2022ம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் பிளாட்டினம் நகைகள் விற்பனை அதிகரிப்பு



அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்திய நுகர்வோரிடமிருந்து பிளாட்டினம் தொடர்ந்து வலுவான தேவையை பெற்றுள்ளது, இதன் விளைவாக 2022 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் சில்லறை விற்பனை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  திருமண சீசன் மற்றும் பண்டிகை காலம் காரணமாக விற்பனை அதிகரித்தது. பிஜிஐ இன் உத்திசார் பங்குதாரர்கள் பிளாட்டினம் நகைகளின் தேவைக்கான விற்பனையில் வலுவான வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக்கொண்டனர்.

புனிதமான தீபாவளி பண்டிகை, குறிப்பாக தந்தேராஸ், செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிப்பதை குறிக்கிறது. இது பிளாட்டினம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோக நகைகளை வாங்க வாடிக்கையாளர்களை ஈர்த்தது. என்ஆர்ஐகள் மற்றும் திருமண சீசன் காரணமாக குறிப்பாக தெற்கு மற்றும் குஜராத்தில் டிசம்பர் மாதத்தில் தேவை மீண்டும் அதிகரித்தது. பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு இந்த துறை சிறப்பாக செயல்பட்டது.

இந்திய வாடிக்கையாளர்களிடையே பிளாட்டினம் நகைகளுக்கான தேவை குறித்து கருத்து தெரிவித்த, பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல்-இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வைஷாலி பானர்ஜி கூறுகையில், “இந்தியாவில் இன்று, பிளாட்டினம் நகைகள் இளம், விவேகமான நுகர்வோர் மத்தியில் மிகவும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. பல வாடிக்கையாளர்கள் பிளாட்டினத்தின் அரிதான தன்மை மற்றும் தூய்மையை தேர்வு செய்வதால், அதன் தேவை சமகால வடிவமைப்பால் இயக்கப்படுகிறது. பிஜிஐ மற்றும் எங்கள் சில்லறை பங்குதாரர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, இந்த உலோகத்தின் மீது நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த பல்வேறு முயற்சிகளால் 4 ஆம் காலாண்டு வளர்ச்சியில் வேகத்தை கண்டது. 2023 ஆம் ஆண்டில், பிஜிஐ இன் உத்திசார் அணுகுமுறை, திட்டங்கள் மற்றும் பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன், நாட்டில் பிளாட்டினம் ஜூவல்லரி மார்க்கெட்டின் தடத்தை மேலும் அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும் நாங்கள் முயற்சிப்போம்”  என்றார்.

“4 ஆம் காலாண்டு திருமணம் மற்றும் என்ஆர்ஐ சீசன்கள் காரணமாக பிளாட்டினம் ஆண்கள் மத்தியில் அதிகரித்த ஆர்வத்தை கண்டது. எங்கள் ‘இன்பினிட்டி’ தொகுப்பு, பிளாட்டினம் மற்றும் செராமிக் ஆகியவற்றிலிருந்து வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய டிசைன், எங்கள் நுகர்வோர் மத்தியில் ஆர்வத்தை உருவாக்கியது. வரும் காலாண்டுகளில் இந்த கோரிக்கை வலுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று  வும்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் பங்குதாரர் அமரேந்திரன் வும்மிடி தெரிவித்தார்.

கலாமந்திர் இயக்குநர் மிலன் ஷா கூறுகையில், “பிளாட்டினம் நகைகள் இளைய வாடிக்கையாளர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இதனால் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது. உண்மையில், 4&ம் காலாண்டு 2022 இல், நுகர்வோர் வாக்-இன்களை இயக்க உதவும் புதிய டிசைன்களை குறிப்பாக தந்தேராஸ் மற்றும் அதன் பிறகு என்ஆர்ஐ மற்றும் திருமண சீசன்களின் போது நாங்கள் அறிமுகப்படுத்தினோம். மென் ஆஃப் பிளாட்டினத்திற்கான எங்கள் பிரசாரம் எங்கள் நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது” என்றார்.

சென்கோ கோல்ட் அண்ட் டயமண்ட்ஸின் சிஇஓ அண்ட் நிர்வாக இயக்குனர் சுவாங்கர் சென் கூறுகையில், “தீபாவளியின் அதிக ஆக்டேன் சீசனில் பிளாட்டினத்தின் விற்பனையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்த புதிய எவாரா தொகுப்பை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.  இதன் மூலம் மீதமுள்ள காலாண்டில் ஒரு உற்சாகமான பாணியை அமைத்தது” எனத் தெரிவித்தார்.

“பிளாட்டினம் லவ் பேண்ட்ஸ் மற்றும் மென் ஆஃப் பிளாட்டினத்திற்கான எங்கள் 4 ஆம் காலாண்டு முயற்சிகள் பண்டிகை காலத்திற்கான மாறுபட்ட சலுகைகளை எதிர்பார்க்கும் நுகர்வோர் மத்தியில் ஆர்வத்தையும் விற்பனையையும் அதிகரிக்க உதவியது. இது 2023 ஆம் ஆண்டிற்கான நேர்மறையான தொடக்கத்தையும், பிளாட்டினம் நகைகளின் உடனடி வளர்ச்சியையும் ஏற்படுத்த வழிவகுத்தது”, என்று கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கல்யாணராம் தெரிவித்தார்.

“பிளாட்டினம் நகைகள் வாடிக்கையாளர்களிடையே குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, பிளாட்டினம் எவாராவை எங்கள் விவேகமான வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தினோம். இது இந்த மிக முக்கியமான விற்பனை காலத்தில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல், புதிய வாடிக்கையாளர்களையும் கொண்டு வந்தது” என்று  ரோக்டே ஜூவல்லர்ஸ் இயக்குனர் ராஜேஷ் ரோக்டே தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form