மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் புதிய எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

 



 மொபைல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுக்கு உலகளவில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான மோட்டோரோலா அதன் எட்ஜ் ஃப்ரான்ச்சைஸின் புத்தம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஃபோனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் நார்டிக் வுட் என குறிப்பிடப்படும் உண்மையான மர ஃபினிஷ் வடிவமைப்பில் கிடைக்கிறது. மேலும் இது ஃபாரெஸ்ட் கிரே மற்றும் பீச் ஃபஸ்ஸ்- பேண்டோன் கலர் ஆஃப் தி இயர் 2024 ஆகிய இரண்டு வண்ணங்களில் வேகன் லெதர் ஃபினிஷ்ஷிலும் கிடைக்கிறது.  இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட் மோட்டோரோலா.இன் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உட்பட முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் 24 ஜூன் 2024 அன்று பிற்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். 12ஜிபி+512ஜிபி ரூ.59,999க்கு கிடைக்கும்.  வரையறுக்கப்பட்ட கால அளவுக்கு சிறப்பு அறிமுக சலுகையாக ரூ. 5000 கூடுதல் தள்ளுபடியுடன்  12ஜிபி+512ஜிபி ரூ. 54,999க்கு கிடைக்கிறது.

மோட்டோ ஏஐ-ஆல் இயக்கப்படும் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா, அதன் ஏஐ மேஜிக் கேன்வாஸ் சிறப்பம்சத்தின் மூலம் பயனர்களின் கற்பனா சக்திக்கு உயிரூட்டி, எழுத்து வடிவ உள்ளீடுகள் வழியாக இமேஜ்களை உருவாக்க அனுமதிக்கிறது. மோட்டோ ஏஐ- ஆல்இயக்கப்படும் அதிநவீன கேமரா தொழில்நுட்பத்தின் மூலமாக பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிரமமின்றி காட்சிப்படுத்தும். இதன் சிறப்பம்சமான ப்ரோ கிரேடு காமிரா சிஸ்டம் முன்னெப்போதுமில்லாத வகையில், இந்த பிராண்டின் மிகவும் கவர்ச்சிகரமான கேமரா அமைப்பாக விளங்குகிறது. இதன் ஏஐ சிறப்பம்சங்களில் மங்கலாக இல்லாத தெளிவான புகைப்படங்களை விரைவாக எடுக்கும் ஏஐ ஆக்‌ஷன் ஷாட், படங்களைக் காட்சிப்படுத்தும் போது, நகர்தலை அடையாளம் காண, சிறந்த காட்சிப்படுத்தலை உறுதி செய்ய ஏஐ அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன், படம் பிடிக்கப்படும் இலக்கை நாம் கையால் தேர்வு செய்ய தேவையில்லாத வகையில் இண்டெலிஜெண்ட் ஆட்டோ ஃபோக்கஸ் டிராக்கிங், ஏஐ ஃபோட்டோ என்ஹான்ஸ்மென்ட் எஞ்சின் அதன் டைனமிக் ரேஞ்ச்சை மேம்படுத்தி இமேஜின் ஒளிரும் மற்றும் இருண்ட பகுதிகளுக்கிடையேயான விகிதத்தை மேம்படுத்தும், தனிப்பட்டு குறிப்பிட்ட பிரிவுகளின் டியூனிங் , அட்வான்ஸ்ட் லாங் எக்ஸ்போஷர் மற்றும் வீடியோ ஹொரைசன் லாக் ஆகியவற்றின் மேம்பட்ட காட்சியமைப்பை வழங்க படங்களை பகுப்பாய்வு செய்யும் ஸ்மார்ட் கலர் செக்மென்டேஷன் ஆகியவை உள்ளடங்கும்.

 முந்தைய தலைமுறை காமிராக்களை விட 20 சதவிதம் கூடுதல் ஒளியை உள்வாங்கும் திறன் கொண்ட மிகப் பெரிய 2.4எம்எம்  பிக்சல் மெயின் 1/1.3 இன்ச் சென்சார் பொருத்தப்பட்ட பேன்டோன் வேலிடேட்டட் ட்ரூ கலர் 50எம்பி பிரதான கேமிராவை பறைசாற்றுகிறது. இதிலுள்ள லேசர் ஆட்டோஃபோகஸ் காட்சிப்படுத்தப்படும் இலக்கின் தூரத்தை துல்லியமாக அளவீடு செய்து விரைவாக ஃபோகஸ் செய்துவிடும்.  ஓம்னி- டைரக்ஷனல் பிடிஏஎஃப் மூலம், 32 மடங்கு கூடுதல் ஃபோக்கஸ் பிக்சல்களை பயனர்கள் பெறுகிறார்கள்.  இதன் இரண்டாவது பின்புற கேமரா 122 டிகிரி அல்ட்ரா-வைட்- ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்ட அல்ட்ரா-வைட்- மேக்ரோ விஷன் 50எம்பி கேமரா வெறும் ஒரே கிளிக் இல் கூடுதல் விவரங்களை காட்சிப்படுத்துகிறது. மேலும் இதன் அல்ட்ரா வைட் சென்சார்,  குறைந்த வெளிச்சத்திலும் காட்சியமைப்பின் பிரகாசத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்துகிறது. 

பின்புறக் கேமிரா அமைப்பில் அடங்கியுள்ள மூன்றாவது கேமிரா, உலகத்திலேயே முதல் முதலாக ஓஐஎஸ் மற்றும் அட்வான்ஸ்ட் ஹைப்ரிட் ஸூம் உடன் கூடிய 64எம்பி 3மடங்கு டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்டது.  முன்புறத்தில் 50எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. க்வாட் பிக்சல் தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்கள் இப்போது 4மடங்கு அளவு சிறந்த குறைந்த-ஒளி உணர்திறனை பெற்று அனுபவித்து மகிழலாம்.

 கேமரா அமைப்பு, எந்த ஒரு கோணத்திலும் காட்சித் தரத்தின் விளைவை உறுதி செய்ய இமேஜின் பல புள்ளிகளை ஃபோகஸ் செய்து காட்சிப்படுத்தும், டில்ட் ஷிப்ட் மோட் போன்ற பல எண்ணிக்கையிலான மோட்கள் மற்றும் அமைப்புகளுடன் வருகிறது. கேமராவில் இருந்தே நேரடியாக அடோப் டாக் ஸ்கேன் அணுகலுக்கான வசதியையும் கொண்டுள்ளது. இந்த கேமராவில், ஏஐ மேஜிக் எரேசர், ஃபோட்டோ அன்ப்ளர், மேஜிக் எடிட்டர் போன்ற கூகுள் ஏஐ அம்சங்களின் ஒன்றிணைக்கப்பட்டு வருகிறது. 

ஸ்மார்ட் கனெக்ட் அம்சம் பல சாதனங்களை தடையின்றி ஒன்றிணைத்து, எந்த ஒரு சிரமமுமின்றி கைபேசி, கைக்கணினி மற்றும் பிசி சாதனங்கள் முழுவதுமாக எளிதான செயல் மாற்றங்களுக்கு உதவுவதன் மூலம் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் திறன் மிக்க டிஜிட்டல் வாழ்க்கைக்கான முக்கிய அங்கமாக திகழ்கிறது. ஸ்மார்ட் கனெக்ட்டினுள் , ஸ்வைப் டு ஷேர், கிராஸ் டிவைஸ் கண்ட்ரோல், கான்டெக்ஸ்ட் அவேர் ஃபோன், யுனிவர்சல் கிளிப்போர்டு, ஷேர் ஹப், ஆப் ஸ்ட்ரீம் போன்ற இன்னும் பல்வேறு செயல்பாடுகளுக்கான வசதியை பயனர்கள் பெறுவார்கள்.

 2800 நிட்ஸ் ஒளிர்திறனுடன் கூடிய கிட்டத்தட்ட ஓரங்களே இல்லாத 6.7 இன்ச் போலெட்  டிஸ்ப்ளே, இதன் சூப்பர் எச்டி ரெசல்யூஷன்,  144 ஹர்ட்ஸ் அதிவேக புதுப்பிப்பு விகிதம்,  360ஹர்ட்ஸ் தொடு விகிதம்,  பேன்டோன் ஸ்கின்டோன்   மனித சரும நிறச் சாயல்களின் ஒரு பரந்த ஸ்பெக்ட்ரம் உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்கிறது. மேலும் இந்த டிஸ்ப்ளே ஒரு மிக வலிமையான கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் நீண்ட கால உழைப்பு மற்றும் கீறல் இல்லாத பயன்பாட்டை உறுதி செய்கிறது. 125 வாட் டர்போபவர் சார்ஜிங் திறன் கொண்ட இந்தப் பிரிவின் ஒரே 50வாட் வயர்லெஸ் சார்ஜிங் உடன் ஒரு மிகப்பெரிய 4500எம்ஏஎச் மின் திறன் கொண்ட பேட்டரி, 10வாட் வயர்லெஸ் வசதி, நீர் எதிர்ப்புத் திறன் வழங்கும் ஐபி68, ஸ்நாப்டிராகன் 8எஸ் ஜென் 3 செயலி, அதிகளவு இயக்க ஆற்றலுடன் கூடிய க்வால்காம் ஏஐ இன்ஜின், வைஃபை 7 நெட்வொர்க்குகளுக்கான ஆதரவுடன் 17 அதிவிரைவான 5ஜி மின்னல் வேகத்தையும் வழங்குவதோடு அதிவேகமான எல்பிடிடிஆர்5எக்ஸ் நினைவகம் சமீபத்திய புத்தம்புதிய 12ஜிபி ரேம் + 512ஜிபி யுஎஃப்எஸ் 4.0 சேமிப்பகத்தையும் வழங்குகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம், இரண்டு பெரிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பியின் ஹெட் டிராக்கிங் தொழில்நுட்பம், க்வால்காம் ஸ்நாப்டிராகன் சவுண்ட் தொழில்நுட்பம், அதி நவீன ஆண்ட்ராய்டு 14 க்கான உத்திரவாதத்துடன் கூடிய 3 ஓஎஸ் புத்தாக்கங்கள், மற்றும் 4 வருட எஸ்எம்ஆர் புத்தாக்கங்களுக்கான தன்மயமாக்கப்பட்ட மற்றும் உள்ளுணர்வோடு கூடிய ஹல்லோ யுஐ மென்பொருள், ஹெலோ யுஐ, இல் மோட்டோ ஜெஸ்ஜர்ஸ், திங்க்ஷீல்டுடன் கூடிய மோட்டோ செக்யூர்,ஃபேமிலி ஸ்பேசஸ், மோட்டோ அன்பிளக்ட், மற்றும் தனிப்பயனாக்க 5.0 அம்சங்கள் அடங்கும்.

இதன் அறிமுகம் குறித்து பேசிய மோட்டோரோலா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் டி.எம் நரசிம்மன் “மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா-ன் அறிமுகம் ஏஐ-ஆல் இயக்கப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்துறையில் இன்று வரையிலான எங்களின் மிகவும் மேம்பட்ட சாதனத்தை அடையாளப்படுத்துவதோடு குறிப்பிடத்தக்கவகையில் இந்தத் துறையில் எங்களது பாய்ச்சலையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புரட்சிகரமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form