லெக்சஸ் இந்தியா, ஸ்மார்ட் ஓனர்ஷிப் பிளான் எனும் புதிய முயற்சியை அறிவித்துள்ளது. இது ஆடம்பர கார் உரிமையைக் குறைந்த செலவிலும் அதிக சுதந்திரத்துடனும் அனுபவிக்க வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. நீண்டகால நிதி பிணைப்பு இல்லாமல், லெக்சஸ் வாகனங்களைப் பயன்படுத்தும் சுதந்திரத்தை அளிக்கும் வகையில், இந்தத் திட்டம் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம், வாடிக்கையாளர்கள் எளிய மாத தவணைகளில்லெக்சஸ் வாகனங்களை வாங்கும் வசதியைப் பெறுகிறார்கள். இது, ‘லெக்சஸ் பிராமிஸ்’ என்ற குடைச்சாயலில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி லெக்சஸ் இந்தியா தலைவர் ஹிகாரு இகேஉச்சி கருத்து தெரிவிக்கையில், “லெக்சஸ் பிராமிஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் ஓனர்ஷிப் பிளானை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஒமோடெனாஷி எனும் எங்கள் தனித்துவமான தத்துவத்தால் வழிகாட்டப்பட்டு, வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்னதாக உணர்ந்து பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம். இந்த திட்டம் வெறும் ஆடம்பரத்தை மட்டுமே வழங்குவதல்ல; அது மன அமைதியையும் நிதி சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்திய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் கனவுகளை பிரதிபலிக்கிறது” என்றார்.
அஷ்யூயர்ட் பைபேக் விருப்பம், வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. திட்டத்தின் முடிவில், வாடிக்கையாளர்கள் வாகனத்தை திருப்பி ஒப்படைக்கலாம், முன்பே ஒப்புக்கொண்ட மதிப்பை செலுத்தி வைத்துக்கொள்ளலாம் அல்லது புதிய தொழில்நுட்பம், வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெக்சஸ் மாடலுக்கு மேம்படுத்திக் கொள்ளலாம். தொகை முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதால் வாகனத்தின் மறுசந்தை மதிப்பு குறித்து எந்தத் தயக்கமும் இருக்காது. இந்த திட்டம் லெக்சஸ் இஎஸ், என்எக்ஸ், ஆர்எக்ஸ் மாடல்களுக்கு கிடைக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய லெக்சஸ் மாடலுக்கு மேம்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இது, சமகால ஆடம்பர வாகன உரிமைக்கான புத்திசாலியான, நவீனமான, சுதந்திரமான அணுகுமுறையை வழங்குகிறது.