சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்த அறிமுகமாகும் ஜாக்யாமுன்னணி தொழில்நுட்பப் பிராண்டுகளான மேனேஜ் இஞ்சின், ஜோஹோ.காம்,  ட்ரெய்னர் சென்ட்ரல், கியூஎன்டிஆர்எல் ஆகியவற்றின் தாய் நிறுவனமான ஜோஹோ இந்தியாவில் ஜாக்யா என்ற ஒரு புதிய பிராண்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ஜாக்யா ஒரு நவீன பிஓஎஸ் சாப்ட்வேர். ஜாக்யா சாப்ட்வேர் சிறிய மற்றும் நடுத்தர ரீடைல் வணிகங்கள் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளை நெறிப்படுத்த உதவுகிறது. 

ரீடைல் ஸ்டோர்கள் ஜாக்யாவை ஒரு மணி நேரத்திற்குள் செயல்படுத்தி பில்லிங் தொடங்கலாம். ஜாக்யா உடனடியாக பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. வழக்கமான திட்டம் மாதத்திற்கு ₹649-இல் தொடங்குகிறது, ஆண்டிற்கு ஒரு முறை பில் செய்யப்படும். ஜாக்யா15 நாள் இலவச சோதனைக்கும் கிடைக்கிறது.  தற்போது, நாக்பூர், புனே, ஔரங்காபாத், பந்தவ்கர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில் மற்றும் பிற இடங்களில் உள்ள 170க்கும் அதிகமான ஸ்டோர்கள் ஜாக்யாவை பயன்படுத்துகின்றன.

 முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள  ஜாக்யா, வணிகங்களுக்கு விரிவான நவீன பிஓஎஸ் சாப்ட்வேரை வழங்குகிறது. விற்பனையாளர்களுக்கான மொபைல் பில்லிங் ஆப் இதில் அடங்கும். தங்கள் மொபைல்களில் இருந்து, அதிக வர்த்தகம் செய்யும் நேரத்தில், இணையாக பில்லிங் செய்யத் தொடங்கி, நீண்ட வரிசையைக் குறைக்க இந்த ஆப் உதவும். 

ஸ்டோர் உரிமையாளர்கள் தங்கள் சொந்த ஆப்களைத் தொடங்கலாம், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் இருந்து பொருட்களை வாங்குவதற்கும், டெலிவரி செய்வதற்கும் அல்லது ஸ்டோரில் நேரடியாக பிக்-அப் செய்வதற்கும் ஏற்பாடு செய்யலாம். ஸ்டோர் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை மற்றும் சரக்கு பற்றிய அனைத்து தகவலையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடைகளில் இருந்து ஒரே இடத்தில் மைய நிர்வாகப் பணியகத்தில்  பார்க்கலாம். பரிவர்த்தனைகள், சரக்குகள் போன்றவற்றைப் பற்றிய நிகழ்நேர பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி வணிக உட்பார்வைகளைச் சேகரிக்கலாம். இதை  பல இந்திய மொழிகளில் ஜாக்யாவை பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்குவதற்காக பைன் லேப்ஸ், ரேஸர்பே, போன்பே உள்ளிட்ட பணம் செலுத்தும் கூட்டாளர்களுடன் ஜாக்யா முன்பே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஆர்டர்களை டெலிவரி செய்வதற்கு ஆஃப்டர்ஷிப் மற்றும் ஈஸிபோஸ்ட் போன்ற ஷிப்பிங் கூட்டாளர்களுடன் ஜாக்யா ஒருங்கிணைக்கப்படலாம். டுவிலியோ உடனான ஒருங்கிணைப்பு மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு SMS அறிவிப்புகளை ஸ்டோர்கள் அனுப்ப ஜாக்யா அனுமதிக்கிறது. அதே நேரத்தில் வாட்ஸ்அப் உடனான ஒருங்கிணைப்பு மூலமாக ஸ்டோர்கள் சிஸ்டத்தில் இருந்து இன்வாய்ஸ்கள், விற்பனை ஆர்டர்கள், கட்டண இரசீதுகளுக்கான செய்திகளை நேரடியாக அனுப்ப ஜாக்யா அனுமதிக்கிறது.

மேலும், இவ்வருட பிப்ரவரியில்  நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகளை ஜாக்யா அறிவித்தது. இதில் 1,040 வணிகங்கள் கலந்து கொண்டன. பிஓஎஸ் சாப்ட்வேருடைய  பயன்பாடு மற்றும் இந்திய எஸ்எம்பிகளில் அதனால் ஏற்படும் தாக்கத்தின் அளவைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  பதிலளித்தவர்களில் 39 சதவிதம் பேர் மட்டுமே தங்கள் பில்லிங் செயல்பாடுகளுக்கு பிஓஎஸ் சாப்ட்வேரைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில், பிஓஎஸ்-ஐ பயன்படுத்தாதவர்களில் 95 சதவிதம் பேர் 2029ஆம் ஆண்டிற்குள் அதை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினர். மேலும், பயன்படுத்த விரும்பும் வணிகங்களில், 75 சதவிதம் பேர் பிஓஎஸ் சாப்ட்வேர் பயன்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் எளிமையாக இருப்பது  முக்கியம் என்று கூறியுள்ளனர்.

" இந்தியாவில் தற்போது பிஓஎஸ் சாப்ட்வேர் பயன்பாடு குறைவாக இருப்பதாக ஜாக்யா ஆய்வு காட்டுகிறது. பதிலளித்தவர்களில் 61 சதவிதம் பேர் பண இரசீதுகள், ஸ்ப்ரெட்ஷீட்டுகள் போன்ற வழக்கமான செயல்பாடுகளை இன்னும் நம்பியிருக்கிறார்கள்.  இந்த இடைவெளியை வலுவான ஆன்லைன் பிஓஎஸ் சாப்ட்வேர் மூலமாக ஜாக்யா தீர்க்கிறது. அதுமட்டுமின்றி, ஜாக்யா வணிகங்கள் பயன்படுத்த மற்றும் நிர்வகிக்க எளிதாக இருக்கும்," என்று ஜாக்யாவின் தலைமை செய்தியாளர் ஜெயகோபால் தெரனிகல் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form