டிவிஎஸ் அப்பாச்சியின் பந்தயப் பாரம்பரியம் வெற்றிகரமான 20 ஆண்டுகளைக் கடந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், இந்தியாவின் முன்னணி ஃபேக்டரி ரேசிங் குழு, டிவிஎஸ் ரேசிங் ஏஆர்இ ஜிபியின் இரண்டாவது சீசனை தொடங்க தயாராகி வருகிறது. டிவிஎஸ் ரேஸிங் ஏ.ஆர்.இ. ஜிபி இராண்டாம் பதிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் 15, 2025-ல் நடைபெறவுள்ளது. முதல் பந்தய போட்டிக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பின் காரணமாக, இரண்டாம் பதிப்பு சர்வதேச தளத்திற்கான பந்தயமாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இது டிவிஎஸ் அப்பாச்சியின் பந்தய குணாதிசயம் மற்றும் புதுமை அம்சங்களின் 20 ஆண்டுகால வெற்றிப்பயணத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த வருட போட்டியானது மெக்சிகோ, கொலம்பியா, நேபாளம் என மூன்று சர்வதேச நாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் 17 நகரங்களில் நடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இந்த சீசனின் இறுதிப்போட்டியான கிராண்ட் பைனல் 2026 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்யில் நடைபெறுகிறது.
டிவிஎஸ் ரேஸிங், இந்த முறை டிவிஎஸ் ஒஎம்சி இந்தியா சேம்பியன்ஷிப் 2025ல் ஊடகங்களில் பணிப்புரியும் பெண்களுக்கான பிரத்தியேகமாக பந்தயப் பிரிவை அறிமுகப்படுத்தப்படுகிறது. மோட்டார் பந்தயத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்குமான பந்தயமாக முன்னெடுக்கும் டிவிஎஸ் ரேசிங் பாரம்பரியத்தின் முன்னோடித்துவமான குணாதிசயத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இம்முயற்சி அமைந்திருக்கிறது.
2016-ல் அனைவரும் பெண்களாக இருக்கும் உலகின் முதல் ரேசிங் அணியை அறிமுகப்படுத்தியது. மேலும், டிவிஎஸ் ஓஎம்சி பெண்கள் பிரிவு போன்ற முயற்சிகளின் மூலம் அவர்களின் திறமையை வளர்த்தெடுத்து வருகிறது. இதன் மூலம் ரேசிங்கில் பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் டிவிஎஸ் ரேசிங் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இருசக்கர வாகன பந்தய வீராங்கனைகள் தேசிய அளவிலான பந்தயத்தில் பங்கேற்பதற்கான தனியான மேடையாகவும் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ப்ரீமியம் பிஸ்னஸ் பிரிவின் தலைமை நிர்வாகி விமல் சம்ளி பேசும்போது, ”டிவிஎஸ் மோட்டார் கம்பெனியில், எங்களது ரேசிங் குணாதிசயம் எங்களுக்கு உற்சாகம் அளிப்பதோடு, புதுமைக்கும் அதற்கான தேவைக்குமான உத்வேகத்தைக் கொடுக்கிறது. டிவிஎஸ் அப்பாச்சியின் 20 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், டிவிஎஸ் ரேஸிங் ஏ.ஆர்.இ. ஜிபியின் சர்வதேச அளவிலான விரிவாக்கம், எல்லைகளைத் தாண்டி புதிய வரையறைகளை உருவாக்கும் எங்கள் பயணத்தில் இயல்பாக நிகழும் முன்னேற்றமாக அமைந்திருக்கிறது. ஊடகங்களில் பணிப்புரியும் பெண்களுக்கான பிரிவின் அறிமுகத்துடன், இந்த தளத்தை பெண்களுக்குமான போட்டியாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறோம். டிவிஎஸ் அப்பாச்சி பிரியர்களுக்கும், தொழில்முறை பந்தயவீரர்களுக்கான அனுபவத்தை வழங்குவதன் மூலம் பந்தயத்தை எல்லோருக்குமானதாக மாற்றும் நோக்கத்துடன் டிவிஎஸ் ரேசிங்உருவாக்கப்பட்டது. இன்று, உலகளாவிய ஒன்றாக அது வரவேற்பைப் பெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.