டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தும் டிஎஸ்பி எஸ்அண்ட்பி பிஎஸ்இ லிக்விட் ரேட் ஈடிஎஃப்டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட், டிஎஸ்பி எஸ்அண்ட்பி பிஎஸ்இ லிக்விட் ரேட் ஈடிஎஃப்   திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இது எஸ் அண்ட் பி பிஎஸ் இ லிக்விட் ரேட் இன்டெக்ஸ் -ஐ பிரதிபலிக்கும்  திட்டமாகும். இந்த நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு போதுமான பணப்புழக்கம் மற்றும் குறைந்த ஆபத்து காரணிகளுடன் எளிதான நிதி மேலாண்மையை வழங்குகிறது. எந்த வருமானத்தையும் அளிக்காமல் மார்ஜின் கணக்கில் எதற்கும் உபயோகிக்காமல் பணத்தை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். மாறாக, டிஎஸ்பி பிஎள்ஆர் ஈடிஎஃப்  அலகுகளில் பணத்தை வைத்திருப்பதால் கூடுதல் வருமானத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் 1டி முதிர்ச்சியுடன் ஒரே இரவில் கருவிகளில் முதலீடு செய்கிறது. டிஎஸ்பிபிஎல்ஆர் இடிஎஃப் -க்கான புதிய நிதிச் சலுகை மார்ச் 15, 2024 அன்று சந்தாவிற்குத் திறக்கப்பட்டு, மார்ச் 20, 2024 அன்று நிறைவடையும்.

டிஎஸ்பி எஸ்அண்ட்பி பிஎஸ்இ லிக்விட் ரேட் இன்டெக்ஸ் பொதுவாக ஒரே இரவில் சந்தைகளில் குறைந்த ரிஸ்க் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால் குறைந்த நிலையற்ற வருவாய் வழங்கலைக் கொண்டுள்ளது. எதற்கும் உபயோகிக்கப்படாமல் இருக்கும் பணத்தை சிறப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் தரகர் கணக்கில் வருமானம் வராமல் இருப்பது தவிர, இந்த நிதியை வர்த்தகத்திற்கான பணத்திற்கு சமமான மார்ஜினாகப் பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 95 முதல் 100 சதவிதம் வரை குறைந்த ஆபத்துள்ள கருவிகளான ட்ரை - பார்ட்டி ரெப்போக்கள்,  அரசுப் பத்திரங்களில் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போக்கள் மற்றும் ஆர்பிஐ-ஆல் வழங்கப்படும் மற்றும் செபி-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிற ஒத்த இரவல் கருவிகளில் முதலீடு செய்யப்படும்.

டிஎஸ்பி எஸ்அண்ட்பி பிஎஸ்இ லிக்விட் ரேட் ஈடிஎஃப்ஆனது முதலீட்டாளர்களின் பணத்தை எப்போதும் செயல்பட அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இது பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் பெரிய சில்லறை வாடிக்கையாளர்களைக் கொண்ட தரகர்கள், பிஎம்எஸ் வழங்குநர்கள், எஃப் அண்ட் ஓ தரகர்கள், நேரடி பங்குகளில் முதலீடு செய்யும் எச்என்ஐ-கள் மற்றும் வர்த்தகம் செய்யும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள தயாரிப்பாக அமைகிறது” என டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்டின் பாசிவ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ப்ராடக்ட்ஸ் சிஎஃப்ஏ ஹெட் அனில் கெலானி தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form