பல்கலைக்கழக அளவிலான பாடங்களுக்கான சேர்க்கையை தொடங்குகிறது, சிங்கப்பூர் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம்

 


ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலைக் கழகத்திற்கு முழுக்க சொந்தமான ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக சிங்கப்பூர் வளாகமான 2024-25ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியர்களுக்குக் குறிப்பாகத் வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு சிறந்த தேர்வாக சிங்கப்பூர் விளங்குகிறது. 

2000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்பட 55 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிங்கப்பூர் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் பல்கலைக் கழக அளவிலான 24 மாதங்களுக்கான ஆறு மும்மாதங்கள் இளநிலை பட்டம் மற்றும் 12 முதல் 16 மாதங்கள் அழிவிலான மூன்று அல்லது நான்கு மும்மாதங்கள் கொண்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகிறது. இதில், கணக்கியல், வணிகம், சுற்றுச்சூழல் அறிவியல், விளையாட்டு வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்பம், உளவியல், வணிகம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மேலாண்மை, டேட்டா அறிவியல், சைபர் பாதுகாப்பு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய பாடங்கள் அடங்கும்.

சிங்கப்பூர் ஜேம்ஸ் குக் பல்கலைக் கழகமானது இரண்டு வருட இளநிலை மற்றும் 12 முதல்16 மாத முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகிறது. இதனுடன் உயர் ஆராய்ச்சி படிப்புகளான டாக்டர் ஆஃப் பிலாசபி, மாஸ்டர் ஆஃப் பிலாசபி, உயர் கல்வி பட்டங்களுக்கான வழிகளை வழங்குகிறது. இதனுடன் பல்கலைக் கழகத்தில் நுழைவதற்கான தர நிலையை உடனடியாக அடைய முடியாத மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ப்ரீ யூனிவர்சிடி படிப்புகளையும் வழங்குகிறது. 

படிப்புகள் மூன்று பருவங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவை, ஜனவரி, மே மற்றும் செப்டம்பர். விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. மே மாதம் தொடங்க உள்ள படிப்புகளுக்கான சேர்க்கை ஏப்ரல் 20ம் தேதியுடன் முடிவடையும். செப்டம்பர் மாதத்துக்கான சேர்க்கை ஆகஸ்ட் 16ம் தேதியுடன் நிறைவடையும். இந்திய மாணவர்களுக்காக 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் கல்வி உதவித் தொகை அவர்களின் கல்வி மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும்.

சேர்க்கை தொடர்பாக சிங்கப்பூர் ஜேம்ஸ் குக் பல்கலைக் கழகத்தின் டீன் இன்டர்நேஷனல் மற்றும் சீஃப் சஸ்டெய்னபிலிட்டி அதிகாரி பேராசிரியர் மே டான்-முல்லின்ஸ் கூறுகையில், "வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களின் கனவாக உள்ளது. ஆனால் போட்டி மிகுந்த உலகில் சரியான கல்வி நிறுவனத்தைக் கண்டறிந்து சேர்வது என்பது சவாலான பணியாக உள்ளது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வது மற்றும் தொடர்பை உருவாக்குதல், தகவல் தொடர்பு, தகவமைப்பு, வெளிப்பாடு, மொழி மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் உள்ளிட்ட புதிய அனுபவங்களுக்கு உங்களைத் திறப்பது, வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் வகையில் இந்த வெளிப்பாடு மிகவும் பலனளிக்கும்" என்றார்.

சிங்கப்பூர் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக வளாக டீன் பேராசிரியர் அபிஷேக் பாடி கூறுகையில், "ஜேம்ஸ் குக் பல்கலைக் கழகத்தின் அர்ப்பணிப்பு, வலுவான சர்வதேச ஈடுபாடு மற்றும் அதனுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் உலகத் தரத்திலான பயிற்சி மற்றும் உயர் தரக் கல்வி ஆகியவை இணைந்து எங்களின் சிங்கப்பூர் வளாக இலக்கை அடையவும் அதற்கு அப்பால் புவியியல் எல்லைகளைத் தாண்டியும் கொண்டு செல்ல உதவும்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form