவர்களை பாராட்டினார். மோகன் டயாபெடிஸ் ஸ்பெஷாலிடீஸ் சென்டர் மற்றும் மெட்ராஸ் டயாபெடிஸ் ரிசர்ச் பவுண்டேஷனின் தலைவர், பத்மஸ்ரீ டாக்டர் வி.மோகன் மாலை நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும், மிதிலேஷ் குமார், துணை காவல் ஆய்வாளர், சிஐஎஸ்எப் தெற்கு மண்டலம், தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாட்களில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். லோனல் டபன் சிங், ஓடிஏ சென்னை, அலனின் உள்ளக தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களை பாராட்டினார். 

எஸ்.வி.கிரண், சிஇஓ, அப்பல்லோ ஹெல்த் ரிசோர்ஸஸ் லிமிடெட் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை பாராட்டினார். குரூப் கேப்டன் சஞ்சய் தேசாய், தாம்பரம் விமானப்படை மையம்,பொறியியல் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை பாராட்டி பேசினார். சனய் சிங் மீனா, துணை காவல் ஆய்வாளர், தாம்பரம், 2026 நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை பாராட்டினார். தினேஷ் ஜி, இயக்குனர், ஜெயா பிரியா பள்ளி குழுமம்,விழாவில் மாணவர்களை பாராட்டினார். அவர் கூறுகையில், என் பள்ளிகள் அலனின் பயிற்சி திட்டத்தில் உள்ளன, எனக்கு சென்னை மாணவர்களிடம் மிகுந்த நம்பிக்கையுண்டு, என்றார். 

நிகழ்ச்சியில், அலன் தெற்கு மையங்களின் துணைத்தலைவர், மகேஷ் யாதவ் பேசுகையில், இந்த ஆண்டு, அலன் சென்னை மாணவர்கள் நாடு முழுவதும் ஐஐடிகளில் மட்டுமல்ல, ஜிப்மர், எம்ஸ், ஐஐடி, என்ஐடிஆகிய நிறுவனங்களிலும் இடம் பெற்றுள்ளனர். இது புதிய ஒரு வழிகாட்டும் சாதனையாகும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். 

அலன் தமிழ்நாடு மையத்தின் தலைவர் சந்தோஷ் சிங் பேசுகையில், மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களின் கடின உழைப்பிற்கும் நான் சாட்சி. கல்வியில் சிறந்த முறையில் வெற்றி பெற மாணவர்களை ஆசீர்வதித்த சரஸ்வதி தேவிக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன், என்றார். 

 அலன் தமிழ்நாடு வணிகத் தலைவர், மோடலி வெங்கட் ஹரி கிஷன் பேசுகையில், 2026 ஆம் ஆண்டில், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, மற்றும் திருநெல்வேலியில் அலன் தனது புதிய மையங்களை திறக்கவுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களுக்கு ஒரு நம்பகமான தளத்தை வழங்கும் உறுதிப்பாட்டுடன் இதை முன்னேற்றுகிறோம். இந்த ஆண்டு அலன் சென்னையில், 10,600 மாணவர்கள் அலனைத் தங்களின் மென்டராக தேர்வு செய்துள்ளனர். இந்த முயற்சிக்கு 21,200 பெற்றோர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form