ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவியான ‘கைலாக்’ வாகனத்தை இந்தியாவிலும் உலகிலும் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் புதிய சந்தைகளில் நுழைந்து புதிய வாடிக்கையாளர்களை ஸ்கோடா ஆட்டோவுக்காக கைகாக் ஈர்த்து புதிய சகாப்தத்தில் தடம் பதிக்கிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த எஸ்யூவியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதை மேலும் விரிவுபடுத்துவதற்கான தனது லட்சியங்களை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டு அக்டோபரில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா கைலாக்கின் உருமறைக்கப்பட்ட முன் தயாரிப்பு பதிப்பின் இயக்கங்களை நடத்தியது. ஒரு மாதத்திற்குப் பிறகு, கைலாக் இப்போது உலகளவில் அறிமுகமாகி உள்ளது. 2 டிசம்பர் 2024 தொடங்கி முன்பதிவுகள் ஆரம்பமாகும்.
இது குறித்து ஸ்கோடா ஆட்டோ சிஇஓ க்ளாஸ் ஜெல்மர் கூறுகையில் ‘ஸ்கோடா கைலாக் எங்கள் முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவி ஆகும். இது இந்தியாவில், இந்தியாவிற்க்காக எங்கள் பிராண்டின் புதிய நுழைவுப் புள்ளியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா விளங்குவதால், எங்கள் சர்வதேசமயமாக்கல் திட்டங்களுக்கு இந்தியா முக்கியமானது, புதிய வாகன விற்பனையில் எஸ்யூவிகள் பங்களிப்பு 50% ஆகும். இந்த பிரபலமான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவைப் பார்க்கும் புதிய வாடிக்கையாளர்கள், கைலாக் வாகனத்தை வரவேற்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். கைலாக்கின் எழிலான தோற்றத்துடன், புதிய காட்சி உச்சரிப்புகளும் இணைந்து, நவீன திட வடிவமைப்பு மொழியாக இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது பரந்த அளவிலான மாறுபாடுகள், வண்ணங்கள், அம்சங்கள் மற்றும் 25 க்கும் மேற்பட்ட ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் நிலையான தொகுப்புகளுடன் காண்போரைச் சுண்டி இழுக்கிறது. கடுமையான போட்டி நிலவும்சூழலில் நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ.7,89,000 மூலம் கைலாக் வாகனம் இந்தியாவில் மிகவும் அணுகக்கூடிய ஸ்கோடா மாடலாகும்.
தி கைலாக்
தி ஸ்கோடா ‘கைலாக்’ என இந்தியா பெயரிட்டுள்ளது. ஸ்படிகத்தைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டுள்ளது மற்றும் கைலாச மலையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் எஸ்யூவி வரிசையில் உள்ள பெரிய வாகனமான ‘குஷாக’ என்ற பெயரும், பேரரசர் என்பதற்கான சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டுள்ளது. பெரிய 4x4 கோடியாக் மற்றும் நடுத்தர அளவிலான குஷாக் போன்ற எஸ்யூவிகளின் பட்டியலில் கைலாக் சேர்கிறது. ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளுக்கான காற்றோட்டத்துடன் கூடிய ஆறு வழி மின்சார இருக்கைகள் எனக் கைலாக் ஒரு சில பிரிவு-முதல்களைக் கொண்டுள்ளது. கைலாக்கில் உள்ள பூட் அதன் பிரிவில் 446 லிட்டர் கொள்ளவுடன் சிறந்து விளங்குகிறது. மின்சாரத்தால் சரிசெய்யக்கூடிய முன் இருக்கைகளுக்கான காற்றோட்டத்துடன், ஆட்டோ க்ளைமாட்ரோனிக் அம்சமும் இதில் உள்ளது. மின்சார சன்ரூஃப் வசதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளும் கிடைக்கின்றன.
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியாவின் மேலாண் இயக்குநர் & சிஇஓ பியூஷ் அரோரா கூறுகையில், ‘எங்களது இந்தியப் பயணத்தில் இன்று மற்றொரு முக்கியமான மைல்கல்லாக ஸ்கோடா கைலாக்கின் உலக பிரீமியர் அரங்கேறுகிறது. 2024 ஆம் ஆண்டு முழுவதும் கைலாக் மிகப் பெரிய உற்சாகத்தையும் சலசலப்பையும் உருவாக்கியுள்ளது. ஸ்கோடா கைலாக்கை இந்தியாவிற்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். அதன் உயர்மட்ட உள்ளூர்மயமாக்கல், ஒப்பிடமுடியாத ஓட்டுநர் இயக்கவியல் மற்றும் சமரசமற்ற பாதுகாப்பு அம்சங்களுடன், கைலாக் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பீட்ர் ஜெனெபா பேசுகையில், "கைலாக் உண்மையில் களத்தில் இறங்கியுள்ளது, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் எங்கள் வளர்ச்சிக்கு ஆதார சக்தியாக விளங்கப் போகிறது. இது இந்தியாவில் எங்களது புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். தற்போது இந்தியாவில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பிரிவில் நாங்கள் நுழைகிறோம் என்பதை அறிவோம். கைலாக் வாகனம் அதன் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் இயக்கவியலுடன் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் நம்புகிறோம். இருக்கைக் காற்றோட்டத்துடன் கூடிய சரி செய்யத்தக்க சிக்ஸ்-வே முன் மின்சார இருக்கை மற்றும் 446 லிட்டர் பூட் ஸ்பேஸ் போன்ற சில பிரிவு முன்னணி அம்சங்களை கைலாக் கொண்டுள்ளது. குஷாக் மற்றும் ஸ்லாவியாவைத் தொடர்ந்து இந்தியாவை மையமாகக் கொண்ட எங்கள் தயாரிப்பு வரிசையுடன் கைலாக் வாகனமும் இணைகிறது. புதிய சந்தைகளில் நுழைந்து புதிய வாடிக்கையாளர்களை ஸ்கோடா குடும்பத்திற்குள் கொண்டு வருவதற்கான எங்கள் இலக்கை மேலும் அதிகரிக்கும். அனைவரும் அணுகக் கூடிய வகையில் கைலாக் விலை நிர்ணயம் குறித்த எங்கள் வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக இருப்பதுடன், இந்தியாவில் ஐரோப்பிய தொழில்நுட்பம் பாவலாக்கப்படுவதையும் எதிர்பார்க்கிறோம். இது ஒரு சிறிய கார், ஆனால், எதிர்பார்ப்பை விடவும் பெரியது. இதன் காரணமாகவே, முன்னெப்போதும் இல்லாத வகையில், மோஷன் பிக்சர் மூலம் இதன் பிரிமியரை அரங்கேற்றி உள்ளோம்’ "என்றார்.
செயல்திறன் மற்றும் பாதுகாப்புடன் கூடிய சக்தி
மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் 10.5 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். இந்த எஸ்யூவியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 188 கிமீ ஆகும். இதன் 1.0 டிஎஸ்ஐ எஞ்சின் 85 கிலோவாட் பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த மின் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் பேடில் ஷிஃப்டர்களுடன் ஆறு வேக மேனுவல் அல்லது ஆறு வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்றே எம்க்யூபி-எஓ-ஐஎன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது.