ஹேயர் இந்தியா கிநொச்சி டார்க் எடிஷன் ஏர் கண்டிஷனரை அறிமுகப்படுத்தி உள்ளது



ஹேயர் இந்தியா நிறுவனம், தற்போது புதிய கிநொச்சி டார்க் எடிசன் ஏர் கண்டிஷனரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. புதுமையான தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் ரகத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.  1.6 டன் மற்றும் 1.0 டன் ஆகிய ரகங்களில் கிடைக்கும், அனைத்து சில்லறை வணிக நிறுவனங்களிலும் இது விற்பனைக்கு வர உள்ளது. ஹேயர் கிநொச்சி டார்க் எடிஷன்  ஏர் கண்டிஷனர் இந்தியா முழுவதும் 46,990 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.

புதிய காற்று சீர் அமைப்பின் தனித்துவமான அம்சம், வழக்கமான குளிரூட்டிகளை விட 20 மடங்கு வேகமான குளிரூட்டும் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டது. கூடுதலாக, இந்த மாடலில் 60 டிகிரி செல்சியஸ் வரை, தீவிர வெப்ப நிலையில் கூட திறமையான அற்புதமான குளிர்ச்சியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கிநோச்சி மாடல், முழு இன்வெர்ட்டர் ஏர் கண்டிஷனர் வரம்பில் உள்ள புரோஸ்ட் சுய சுத்தமான தொழில்நுட்பம் 99.9 விழுக்காடு கிருமி நீக்கம் செய்வதை உறுதி செய்கிறது. 15 நிமிடங்களில் முற்றிலும் தூய்மையான காற்றை வெளிப்படுத்தும்.

ஹேக்ஸா இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் மின்னணு விரிவாக்க வால்வ் மற்றும் இரட்டை டிசி கம்ப்ரஸர் கொண்ட முழு டிசி இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், இந்த குளிரூட்டியானது மிகவும் வலுவான வடிவமைப்புடன் வருகிறது.  இன் டெல்லி ப்ரோ சென்சார் திறமையான செயல் திறனுக்காக சுய சரி செய்தலையும் வழங்குகிறது. இதன் விளைவாக அதிக ஆற்றல் சேமிப்பும் கிடைக்கும்.  சமீபத்திய மாடல் "டர்போ" பயன்முறையை கொண்டுள்ளது, இது இந்திய பயனர்களுக்கு நிலையான மற்றும் சக்தி வாய்ந்த குளிர்ச்சியை உறுதி செய்கிறது. ஹேயர் இந்தியா வின் புதிய ஏர் கண்டிஷனர் மாடல் அதன் சிறப்பு வடிவமைப்பு மற்றும் பயனுள்ள கண்பார்மல் பூச்சு ஆகியவை சாதனத்தின் கூறுகளை வெளிப்புற உட்புறங்களில் இருந்து பாதுகாக்கின்றன, மேலும் நீண்ட காலத்திற்கு பயனுள்ள செயல் திறனை உறுதி செய்கின்றன.

புதிய அறிமுகம் குறித்து ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் என். எஸ். சதீஷ் கூறுகையில், " மீபத்திய கிநொச்சி டார்க் எடிசன் உட்பட எங்களின் அனைத்து ஏர் கண்டிஷனர்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய சந்தைக்காக என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏர் கண்டிஷனர் மூலம், நுகர்வோருக்கு மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய பிரிமியம் தயாரிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் செயல் திறன் மற்றும் ஸ்டைல் என இரண்டிலும் கோடை வெப்பத்தை எதிர்த்து போராட முடியும் என்பதை உறுதி செய்கிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form