இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிஃப்டி 500 குவாலிட்டி 50 டிஆர்ஐயைக் கண்காணிக்கும் ஒரு திறந்தநிலை குறியீட்டு நிதியான ஆக்சிஸ் நிஃப்டி500 குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் இன் அறிமுகத்தை அறிவித்தது. கார்த்திக் குமார் மற்றும் ஹிதேஷ் தாஸ் (நிதி மேலாளர்கள்) இந்த ஃபண்ட் ஐ நிர்வகிப்பார்கள். பரந்த அளவிலான முதலீட்டாளர்களுக்கு அணுகக்கூடியதாக அமைக்கின்ற வகையில் என்எப்ஓ இன் போது குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ஆகும். இது அரை வருடத்திற்கு ஒரு முறை மறுசீரமைக்கப்படுகிறது மற்றும் சமநிலையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக ஒரு அதிகபட்ச பங்கு எடை வரம்பை பராமரிக்கிறது. இந்த புதிய நிதி வழங்கல் ஆகஸ்ட் 21, 2025 முதல் செப்டம்பர் 4, 2025 வரை சந்தாவிற்காகத் திறக்கப்படும்.
முதலீட்டாளர்களுக்கு நிஃப்டி 500 யூனிவெர்ஸ் இலிருந்து கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் ஐம்பது உயர்தர நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான ஒரு எளிய, வெளிப்படையான மற்றும் செலவு குறைந்த வழியை வழங்க இந்த ஆக்சிஸ் நிஃப்டி500 குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட், வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படையான நிஃப்டி500 குவாலிட்டி 50 இன்டெக்ஸ், பங்குத் தேர்வு செயல்முறையிலிருந்து மனித சார்புகளை நீக்கும் ஒரு நெறிமுறைப்படுத்தப்பட்ட, விதிகள் அடிப்படையிலான வழிமுறையுடன், சமபங்கில் அதிக வருமானம், குறைந்த நிதி நெருக்கடி மற்றும் நிலையான வருவாய் வளர்ச்சி போன்ற அளவுருக்களின் அடிப்படையில் அதன் கூறுகளைத் தேர்ந்தெடுக்கிறது.
இந்த நிகழ்வு குறித்து பேசிய ஆக்சிஸ் ஏஎம்சியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பி.கோப்குமார் கூறுகையில், "தரம் என்பது நிச்சயமற்ற சந்தை நிலவரங்களில் நெகிழ்வுத்தன்மையை மட்டுமல்ல, வளர்ச்சி சுழற்சிகளில் மேல்நோக்கி வளரும் திறனையும் நிரூபித்துள்ள ஒரு காலத்தால் சோதிக்கப்பட்ட ஒரு முதலீட்டு காரணியாகும். ஆக்சிஸ் நிஃப்டி 500 குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் மூலம், நீண்ட காலத்திற்கு ஒப்பீட்டளவில் சீரான செயல்திறனை வழங்குவதற்கு நன்கு நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் வலுவான நிறுவனங்களுக்கான வெளிப்பாட்டை பெறுவதற்கு ஒரு நெறிப்படுத்தப்பட்ட, குறைந்த செலவு மற்றும் வெளிப்படையான வழியை முதலீட்டாளர்களுக்கு நாங்கள் வழங்குகின்றோம்."என்றார்.
வரலாற்று ரீதியாக, நிஃப்டி 500 குவாலிட்டி 50 இண்டெக்ஸ் ஏற்ற இறக்க காலங்களில் சிறந்த கீழ்நோக்கிய அபாயத் தடுப்பை வழங்குகின்ற அதே வேளையில் பரந்த சந்தையை விட மேலான செயல்திறனை வழங்கும் திறனை நிரூபித்துள்ளது. உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் கோவிட்-19 சந்தை வீழ்ச்சி போன்ற பெரும் சரிவுகளின் போது, இந்த இண்டெக்ஸ், நிஃப்டி50 ஐ விட குறைந்த அளவிலான வீழ்ச்சிகளை அனுபவித்து, மிகவும் விரைவாக மீண்டது. ஜூலை 2025 இல் நிறைவடைந்த 15-வருட காலத்தில், இது நிஃப்டி 50-ன் 12.1% உடன் ஒப்பிடும்போது, குறைந்த நீண்டகால ஏற்ற இறக்கத்துடன் 15.6% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை வழங்கியது. நெகிழ்வுத்தன்மை மற்றும் போட்டித்தன்மை வருமானம் ஆகியவற்றின் இந்த கலவை, நீண்டகால செல்வ உருவாக்கத்திற்கு ஒரு சுவாரஸ்யமான விருப்பமாக இதை அமைக்கிறது.