லெக்சஸ் நிறுவனத்தின் புதிய என்எக்ஸ் 350 எச் லக்ஸரி எஸ்யுவி கார் அறிமுகம்



லெக்சஸ் இந்தியா நிறுவனம் அதன் புகழ்பெற்ற என்எக்ஸ் எஸ்யுவி காரில் புதிய மேம்பாடுகளை அறிவித்துள்ளது; இதன் மூலம் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன கண்டுபிடிப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் ஒப்பற்ற சௌகரியத்தை வழங்க வேண்டுமென்கிற அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த மேம்பாடுகள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையாகவும், அற்புதமான பயண அனுபவங்களை வழங்கும் லெக்சஸ் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

சொகுசு ரக கார்களின் மிட்சைஸ் எஸ்யுவி பிரிவில் ஏற்கனவே பலரது விருப்பமான தேர்வாக இருந்த லெக்சஸ் என்எக்ஸ், இப்போது பாதுகாப்பு மற்றும் சௌகரிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிகரிக்கப்பட்ட எரிபொருள் செயல்திறன் லிட்டருக்கு 20.26* கி.மீ. மற்றும் இ20 விதிகளுக்கு இணக்கமான இந்த கார், இந்திய சந்தையில் மிகவும் மேம்பட்ட மற்றும் சிறந்த எஸ்யுவி கார்களில் ஒன்றாக வலுவான இடத்தில் உள்ளது.

புதிய என்எக்ஸ் காரில் அதன் ஆடம்பரம் மற்றும் செயல்பாட்டை உயர்த்த பல மேம்பாடுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வாகனத்தின் உள்ளே மேம்படுத்தப்பட்ட அமைதி மற்றும் கேபின் சௌகரியம் - பின்புற கேபினின் அமைதியை மேம்படுத்த நாய்ஸ்-இன்சுலேஷன் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது லெக்ஸஸின் அடையாளமான அமைதியான கேபின் அனுபவத்திற்கு பங்களிக்கிறது. தூய்மையான, ஆரோக்கியமான, மற்றும் தரமான உட்புற காற்று, ஆரோக்கியமான கேபின் சூழலை உறுதி செய்வதற்காக இதன் ஏசி ஏர் ஃபில்ட்டர் ஸ்பெஷல் மெட்டீரியல்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுத்தமான காற்று வரும் பக்கத்தில் உள்ள துணி சிறிய துகள்களை வடிகட்ட தடிமனாக மாற்றப்பட்டுள்ளதால் இது காற்றை மேலும் சுத்தமாக்குகிறது. 

மேலும், கேபினுக்குள் உள்ள ஏர் கண்ட்ரோல் ஆற்றலை சேமிக்கவும், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  ஹைபிரிட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட இதன் அப்ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், கார் மேல்நோக்கி ஓட்டும்போது சாலை மேற்பரப்பின் சாய் கோணத்தின் அடிப்படையில் வாகனத்தின் வேக அதிகரிப்பு (ஆக்ஸிலரேஷன்) மற்றும் வேக குறைப்பு (டீஸிலரேஷன்) சக்தியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதனால் ஒரு சௌகரியமான, மென்மையான மற்றும் ரெஸ்பான்சிவ் டிரைவ் உறுதி செய்யப்படுவதால், பல்வேறு நிலப்பரப்புகளில் மிகவும் நம்பகமான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இரண்டு புதிய எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மேம்பாடுகள் குறித்து லெக்சஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஹிகாரு இகேச்சி கூறுகையில், “புதிய என்எக்ஸ் காரின் அறிமுகத்தின் மூலம், இந்திய மார்கெட்டிற்கான ஆடம்பர கார்களின் லக்ஸரி நிலையை தரம் உயர்த்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய கார் ஒவ்வொரு பயணத்தையும் மேம்படுத்தவும், இணையற்ற ஸ்டைல், சௌகரியம் மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கான அனுபவத்தை வழங்கும் இந்த காரை எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம், அவர்களின் வாகனப் பயணம் இந்தியாவில் லெக்ஸஸின் கொண்டாட்டமாக மாறும் என்பதில் உறுதியாக உள்ளோம்.  புதிய என்எக்ஸ்  எங்கள் எஸ்யுவி   போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு லெக்சஸ் சொகுசு கார் வகைகளில் ஒரு மேம்படுத்தப்பட்ட மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த வாகனமாக இதனை கொண்டு வந்துள்ளோம்.” என்று கூறினார்.

புதிய என்எக்ஸ் 350எச் காரின் முன்பதிவு தொடங்கியுள்ளது.  மேலும்  விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள கெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் மையத்தைப் பார்வையிடலாம். அதிகாரப்பூர்வ லெக்சஸ் இந்தியா இணையதளத்திலும் அணுகலாம் என்று லெக்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form