போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான டீல்கள் அறிவிப்பு



இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டுகளில் ஒன்றான போக்கோ, மே 1 முதல் மே 10, 2024 வரை ஈ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் பிரத்தியேகமாக நடைபெறும் மே விற்பனையின்போது, அதிகளவில் விற்பனையாகும் தனது ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்புச் சலுகைகளை அறிவிக்கிறது. இந்த விற்பனை கொண்டாட்டத்தின்போது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான புராடக்ட்டுகளை ஆச்சர்யமூட்டும் சலுகைகளுடன் முன்பு எப்போதும் இல்லாத விலையில் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

மீடியா டெக் டைமென்சிட்டி 8300 அல்ட்ரா எஸ்ஒசி மூலம் இயக்கப்படும் போக்கோ எக்ஸ்6 ப்ரோ மொபைல் ரூ. 22,999 ஆகும். 5000மிமீ விசி கூலிங் சிஸ்டம், வைல்டுபூஸ்ட் 2.0, 6.67-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 64எம்பி ஒஐஎஸ் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் அம்சங்களுடன் வருகிறது. ரூ.17,999 என்ற தொடக்க விலையைக் கொண்ட போக்கோ எக்ஸ்6 அதன் 6.67இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மூலம் 1.5கே தெளிவுத்திறனுடன் கூர்மையான மற்றும் துடிப்பான காட்சிகளை வழங்குவதை உறுதிசெய்கிறது. மற்றும் வெறும் ரூ 20,000 க்கு கீழ் இத்தகைய அம்சங்களை வழங்கும் ஒரே மொபைல் சாதனம் இதுவே ஆகும்.

போக்கோ எக்ஸ்6 நியோ  மெலிதான வடிவமைப்பின் உச்சகட்ட வரம்பைப் பிரதிபலிக்கிறது. மேலும் இதன் ஆரம்ப விலை வெறும் ரூ.13,999 மட்டுமே. இது அதிவேக வீடியோ ஸ்ட்ரீமிங், கேமிங் அனுபவம், 108எம்பி டூயல் ஏஐ கேமரா மற்றும் 16எம்பி செல்ஃபி கேமரா, மீடியா டெக் டைமன்சிட்டி 6080 பிராசசர் அம்சங்களைக் கொண்டுள்ளது. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஆனது க்வால்காம் ஸ்நாப்டிராகம் 4 ஜென் 2 மூலம் 4என்எம் செயலாக்கத்தில் இயக்கப்படுகிறது மற்றும் ரூ. 8,999 விலைக்குக் கிடைக்கிறது. ஐபி53 ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ஸ் அம்சங்கள் கார்னிங் கொரில்லா பாதுப்புடன் மொபைலுக்கான நீடித்த உழைப்பை உறுதிசெய்கின்றன.

தடையில்லா திறன்மிகு செயல்திறனை வழங்குவதற்காக, போக்கோ எம்6 5ஜி மொபைல் ரூ. 7,749 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த நுழைவு-நிலை 5ஜி ஸ்மார்ட்போன் ஏராளமான அம்சங்களால் நிரப்பப்பட்டுள்ளது மற்றும் 5G ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு சிறந்த பிராண்டாக போக்கோ நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நுகர்வோருக்கு புதுமையான, நம்பகமான மற்றும் விலை குறைவான சாதனத்தை வழங்குகிறது.

 போக்கோ சி65 ஆனது 4+128ஜிபி, 6+128ஜிபி மற்றும் 8+256ஜிபி ஆகியவற்றுடன்கூடிய வலுவான சேமிப்பக விருப்பங்களை வழங்குகிறது. இது ரூ. 6,799 விலையில் கிடைக்கும். போக்கோ சி61 மொபைலானது கிளாஸ் பேக் டிசைன் மற்றும் விரைவேக பக்க கைரேகை சென்சார் கொண்ட பிரீமியம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் இதன் விலை ரூ. 6,499 ஆகும். இது 6.71 இன்ச் டாட் ட்ராப் எச்டி+ டிஸ்ப்ளே, 90Hz ரெஃபெஷ் ரேட், 5000எம்ஏஎச் பேட்டரி, டூயல் கேமரா அமைப்பு மற்றும் மீடியா டெக் ஜி36 சிப்செட் அம்சங்களுடன் வருகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form