ஃபெட்எக்ஸ் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமும், உலகின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றுமானது ஃபெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் 22வது எடிஷனான ‘பவர் நெட்வொர்க்கிங் மீட்’ நிகழ்வு வேலூரில் நடைபெற்றதை அறிவித்துள்ளது. இந்நிகழ்வானது, இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத இலக்கினை உறுதிப்படுத்துகிறது. வர்த்தக ஒழுங்குமுறை மற்றும் வணிக பின்னடைவை சரிசெய்தல் ஆகியவற்றை டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் மூலம் வலுப்படுத்துவதால் ஃபெட்எக்ஸ் ஆனது, சிறப்புமிக்க லாஜிஸ்டிக் தீர்வுகளின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் இப்படியான சாதனைகளை எட்ட முடிகிறது.
வேலூரில் நடைபெற்ற நிகழ்வில் 41க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகை தந்து, கேள்வி பதில் மற்றும் நெட்வொர்க்கிங் உரையாடலில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதோடு, வாகன மற்றும் தோல் தொழில்துறையைச் சேர்ந்த செயல்பாடுகள் அதிகளவில் கவனமீர்த்தது. ஃபெட்எக்ஸ் ஆனது இந்திய எஸ்எம்இ களின் வளர்ச்சி மற்றும் வெற்றியை ஆதரிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. பவர் நெட்வொர்க்கிங் சந்திப்புகள் இந்தியாவில் உள்ள வணிகங்கள் இன்றைய உலகளாவிய சந்தையில் செழிக்கத் தேவையான கருவிகள், நிபுணத்துவம் மற்றும் வளங்களைக் கொண்டிருப்பதை உறுதியளிக்கும் வழிகளில் ஒன்றாகும்.
உலகளாவிய சந்தையில் எஸ்எம்இ களை ஆதரிக்க, ஃபெட்எக்ஸ் டிஜிட்டல் நுண்ணறிவை மேற்கொள்வதன் மூலம் பரந்த அளவிலான தீர்வுகளை வழங்குகிறது. ஃபெட்எக்ஸ் இண்டர்நேஷனல் ப்ரியாரிட்டி I சேவையின் மூலம் முக்கியமான மற்றும் அவசர ஏற்றுமதிகள் இரண்டு முதல் மூன்று வணிக நாட்களுக்குள் உலகெங்கிலும் உள்ள முக்கிய சந்தைகள் மற்றும் நாடுகளுக்கு சென்று சேர்க்க முடியும். மேலும், ஃபெட்எக்ஸ் மேம்பட்ட பொருளாதார சேவைகளை வழங்குகிறது, குறைந்த அவசர ஏற்றுமதிகளை செலவு குறைந்த மற்றும் சரியான நேரத்தில் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஃபெட்எக்ஸ் இண்டர்நேஷனல் கனெக்ட் ப்ளஸ் ஆனது 14 சந்தைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது வேகம் மற்றும் கவர்ச்சிகரமான விலைகளுடன் செலவு குறைந்த மின்வணிக சர்வதேச ஷிப்பிங் தீர்வை வழங்குகிறது. ஃபெட்எக்ஸ் டெலிவரி மேனேஜர் இண்டர்நேஷனல் போன்ற ஊடாடும் தீர்வுகள் வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி விருப்பங்களை நிர்வகிக்கும் சுதந்திரத்தை வழங்க அனுமதிக்கிறது. ஃபெட்எக்ஸ் ஷிப் மேனேஜர் உள்ளிட்ட தானியங்கு கருவிகள் எஸ்எம்இ களுக்கு படிவங்களை அணுகவும், ஷிப்பிங் லேபிள்களைத் தயாரிக்கவும் மற்றும் ஆவணங்களை சிரமமின்றி உருவாக்கவும் உதவுகிறது. இதன் சேவைகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு ஃபெட்எக்ஸ் ஷிப்பிங் சர்வீஸ் தளத்தை பார்வையிடவும் <https://www.fedex.com/en-in/home.html>.
ஃபெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் எம்இஐஎஸ்ஏ மார்க்கெட்டிங் துணைத் தலைவர் நிதின் நவ்நீத் தட்டிவாலா பேசுகையில், “ “எஸ்எம்இ-கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பு என்றே கூறலாம். 50 ஆண்டுகளுக்கும் மேலான லாஜிஸ்டிக் நிபுணத்துவத்துடன், எஸ்எம்இ-களுக்கு உலகளாவிய வர்த்தகத்தில் வழிநடத்தவும், அவற்றின் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்காக அவற்றை நிலைநிறுத்தவும் உதவுகிறோம். எங்கள் பவர் நெட்வொர்க்கிங் கருத்தரங்குகள் எஸ்எம்இ-களுக்கு ஃபெட்எக்ஸ் தீர்வுகளை திறம்பட புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் உதவுகின்றன. எஸ்எம்இ-கள் கருத்துக்களை வழங்குவதற்கான ஒரு இடத்தையும் அவை உருவாக்குகின்றன. அதோடு, லாஜிஸ்டிக் துறைக்கு அப்பால், இந்த வணிகங்களை உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைத்து, இந்த டிஜிட்டல் யுகத்தில் அவை செழிக்க உதவுவதன் மூலம், வளர்ச்சியைச் செயல்படுத்துபவர்களாக எங்களை பெருமிதத்துடன் பார்க்கிறோம்” என்றார்.