டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் டிவிஎஸ் ஆர்பிட்டர்



இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது. அன்றாட பயணத்தை மறுவரையறை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் ஆர்பிட்டரில் 3.1 கேடபிள்யுஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிமீ வரை பயணிக்கக்கூடிய ஐடிசி வரம்பை அளிக்கிறது. மேலுன் க்ரூஸ் கண்ட்ரோல், 34-லிட்டர் பூட் ஸ்பேஸ், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் மேம்பட்ட இணைப்பு தொழில்நுட்ப அம்சங்கள் என இவ்வாகனப் பிரிவிலேயே முதல் அம்சங்களை அதிகம் வழங்குகிறது. மேலும், இருசக்கர வாகன தொழில்துறையில் முதல் முறையாக 14 இஞ்ச் முன் சக்கரத்துடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் அறிமுகமாகியுள்ளது.  இதன் விலை ரூ.99,900 (எக்ஸ்-ஷோரூம், பிஎம் இ-டிரைவ்திட்டம், பெங்களூரு மற்றும் புது தில்லி உட்பட) என்ற கவர்ச்சிகரமான விலையில் ஈடுஇணையற்ற செளகரியம், மேம்பட்ட வசதி மற்றும் அபாரமான செயல்திறனை வழங்குகிறது.

டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியபோது பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இந்தியா 2டபிள்யு பிஸினெஸ் பிரிவின் தலைவர் கௌரவ் குப்தா கூறுகையில், “டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் நாங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதுமையான தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி, தரம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் உலகளாவிய அளவுகோல்களை நிர்ணையிக்கும் தயாரிப்புகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். டிவிஎஸ் ஆர்பிட்டர் வாகனத்துடன், நாங்கள் எங்கள் மின்சார வாகன பட்டியலை மேலும் விரிவுபடுத்தி இருக்கிறோம். மேலும் இந்தியாவில் அன்றாட மின்சார போக்குவரத்தை மக்கள் விருப்பமுடன் பின்பற்றுவதை, எங்களது தயாரிப்புகளின் மூலம் நாங்கள் விரைவுப்படுத்தி வருகிறோம். "எங்கள் உலகளாவிய செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், தூய்மையான, நிலையான மற்றும் புத்திசாலித்தனமான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்." என்றார்.

டிவிஎஸ் ஆர்பிட்டர் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் - ஹெட், கம்மூட்டர் அண்ட் இவி பிசினெஸ் அண்ட் ஹெட் கார்பொரேட் ப்ராண்ட் அண்ட் மீடியா அனிருத்தா ஹால்டார் கூறுகையில் "மின்சார வாகனத் துறையில் எங்கள் தலைமைத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும், நம்பிக்கை மற்றும் புதுமையின் வலுவான அடித்தளத்துடன் இந்தியாவின் மின்சார வாகனப் பயணத்தை இயக்குவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களிடை அதிகரித்து வரும் எதிர்பார்புகள் மற்றும் தேவைகளைப் பூர்த்ஹ்தி செய்யும் வகையில் அறிமுகமாகி இருக்கும்  டிவிஎஸ் ஆர்பிட்டர்,  அன்றாட நகர்ப்புற பயணத்தை மறுவரையறை செய்வதில் எங்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை குறிக்கிறது. இது மேம்பட்ட தொழில்நுட்பம், ஏரோடைனமிக் ஆற்றல், விசாலமான வசதி மற்றும் இவ்வாகனப் பிரிவிலேயே முதல்  முறையாக அறிமுகமாகும் அம்சங்களுடன் அன்றாட பயன்பாட்டின் பல்வேறு எதிர்பார்புகளை  பூர்த்தி செய்கிறது. டிவிஎஸ் ஆர்பிட்டர் இந்தப் பிரிவில் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இது நிலையான வாகனப் போக்குவரத்தை எளிதில் அடையக்கூடியதாகவும், ஆர்வமுள்ளதாகவும் மாற்றும்." என்றார்.

இந்த மின்சார வாகனத்தின்  மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக் திறன் சாலைகளில் செல்லும் போது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கட்டுகோப்பாக வாகன செல்வதையும், மேம்பட்ட செயல்திறனை வழங்குவதையும் உறுதி செய்கிறது.  இதன் அப்-ரைட் எர்கானாமிக் ஹேண்டில்பார், பயணத்தை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுவதோடு, வாகனத்தின் மீது நம்முடைய கட்டுப்பாட்டையும் உறுதி செய்கிறது. 845 மிமீ நீளமான இருக்கை சவாரி செய்பவர் மற்றும் ப்ன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர் இருவருக்கும் செளகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 290 மிமீ ஸ்ட்ரெயிட்-லைன் ஃபுட்போர்டு போதுமான இடவசதியுடன் லெக் ரூம்மை உறுதி செய்கிறது. அகலமான மற்றும் அப்-ரைட் ஹேண்டில்பார் இலகுவாக ஓட்டுவதற்கான வாய்ப்பை  வழங்குகிறது, இதன் மூலம் அன்றாடப் பயணங்களை சிரமமின்றி செய்ய உதவுகிறது. இதன் 34 லிட்டர் இருக்கைக்கு அடியில், மிகப்பெரும் சேமிப்பகம் உள்ளது.  இந்தில் இரண்டு ஹெல்மெட்களை வைக்குமளவிற்கு தாராளமான இடவசதி உள்ளது. மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பம்  மற்றும் இணைப்பு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

டிவிஎஸ் ஆர்பிட்டர் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் அற்புதமான வண்ணகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form