பன்முகப்படுத்தப்பட்ட முன்னணி நிதிச் சேவை நிறுவனமான அபான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட், நான்காவது காலாண்டு மற்றும் 2023 நிதியாண்டுக்கான வலுவான நிதிச் செயல்திறனை அறிவித்தது.
2023 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 70.3 கோடி ஆகும். 22ஆம் நிதியாண்டின் நிகர லாபம் ரூ.61.8 கோடியுடன் ஒப்பிடும்போது 14 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. 23ஆம் நிதியாண்டின் செயல்பாட்டு லாபம் 15 சதவிகிதம் வளர்ச்சி பெற்று ரூ. 76 கோடியாக உள்ளது. 23 நிதியாண்டு செயல்பாட்டின் வருவாய் ரூ. 1,150.97 கோடி. 22ஆம் நிதியாண்டின் 638.62 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் 80.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஏஜென்சியின் வருமானம் ஆண்டுக்கு 83 சதவிகிதம் அதிகரித்து, மார்ச் 23ல் ரூ. 43 கோடியை எட்டியது. 2023ஆம் நிதியாண்டுக்கான ஈபிஎஸ் ஒரு பங்குக்கு ரூ.14.81 ஆகும். நிகர என்பிஎ உடன் வலுவான இடர் மேலாண்மையை நிறுவனம் தொடர்ந்து பராமரிக்கிறது, தொடர்ந்து பூஜ்ஜியத்தில் உள்ளது.
வலுவான வளர்ச்சி கண்டுள்ள அபான்ஸ் ஹோல்டிங்ஸ் அதன் மூலோபாய விரிவாக்கத் திட்டங்களை பற்றி தெரிவித்தது. அபான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் அதன் தற்போதைய ஹோல்டிங் கம்பெனி நிலையைத் தாண்டி விரிவடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூலதனச் சந்தை ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும், அபான்ஸ் ஹோல்டிங்ஸ் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஏஜென்சி வருமானத்தில் 83 சதவிகித ஆண்டு வளர்ச்சியை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
அபான்ஸ் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான கார்ப்பரேட் அவென்யூ சர்வீசஸ் லிமிடெட் எஃப்சி ஏ யுகே-விலிருந்து உரிமத்தைப் பெற்றுள்ளது. இது பல நாணயங்களில் பரிவர்த்தனை செய்யும் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பும் சேவைகளை வழங்குவதை செயல்படுத்துகிறது. இந்த வணிகப் பிரிவு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது மற்றும் குழுவின் வளர்ச்சி இயக்கியாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபான்ஸ் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான அபான்ஸ் புரோக்கிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்தின் கீழ் அதன் சொத்துக்களை மேலும் மேம்படுத்துவதற்காக, சாட்கோ கேபிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட் (சாட்கோ) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அபான்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பன்சால், நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசுகையில், ”2023 நிதியாண்டில் எங்களின் வலுவான நிதி முடிவுகளால் மகிழ்ச்சியடைந்துள்ளோம். பல்வேறு அளவீடுகளில் எங்களின் வலுவான வளர்ச்சியானது, எங்களின் கவனம் செலுத்தும் அணுகுமுறை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இதற்குப் பின், சொத்து மற்றும் செல்வ மேலாண்மை மீதான எமது மூலோபாய கவனத்தின் மூலம் தொழில்துறையில் எமது நிலையை மேலும் வலுப்படுத்தும் மற்றும் எங்கள் பங்குதாரர்களுக்கு நீண்ட கால மதிப்பை வழங்கும்" எனத் தெரிவித்தார்.