எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது



செங்கல்பட்டு, காட்டான்குளத்தூர் -இல் உள்ள எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை, நோயாளியின் தொடர்ச்சியான கண்காணிப்பை செயல்படுத்த டோசீ உடன் கூட்டு சேர்ந்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் நோயாளிகளை தொலைதூரத்தில் கண்காணிக்க அனுமதிப்பதன் மூலம் பாதுகாப்பு மற்றும் மருத்துவ விளைவுகளை மேம்படுத்த டோசீ-இன் தீர்வு, இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்படும்.

இதயத் துடிப்பு, சுவாச விகிதம், இரத்த அழுத்தம், எஸ்பிஓ2 அளவுகள், வெப்பநிலை மற்றும் இசிஜி போன்ற நோயாளிகளின் முக்கிய அளவுருக்களை தொலைவிலிருந்து கண்காணிக்க டோசீ, சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுகிறது. டோசீ-இன் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு ஆனது, முக்கிய அளவுருப் போக்குகளைக் கண்காணித்து, நோயாளிகளின் நோய் மோசமடைதலை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான நேரத்தில் மருத்துவத் தலையீட்டைச் செயல்படுத்த, சுகாதார பராமரிப்பு வழங்குநர்களை எச்சரிக்கிறது. டோசீ, ஏஐ- இயங்கும் பாலிஸ்டோ கார்டியோகிராஃபியை தொடுதலில்லாத உயிர்நிலை   கண்காணிப்புக்குப் பயன்படுத்துகிறது.இது 98.4 சதவிகிதம் துல்லியமானது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம் குறித்து எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சத்தியநாராயணன் கூறுகையில், "நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் கவனிப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் ஆராய்ந்து   வருகிறோம். டோசீ -இன் ஏஐ- அடிப்படையிலான தொடுதலில்லாத கண்காணிப்பு தொழில்நுட்பம், அந்த நோக்கத்தில் ஒரு படியாக இருக்கிறது. 24 மணி நேரமும் தொலைதூரத்தில் நோயாளிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க இது உதவும். இது எங்கள் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களை மற்ற பணிகளிலும் நோயாளிகளிலும் கவனம் செலுத்த விடுவிக்கும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நாங்கள் அளிக்கும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தலாம், சுகாதார பராமரிப்பு செலவுகளைக் குறைக்கலாம் மேலும் இறுதியில் அதிக உயிர்களைக் காப்பாற்றலாம்" என்றார்.

டோசீ -இன் சிடிஓ மற்றும் இணை நிறுவனர் கௌரவ் பர்ச்சானி கூறுகையில், “தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை, அதிநவீன நோயறிதல் சேவைகளுடன், டோசீ -இன் ஏஐ அடிப்படையிலான தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்த எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் உறுதியான செயல்திறனுக்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. டோசீ -இன் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம், தரமான பராமரிப்பை வழங்குவதற்கு உதவவும், நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்று  குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form