சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் ஐஏஃப்எஸ்ஸி பிரைவேட் லிமிடெட் ஆனது 4 மாத ரெசிடென்சி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் முதல் நிதியுதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் விவசாயம், நிதி உள்ளடக்கம், கிராமப்புற விநியோகச் சங்கிலி மற்றும் கிராமப்புற இயக்கம் ஆகிய களங்களில் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகுக்கும்.
அதோடு, கோயம்புத்தூரில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆழமான வேரூன்றிய சமூகத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றும். திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், திட்டம் முடிந்தப் பிறகும் கூட தொடர்ந்து ஆதரவையும் வளங்களையும் பெறுவார்கள். அதோடு, வாழ்நாள் முழுவதும் நெக்ஸ்ட் பாரத் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.
‘நெக்ஸ்ட் பாரத் ரெசிடென்சி திட்டம்’ ஆனது கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆரம்ப நிலை தொழில்முனைவோருக்கு 4 மாத தனியுரிமையை வழங்கும். இந்த ரெசிடென்சி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஆரம்ப நிலை ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்காக இப்போது திறக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் வழியாக விண்ணப்பத்தினை சமர்பிக்கலாம். அதிலிருந்து அதிகபட்சமாக 2 வாரத்துக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ளப்படும். அதோடு பூர்த்தி செய்வதற்கேற்ற படிவத்துடன் விண்ணப்ப செயல்முறையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் 14 அக்டோபர் 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்திலிருந்து தேர்வு முறையானது, தெளிவான சிக்கலை தீர்க்கும் அணுகுமுறை கொண்ட சமூகத்தில் தக்கத்தை ஏற்படுத்தும் தொழில் முனைவோருக்கு அல்லது இந்தியாவின் கிராமப்புற சமூகம் அல்லது முறைசாரா துறைக்கு பங்களிப்பதில் உறுதியுடன் இருக்கும் தொழில்முனைவோரின் மீது கவனம் செலுத்தப்படும்.
நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விபுல்நாத் ஜிண்டால் பேசுகையில், “நெக்ஸ்ட் பாரத் திட்டத்தின் மூலம் நாட்டின் முறைசாரா மற்றும் கிராமப்புறப் பொருளாதாரங்களில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் சமூக உந்துதல் கொண்ட தொழில்முனைவோரின் சக்தியை நாங்கள் நம்புகிறோம். ஜவுளி மற்றும் பொறியியல் அனுபவத்துட நகரத்தின் நீண்டகால தொழில்முனைவோர் பாரம்பரியம், குறிப்பிடத்தக்க சமூக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளை ஆதரிப்பதற்கான எங்கள் பார்வையுடன் கோவையானது நன்றாக ஒத்துப்போகிறது. சமூகங்களில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் கோயம்புத்தூர் உள்ளூர் தொழில் முனைவோர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.