தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-இன் கோவை மாணவன் ஸ்ரீராம் மஹாலக்ஷ்மி ஆனந்த், அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 632வது இடத்தைப் பெற்று கோயம்புத்தூர் நகரின் டாப்பர்களில் ஒருவராக கல்வித் துறையில் தனது பெயரைப் பதித்துள்ளார். முக்கிய பாடமான இயற்பியலிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஜேஇஇ மெயின்ஸ் தேர்வானது மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்களை அதிகரிக்க வாய்ப்புகளை வழங்க இரண்டு அமர்வுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு பிரத்தியேகமாக மதிப்புமிக்க இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கையை எளிதாக்குகிறது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்விற்கு முன்பு ஜேஇஇ மெயின்-ல் பங்கேற்பது கட்டாயமாகும்.
ஸ்ரீராம் எம்.ஏ-வைத் தவிர மேலும் 8 மாணவர்கள் 99 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் ரித்திஷ் சங்கர், சஞ்சய் கண்ணா எஸ்டி, மதுஷ்யாம் எம், ஹரிச்சரண் எம், அபிமன்யு சௌத்ரி கே, வி ஸ்ரீநிதி, அவினாஷ் சரஃப் மற்றும் சபரிஷ் எஸ் ஆவர். தேசிய தேர்வு முகமை 24.04.2024 அன்று அவர்களின் அசாதாரண சாதனைகளை வெளியிட்டு சிறப்பான ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மாணவர்கள், “எங்கள் வெற்றிக்கு நாங்கள் என்றும் ஆகாஷிற்கு கடமைப்பட்டுள்ளோம். ஆகாஷின் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் பயிற்சி எங்களின் இந்த பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அவர்களின் அசைக்க முடியாத வழிகாட்டுதல் இல்லாமல், சுருக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏராளமான பாடங்களில் தேர்ச்சி பெறுவது ஒரு தீர்க்கமுடியாத சவாலாக இருந்திருக்கும்” எனக் கூறினர்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் இன் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் மிஸ்ரா, மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில் “மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனானது, விரிவான பயிற்சி மற்றும் புதுமையான கற்றல் தீர்வுகளை மாணவர்களுக்கு வழங்கி போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க அவர்களை தயார்படுத்துவதில் ஏஇஎஸ்எல்-இன் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். அவர்களின் எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்” என்றார்.