ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் தனது வெற்றிகரமான மெகா சர்வீஸ் முகாமை தமிழகத்தின் புதுச்சேரியில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டத்தில் மாநிலங்கள் முழுவதும் பல வெற்றிகரமான சர்வீஸ் முகாம்களைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் கட்ட சர்வீஸ் முகாம் இன்னும் பல நகரங்களுக்கு சேவை செய்யவுள்ளது. முகாம் புதுச்சேரியில் வரும் மே 31 மற்றும் ஜூன் 01அன்று நடைபெறவுள்ளது. இது பிராந்தியத்தில் உள்ள 2019 மற்றும் 2020 மாடல்களின் ஜாவா மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு பிரத்யேகமாக சேவைகளை வழங்குகிறது. சேவை முகாமானது ஸ்ரீ கணேஷ் மோட்டார்ஸ் - எண் 63, கடலூர் மெயின் ரோடு, இந்தியன் வங்கி அருகில், முதலியார்பேட்டை, புதுச்சேரி - 605 004.என்ற முகவரியில் நடைபெறுகிறது.
முகாமின் ஒரு பகுதியாக, 2019 முதல் 2020 வரையிலான ஜாவா மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு விரிவான வாகன பரிசோதனை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகங்களை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். மோடுல், அமரான், சியட் டயர்ஸ் உட்பட முன்னணி அசல் உபகரண வழங்குநர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவ முகாமில் பங்கேற்பார்கள். நீண்ட கால வாடிக்கையாளர் திருப்திக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பில், ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. கூடுதலாக, பரிவர்த்தனை மதிப்பை மதிப்பிடுவதற்காகவும், தங்கள் மோட்டார் சைக்கிள்களை மேம்படுத்த ஆர்வமுள்ள உரிமையாளர்களுக்காக முகாமில் தனியாக ஒரு இடம் அமைக்கப்பட்டிருக்கும்.
ஏற்கனவே முதல் கட்ட சர்வீஸ் முகாம்களில் 6250 ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு சர்வீஸ் செய்துள்ள வெற்றி கண்டுள்ள ஜாவா ஜூன் மாத இறுதிக்குள் சுமார் 10,000 பைக்குகளுக்கு சர்வீஸ் செய்ய எதிர்பார்க்கிறது. ஜாவா வரும் மாதங்களில் நாடு முழுவதும் பல நகரங்களில் மெகா சேவை முகாம்களை (இரண்டாம் கட்டம்) ஏற்பாடு செய்யும் என எதிர்பார்க்கிறது. இந்த முன்முயற்சி வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், ஒப்பிடமுடியாத உரிமை அனுபவத்தை வழங்குவதற்கும் பிராண்டின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்கள் அருகிலுள்ள பிராண்ட் டீலர்ஷிப்பில் தங்களுக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.