மோட்டோவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்இந்தியாவின் தலை சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா,   ஃபிரான்சைஸ் விரிவாக்கத்தின்   சமீபத்திய சேர்க்கையான அதன்  புதிய பிரீமியம் ஸ்மார்ட்ஃபோன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ-வை  உலகிலேயே முதல் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.  மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன் பான்டோன் வடிவமைப்புடன் சிலிக்கான் வேகன் லெதர்   ஃபினிஷ் இல் லக்ஸி லாவெண்டார் மற்றும் ப்ளாக் பியூட்டி மற்றும் அசிடேட் ஃபினிஷில் மூன் லைட் பேர்ல் ஆகிய அற்புதமான மனதைக் கவரும்  மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் 9 ஏப்ரல் 2024 பிற்பகல் 12 மணி முதல்  ஃப்ளிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வரும். 

8ஜிபி ரேம் +256ஜிபி ரூ. 31,999க்கும்,12ஜிபி ரேம்+ 256ஜிபி  ரூ. 35,999க்கும் கிடைக்கும். நுகர்வோர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சிறப்பு அறிமுகச் சலுகையாக  ரூ. 2,000 தள்ளுபடியை கூடுதலாகப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் மதிப்பில் மேலும் கூடுதலாக ரூ. 2,000  தள்ளுபடி  மூலம் தொடக்க விலை மேலும் குறைவாக ரூ . 29,999 மற்றும் ரூ  33,999 க்கு வாங்கலாம். எச்டிஎஃப்சி வங்கி அட்டைகளுக்கு ரூ.2,250 வரை தள்ளுபடி வழங்கப்படும்.

பான்டோன்ஆல் உறுதி செய்யப்பட்ட இயற்கை வண்ணங்களை காட்சிப்படுத்தும் உலகின் முதல் முதலான  ஏஐ இயக்க  ப்ரோ-கிரேடு கேமரா பொருத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ, அன்றாட மகிழ்ச்சிகரமான தருணங்களை நினைவோடைகளாக அழகாக படம்பிடிக்கும்  மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. பான்டோன் ஸ்கின் டோன்உறுதிப்பாடு, மனித சரும நிறங்களின் ஒரு  பரந்த நிறமாலைக் கற்றையை  பிரதிநிதித்துவப்படுத்தும்  முடிவுகளை காட்சிப்படுத்தப்படுவதை எட்ஜ் 50 கேமரா உறுதி செய்கிறது  புதிய ஏஐ ஃபோட்டோ என்ஹான்ஸ்மென்ட் எஞ்சின் ஒவ்வொரு ஷாட்  புகைப்படங்களையும் எந்த ஒரு  சிரமமுமின்றி துல்லியமாக  எடுப்பதற்கு உதவுகிறது.  படம் பிடிக்கப்படும்போது அசைவுகளின் இயக்க வேகத்தை தீர்மானிக்க ஏஐ அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன்-ஐ பயன்படுத்துகிறது. 

காட்சிகள்  ஃப்ரேம் வழியாக நகர்ந்து செல்லும் சந்தர்ப்பங்களிலும் ஏஐ-ஐப பயன்படுத்தி துல்லியமான தெளிவான வீடியோ காட்சிகளை வழங்கும் இன்டெல்லிஜெண்ட்  ஆட்டோ ஃபோகஸ் டிராக்கிங் அமைப்புடன் வருகிறது. ஜெனரேட்டிவ் ஏஐ-ஐப் பயன்படுத்தி பயனர்களின் ஆடை அலங்கார  அடிப்படையிலான  நான்கு வால்பேப்பர்களின் விருப்பத் தேர்வுகளை உருவாக்கும் திறன் கொண்ட ஸ்டைல் ஒத்திசைவு அம்சத்தை மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ உடன் அறிமுகப்படுத்துகிறது.

50எம்பி எஃப்/1.4, முதன்மை  கேமரா , மிகத் துல்லியமான செயல்திறனை வெளிப்படுத்த 32 மடங்கு அதிக ஃபோகஸ் பிக்சல்களுடன்  உடனடி ஆல்-பிக்சல் ஃபோகஸ், பின்புற கேமராவில் 13எம்பி அல்ட்ராவைடு + மேக்ரோ விஷன் சென்சார் மற்றும் ஓஐஎஸ் உடனான 3 மடங்கு ஆப்டிகல் மற்றும் 30 மடங்கு ஹைப்ரிட் ஜூம் 10எம்பி டெலிஃபோட்டோ கேமரா,   50எம்பி சென்சார் முன்புர கேமரா, 6.7இன்ச் 1.5கே சூப்பர் எச்டி போலெட்  (1220பி) டிஸ்ப்ளே,144ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 360ஹர்ட்ஸ் தொடு விகிதம், துல்லியமாக செதுக்கப்பட்ட  அலுமினிய ஃப்ரேம்,  நீடித்து உழைக்கும்  கண்ணாடி மற்றும் ஐபி68 நீர் எதிர்ப்புத் பாதுகாப்புத் திறன்,  பிரமாண்டமான 4500எம்ஏஎசி திறன் கொண்ட பேட்டரி, 125 வாட் டர்போ பவர் சார்ஜிங்,டர்போ பவர் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 ப்ராசசர், அதன் அதி விரைவான கைரோ சிபியு 2.63கிகா ஹர்ட்ஸ் வேகத்தை அளித்து  அதிவிரைவான பல்பணியாக்கம் , உத்திரவாதமளிக்கப்பட்ட  3 ஓஎஸ் மேம்படுத்தல்கள், 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்பு வசதி,  சமீபத்திய ஆண்ட்ராய்டு 14  ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த மொபைல் பிசினஸ் குரூப் - மோட்டோரோலா இந்தியா நிறுவன மேனேஜிங் டைரக்டர் டி.எம். நரசிம்மன் " மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த  மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ- வின் அறிமுகம் உலகத்திலேயே முதல் முதலாக இந்தியாவில் நடைபெறுவது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் நேருக்கு நேர் இயற்கையாக கண்டு ரசிக்கும் காட்சிகளை அப்படியே கண்முன் கொண்டுவரும் திறன் கொண்ட,  உலகத்தில் முதல் முதலாக பான்டோனின் உறுதியை பெற்ற டிஸ்ப்ளே மற்றும் காமிராவுடன்  மோட்டோ ஏஐஆல் இயக்கப்படும் நேட்டிவ் ஏஐ அம்சங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். விதிவிலக்கான அம்சங்களை மிகக் குறைந்த விலையில் வழங்கி தொழில்நுட்பத்தை வெகுஜன இயக்கமாக ஒன்றிணைக்கும் எங்கள் தொலை நோக்குப் பார்வைக்கு இணங்க  ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை மறுவரையறைக்குள்ளாக்கும் எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுவதில் நாங்கள் ஆர்வத்தோடு இயங்கிவருகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form