ஸ்கோடா ஆட்டோ இந்தியா, உயர் மதிப்பில் குஷாக் மற்றும் ஸ்லேவியா கார்களை அறிவித்துள்ளது. குஷாக் மற்றும் ஸ்லேவியா கார்கள் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் ஆகிய பெயர்களில் முன்பு கிடைத்தன. இவற்றுக்கு இப்போது கிளாசிக், சிக்னேசர் மற்றும் பிரஸ்டிஜ் எனப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த மூன்று வேரியண்ட்களுடன் கூடுதலாகக், குஷாக் காருக்கு, மதிப்பு ரீதியாக ஓனிக்ஸ், பிரிமியம் ரீதியாக மாண்டே கார்லோ கிடைக்கும்.
புத்தம் புதிய விலை, குஷாக் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லேவியா கார்களின் எல்லா எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன்களுக்கும் பொருந்தும். இரு கார்களுமே 1.0 டிஎஸ்ஐ பெட்ரோல் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மற்றும் 1.5 டிஎஸ்ஐ பெட்ரோல் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் & செவன் ஸ்பீட் டிஎஸ்ஜி ஆற்றலில் இயங்குகின்றன. விலை இப்போது ரூ 10.69 லட்சம் முதல் தொடங்குகிறது.
குஷாக் மற்றும் ஸ்லேவியா கார்களில் ஆறு ஏர்பேக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு அம்சங்களில் பிராண்டின் சமரசமற்ற தன்மையையே பிரதிபலிக்கிறது. மாடல், வேரியண்ட், எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளைப் பொருத்து அதன் மீது 10 சதவிதம் வரை வாடிக்கையாளர்களுக்குப் பலன் கிடைக்கும். அதிகபட்ச பலன் குஷாக் மாண்டே கார்லோவுக்கு ஈடு இணையற்ற விலைப் புள்ளியில் கிடைக்கும். இந்தப் புதிய விலைகள் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் வாகனப் பதிவு மற்றும் காப்பீட்டில் கூடுதல் கழிவுகளைப் பெறுவதால் மதிப்பு முன்மொழிவு இன்னும் விரிவடையும்.
புதிய விலை தொடர்ந்து பாதுகாப்புக்கு முன்னுரிமை தருவதுடன், வெண்டிலேடெட் சீட், எலெக்ட்ரிக் சீட் அட்ஜஸ்ட், வயர்லெஸ் ஆண்ட்ராயிட் ஆட்டோ, ஆபிள் கார்ப்ளே, 25.4 செமீ இன்-கார் பொழுதுபோக்கு இண்டர்ஃபேஸ், பூட்டில் உள்ளீடு செய்யப்பட்ட சப் ஊஃபர் உள்ளிட்ட பிரிமியம் அம்சங்களும், வசதிகளும் உண்டு. குஷாக் மற்றும் ஸ்லேவியா மீதான புதிய மதிப்பு முன்மொழிவு வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்கும். பரிமாற்றம் மற்றும் கார்பொரேட் போனஸ் விருப்பங்கள், வங்கிக் கூட்டாளிகள் மூலம் நடத்தப்படும் சிறப்பு நிதி மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் பல்வகைச் சேவைகள் மற்றும் பராமரிப்புத் தொகுப்புகள் ஆகியவற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மேம்பாடு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில் ‘கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கிறோம். சந்தைக்கான எங்கள் அர்ப்பணிப்பு முழுமையானது. தயாரிக்கும் பொருள் மற்றும் தொடர்பான செயல்பாடுகளில் கூடுதலாக எப்போதும் வழங்கி வருகிறோம். 2025இல் அறிமுகப்படுத்தவிருக்கும் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி தொடர்பான அறிவிப்பு வெளியான நாள் தொடங்கி, இந்தப் புதிய காருடன், புதிய சந்தைகள், இளம் வாடிக்கையாளர்கள், பிராண்டுக்கான கூடுதல் அணுக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். புதிய காம்பேக்ட் எஸ்யூவி எங்களுக்குப் புதிய சந்தைகளைத் திறந்துவிடும். குஷாக் மற்றும் ஸ்லேவியா கார்களில் சில மேம்பாடுகளைச் செயல்படுத்தி உள்ளதால், அவற்றின் விழுமியங்களை அதிகரித்துப், பலனை வாடிக்கையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்குகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்பத் தனிப்பயனாக்கப்பட்ட, தனித்துவமான வாடிக்கையாளர் சலுகைகளுடன், நாடு முழுவதும் குஷாக் மீது மிகச் சிறந்த மதிப்பு முன்மொழிவை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்’என்றார்.