தொடர்ந்து 15 ஆண்டுகளாக உலகளாவிய முக்கிய சாதனங்களின் நம்பர்.1 பிராண்டாக இருக்கும் இந்தியாவின் ஹையர் அப்ளையன்சஸ் நிறுவனம், இந்தியாவில் நிறுவப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையானது, வாடிக்கையாளர்கள் விரும்பும் புதுமையான புராடக்ட்டுகளை வழங்குவதில் ஹையர் செலுத்தும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும், 'மேக் இன் இந்தியா' மற்றும் 'மேட் ஃபார் இந்தியா' என்ற கோட்பாட்டிற்கான அதன் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது.
விழாவைச் சிறப்பிக்கும் வகையில், ஹையர் இந்தியா நிறுவனம் ஓஎல்இடி & கியூஎல்இடி டிவிகள், சூப்பர் ஹெவி-டூட்டி ஏர் கண்டிஷனர் சீரிஸ், கினோச்சி பிளாக் ஏர் கண்டிஷனர், வோக் அண்ட் ஸ்மார்ட் கன்வெர்டிபிள் ரெஃப்ரிஜிரேட்டர்கள், வாஷர் அண்ட் ட்ரையர் ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின், கமர்ஷியல் ரெஃப்ரிஜிரேஷன் புராடக்ட்டுகள் மற்றும் கமர்ஷியல் ஏர் கண்டிஷனர்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி தனது புராடக்ட்டுகளை விரிவுபடுத்தியது.
இந்திய வீடுகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான புராடக்ட்டுகள் மூலம் நுகர்வோரின் தேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திய ஹையர் இந்தியா, ரோபோ-வேக்யூம் கிளீனர்கள், ஸ்மார்ட் கிச்சன் அப்ளையன்ஸ்கள், மைக்ரோவேவ்கள், வாட்டர் ஹீட்டர்கள் மற்றும் பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளை வெளியிட்டது.
ஹையர் இந்தியாவின் 20வது ஆண்டு நிறைவு விழா குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் ஹையர் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தலைவர் என்.எஸ்.சதீஷ், “இந்தியாவில் 20வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் எங்கள் ஹையர் இந்தியா நிறுவனத்திற்கு வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். எங்கள் வெற்றியின் ஒவ்வொரு படிநிலையிலும் முக்கியப் பங்காற்றிய எங்கள் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் நாங்கள் கொண்டிருக்கும் ஆதரவையும் ஆழமான தொடர்பையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த மைல்கல் சாதனை குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். 'அதிக உருவாக்கம், அதிக சாத்தியக்கூறுகள்' என்ற எங்கள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது ஆழ்ந்த பெருமை நிறைந்த தருணமாகும். இந்தத் திட்டமானது எங்கள் வாடிக்கையாளரின் அன்றாட வாழ்க்கையை மிகவும் திறமையானதாகவும், வசதியானதாகவும் மாற்றுவதற்கான எங்களின் தற்போதைய உறுதிப்பாட்டை ஆராய்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, தொழில்துறையில் எங்கள் நிலையை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.