கால்நடைகள் பல குடும்பங்களுக்கு நிதி ஆதாரமாக உள்ளது. எனவே, ஆரோக்கியமான விலங்குகளை வளர்ப்பதில் ஊட்டச்சத்து மிக முக்கியமான அம்சமாக இருப்பதால், கால்நடைகளின் சிறந்த ஆரோக்கியம் சிறந்த வருவாய்க்கான ஒரு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, 94.69 லட்சம் கால்நடைகள் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில், கால்நடைகளின் ஆரோக்கியத்தில் குறைந்த கவனம் மாத்திரமே செலுத்தப்படுகிறது.
இந்தச் சூழலை எதிர்கொள்ள, ஜிஏவிஎல், கால்நடைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி, மூலப்பொருள் மற்றும் கழிவுத் தீவனங்களுக்குப் பதிலாக கூட்டு தீவனத்திற்கு மாற்றுவதைக் குறித்து விவசாயிகளுக்குக் கற்பிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் விவசாயிகள் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துகிறது. பால் பண்ணை தொழிலில் கூட்டு தீவனத்தின் முக்கிய பங்கை வலியுறுத்துவது போக, பால் கறவைத்திறன் அதிகரிக்க பண்ணைகளில் கால்நடைகளுக்கு முறையான குடிநீர் ஏற்பாடு செய்வது எவ்வளவு அவசியம் என்பது குறித்தும் விவசாயிகள் கற்பிக்கப்படுகிறார்கள்.
இப்பகுதியில் விவசாயக் குடும்பங்களை மேம்படுத்துவதில் விலங்குகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் அனிமல் ஃபீட் பிசினஸ் இன் தலைமை செயல் அதிகாரி சந்தீப் சிங், “பால் பண்ணைத் தொழிலில் கால்நடைகளின் சிறந்த நல்வாழ்வை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், சிறந்த கறவைத்திறன் பெறவும் விவசாயிகளுக்கு உதவுகிறது. பால் பண்ணையாளர்களின் பெரும்பாலும் தீவனத்தை சார்ந்துள்ள இனப்பெருக்க திறன் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது" என்றார்.
அவர் மேலும் பேசுகையில், "பால் உற்பத்திக்கான மொத்தச் செலவில் 70 சதவிகிதம், தீவனத்தைச் சார்ந்து இருப்பதால், அதிக மகசூல் தரும் கால்நடைகள் தினசரி உணவில் போதுமான ஊட்டச்சத்துகளைப் பெற்றால் மட்டுமே அவற்றின் மரபணு அளவை அடைய முடியும். எனவே எங்கள் கூட்டு தீவன தயாரிப்புகளான கோத்ரேஜ் பை ப்ரோ மற்றும் கோத்ரேஜ் பைபாஸ் ஆகியவை பால் கொடுக்கும் கால்நடைகள் தங்கள் முழு உற்பத்தித்திறனை அடையவும், அவற்றின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்ற வகையில் ஒவ்வொரு கிராம் தீவனத்திற்கும் அதிக ஊட்டச்சத்தை வழங்குகின்றன” என்றார்.