புக் டேல் பெருமையுடன் "தி ஸ்டோரி பாக்ஸ் புக்ஃபேர்”-ஐ வேலூரில் நடத்தவுள்ளது. முதல் கலிஞ்சூர், மேற்கு கிராஸ் ரோடு, சுதந்திர பொன்விழா நகர், கணேசபுரம், ஏஜி சர்ச் அருகில் உள்ள பிடிஎம் மஹாலில் 2023 நவம்பர் 2 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு புத்தக ஆர்வலர்களுக்கு ஒரு புகலிடமாக இருக்கும்.
புத்தகப் ப்ரியர்களுக்கு புக்டேலின் "ஸ்டோரி பாக்ஸ்" திட்டம் தவிர்க்க முடியாத சலுகையாகும். வாசகர்கள் வெறும் ரூ.1500 விலையுள்ள மினி பாக்ஸ் அல்லது ரூ.2500 விலையுள்ள பிக்ஜி பாக்ஸில் ஒன்றை தேர்வு செய்யலாம். வாசிப்பாளர்களின் தேவைக்கேற்ப புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவர்களின் பெட்டியை சமமாக மூடும் வரை நிரப்பிக்கொள்ளலாம். 300,000 க்கும் மேற்பட்ட நுணுக்கமாக தொகுக்கப்பட்ட புத்தகங்களின் புதையலை வாடிக்கயாளர்கள் அணுகி அற்புதமான க்ரைம் நாவல்கள், மனதைக் கவரும் காதல் கதைகள், வசீகரிக்கும் வரலாற்றுப் புத்தகங்கள், மகிழ்ச்சிகரமான குழந்தைகளின் கதைகள் மற்றும் இளம்வயது புனைகதைகள் என பல தொகுப்புகளில் இருந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம்.
ஒரே பேமெண்ட் மூலம் பங்கேற்பாளர்கள் தங்கள் "ஸ்டோரி பாக்ஸ்"-ஐ புகழ்பெற்ற இலக்கியங்களால் நிரப்பலாம். இந்த புத்தகக் கண்காட்சியில் பல வெளியீடுகளிலிருந்து 70% புதிய புத்தகங்கள் இருக்கும், மேலும் நாங்கள் வழங்கும் பெட்டிகள் வாசகர்களின் திருப்தியை அதிகரிக்கவும் செலவுத் திறனை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு +919999099435 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.