நீடிப்புத்தன்மையுள்ள பொது போக்குவரத்து தேவைகளை ஒரு முன்னோடியாகப் புகழ்பெற்றிருக்கும் கிரீன்செல் மொபிலிட்டி, நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் அதன் மின்சார பேருந்து பிராண்டான நியுகோவுக்காக தனது செயல்பாடுகள் கணிசமான அளவு விரிவாக்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்தியாவெங்கிலும் பல்வேறு வழித்தடங்களில் நியுகோ இப்போது 100க்கும் அதிகமான நகரங்களில் சேவைகளை தொடங்கியிருக்கிறது.
இதன் மூலம் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து பிரிவில் அதன் தலைமைத்துவ நிலையை இது மேலும் வலுப்படுத்துகிறது. புதிய பயண வழித்தடங்களில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை நியுகோவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் வழியாக அல்லது ஐஓஎஸ் மற்றும் பிளேஸ்டோரில் கிடைக்கப்பெறும் நியுகோ செயலி வழியாக வசதியாக முன்பதிவு செய்யலாம்.
இந்தியாவெங்கிலும் புதிதாக போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டிருக்கும் வழித்தடங்களுள் கீழ்கண்டவையும் உள்ளடங்கும்: டெல்லி டூ சிம்லா டூ டெல்லி, குர்கான் டூ சண்டிகர் டூ குர்கான், டெல்லி டூ ரிஷிகேஷ் டூ டெல்லி, டெல்லி டூ அமிர்தசரஸ் டூ சண்டிகர், சண்டிகர் டூ டேராடூன் டூ சண்டிகர், விஜயவாடா டூ விசாகப்பட்டினம் டூ விஜயவாடா, பெங்களூர் டூ சேலம் டூ பெங்களூர், பெங்களூர் டூ திருச்சி டூ பெங்களூர்
தனது விருந்தினர்களுக்கு பயணத்தின்போது பேருந்துக்குள் வழங்கப்படும் வசதிகளை நியுகோ மேலும் மேம்படுத்தியிருக்கிறது. கவலையற்ற, சவுகரியமான அனுபவத்தை உறுதிசெய்வதற்காக உணவுகளை வழங்கும் திட்டத்தையும் ஒரு முன்னோட்ட தொடங்கியிருக்கிறது. இந்த விடுமுறை சீசனிற்கு தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரிட்டர்ன் டிக்கெட்களை முன்பதிவு செய்யும்போது கூடுதல் தள்ளுபடியையும் நியுகோ இப்போது வழங்குகிறது. பாதுகாப்பு அம்சங்களின் தொகுப்பின் மூலம் தனது தரத்தை உயர்நிலையில் வைத்திருக்கிறது.
சிசிடிவி கண்காணிப்பு, ஓட்டுனருக்கு சுவாச பகுப்பாய்வு சோதனை, ஓட்டுனருக்கு கண்காணிப்பு சாதனங்கள், வேக வரம்பு கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் இவற்றுள் உள்ளடங்கும். மிகச்சிறந்த பாதுகாப்பை உறுதிசெய்ய பொறியியல் மற்றும் மின்சாரவியல் ஆகிய இரு பிரிவுகளிலும் 25 துல்லியமான பாதுகாப்பு பரிசோதனைகள் நியுகோவின் பேருந்துகளில் பயணத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, பாதுகாப்பான பயணம் செய்வதை விரும்புகிற பெண் பயணிகளுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை உறுதிசெய்யும் தோழனாக நியுகோ புகழ்பெற்றிருக்கிறது.
கிரீன்செல் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குநர் அண்ட் தலைமைச் செயல் அலுவலர் தேவ்ந்த்ரா சாவ்லா பேசுகையில், “நியுகோவின் சேவைகள் நாடெங்கிலும் பரவலாக விரிவாக்கம் செய்யப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் பெரும் உற்சாகமடைகிறோம். புதிய வழித்தடங்கள் மற்றும் வசதிகள் அறிமுகத்தின் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு பயண அனுபவத்தை மென்மேலும் உயர்த்தி வழங்குவது எமது நோக்கமாகும். அதே வேளையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் இந்திய அரசின் செயல்திட்டத்திற்கு தீவிர பங்களிப்பை வழங்கும் மற்றும் அனைவருக்கும் பசுமையான எதிர்காலத்தை உறுதிசெய்வதும் எமது குறிக்கோளாகும்” என்றார்.